எனது சொந்த வீட்டை விற்க போகின்றேன்…
ஆம் நிறைய கனவுகளுடன் ஆசையாக வாங்கிய வீட்டை விற்க போகின்றேன்….
கனத்த மனதுடன்
கனத்த இதயத்துடன்
வலி நிரம்பிய வார்த்தைகளை தேடி தேடி எழுதுகிறேன்.
வேறு வழியில்லை மாதா மாதம்….. கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கிக்கொண்டு இருக்க முடியவில்லை…
வீடு வாங்கிய இரண்டு வருடத்தில் இருந்து பிரச்சனை ஆரம்பித்தது…
வீடு வாங்க மூன்று லட்சம் கொடுத்த நண்பர் அவசரமாக பணம் கேட்க அங்கே இங்கே புரட்டி வட்டிக்கு வாங்கி சொன்ன நேரத்தில் சொன்ன தேதியில் அதனை திருப்பி கொடுத்தோம்….
அப்படி அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றால் மிக மோசமாக அவமானத்தை சந்தித்து இருப்போம்..
பிளட்பாரத்தில் வாழ்ந்தவனுக்கு சென்னையில் எப்படி சொந்த வீடு சாத்தியமானது என்பது பலருக்கு கண்களை உறுத்தியது…
அந்த மூன்று லட்சத்தை சரி கட்ட வீட்டு மேல் மீண்டும் லோன் போட்டோம்…
வெளியே…. அதன் பின் தங்கை மற்றும் மச்சான் திருமணம்…சொந்த விசேஷங்கள் ஐந்து மாதம் மனைவிக்கு வேலையில்லா காலங்கள் அதனை சரிகட்ட வாங்கிய கடன்கள் என்று மொத்தம்.
எட்டு லட்சம் கடன் இருக்கின்றது….
போரூர் சொந்த வீட்டுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் காட்டிக்கொண்டு இருக்கின்றோம்… அந்த வீட்டில் இருந்து வருமானம் என்று பார்த்தால்… மாதம் பத்தாயிரம் வருகின்றது….
அதையும் மீறி 20 ஆயிரம் எக்ஸட்ரா கட்டிக்கொண்டு இருக்கின்றோம்…
மயிலை வீட்டுக்கு பதினைந்தாயிரம் மாசம் வாடகை…. போரூர் சொந்த வீட்டுக்கு லோன் மாதம் முப்பதாயிரம்… வீட்டு வாடகை மற்றும் லோனுக்கு மட்டும் 45 ஆயிரம் செலவாகின்றது… வருமானம் என்று பார்த்தால் மாதம் பத்தாயிரம்தான் வருகின்றது..
மீதம் முப்பத்தி ஐந்தாயிரம் வீட்டுக்கு செலவு செய்து கொண்டு இருக்கின்றோம்…
வீடு வாங்கி ஏழு வரும் ஆகின்றது… இதுவரை மூன்று லட்சம் கடன் அடைந்து இருக்கின்றது…
எவ்வளவோ பல்லை கடித்து பார்த்து விட்டேன்-. சுவற்றில் தலை மோதி கதறிவிட்டேன்…. வடிவேலு போல குருநாதா என்று பொதுவெளியில் கத்தும் அளவுக்கு எடுத்துக்கொண்டு வந்து விட்டது…
காரணம் மயிலை வீட்டுக்கு கடந்த மாதம் வாடகை போடவில்லை… மாதா மாதம் 20 ஆயிரம் பெரிய பூதமாக கண் முன் நிற்கிறது…
வீட்டை விற்பதை தவிர வேறு வழியில்லை…
வீட்டை விற்று
கடன்களை அடைத்து விட்டு… மீதம் இருக்கும் காசில் புறநகரில் எதாவது மண்ணை வாங்கி போடலாம் என்று இருக்கிறேன்.
மதனந்தபுரம் பொன்வித்யாசரம் பள்ளியில் இருந்து பத்து வீடு தள்ளி மேக்ஸ் ஒர்த் நகரில் சம்பந்தம் அப்பார்ட்மென்ட்டில் தரைதள வீடு… ஆயிரம் சதுரஅடி கவர்ட் கார் பார்க்…. விற்பனை விலை….55 லட்சம்… (நெகோஷியபுள்….)
தொடர்புக்கு…. 8248890359
சென்டிமென்ட் ஆள்தான்… ஆனாலும் நிம்மதி வேண்டும் அல்லவா?- எந்த விஷயத்திலும் ஈடுபடில்லை.. வலிய உற்சாகத்தை தேடிக்கொண்டு திருகின்றேன்..
எதை கொண்டு வந்தோம் என்ற கீதை வரிதான் நியாபகத்துக்கு வருகின்றது..ஒரு வருடத்துக்கு முன்னே வீட்டை விற்க வேண்டும் என்று நினைத்து தள்ளி தள்ளி போட்டு,.. இப்போது அந்த முடிவை எடுத்து விட்டேன்…
நான் வீடு வாங்க காரணமாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரும்ப ஒரு வீட்டுக்கு ஐந்து வீடு வாங்குவேன் என்ற நம்பிக்கை என்னுள் இருக்கின்றது…
நாளைய பலாக்காயை விட இப்போதைய கெலாக்காயே முக்கியம் என்பதால் இந்த வேதனையான முடிவு…
என் தோழியின் மகள் லீனா பத்தவாது படிக்கின்றாள்… அவள் பள்ளி புராஜெக்ட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் என்னிடம் பேட்டி எடுத்தாள்..
அதில் முதல் கேள்வி…
What is the biggest achievement in your life
I have owned my own house
என்ன ஒரு ஐரனி..?
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
11/07/2017
குறிப்பு….
உங்களுடைய நண்பர்களுக்கு தெரியபடுத்தி வீடு விற்க உதவிட வேண்டுகின்றேன்… கடன் சுமையில் இருந்து வெளி வந்து மிக விரைவில் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதே என்னுடைய தற்போதைய நிலைப்பாடு.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
வேதனை
ReplyDeleteஜாக்கி சார்...
ReplyDeleteஉங்கள் வலி துல்லியமாக புரிகிறது....
இதுவும் நிச்சயம் கடந்து போகும்...
//திரும்ப ஒரு வீட்டுக்கு ஐந்து வீடு வாங்குவேன் என்ற நம்பிக்கை என்னுள் இருக்கின்றது…
அது தான் ஜாக்கி..கட்டாயம் செய்வீர்கள்...
உண்மையில்...வாசகர்களாகிய நாங்கள் உங்களுக்கு நிறைய கடன் பட்டிருக்கிறோம்...
விரைவில் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
Super
ReplyDeletedont worry Jackie sir, idhuvum kadandhu poagum, u will reach more heights
ReplyDeleteJackie...!! vikaatheenga..! Panatha puratunga...!!
ReplyDeleteவித்தாச்சா? பெங்களூரில் வீடு வாங்க வாழ்த்து பல!
ReplyDelete