ஒரு குற்றவாளியால் கட்டியமைக்கப்பட்ட அரசு இது... அவருக்கு பிரச்சனை என்றால் மண் சோறு சாப்பிடவும்... அலகுகுத்தவும், தேர்தலின் போது டெம்போ டிராவலர் டயர் தொட்டு கும்பிடவும் உருவாக்கப்பட்ட கீ கொடுத்த பொம்மைகள் அவர்கள்...
அவர்களை நம்பி தியேட்டரை மூடினீர்கள் பாருங்கள்... உங்களை எல்லாம் என்ன என்று சொல்ல???
தியேட்டர்கள் இல்லை என்றால் என்ன ஆகும் ஒன்னும் ஆகாது... டிவி இருக்கின்றது... பிக் பாஸ் இருக்கின்றது... அவ்வளவுதான்... மக்கள் அடிப்படை பிரச்சனைகளில் ஒரு போதும் தியேட்டரோ அல்லது திரைப்படமோ வந்தது இல்லை...
தியேட்டர் ஆப்பரேட்டரை நண்பணாக்கி கொண்டு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு வளைய வளைய வந்தது எல்லாம் ஒரு காலம்...
இன்னைக்கு முக்காவாசி பேரு டிக்கெட்டை ஆன்லைன்லதான் புக் பண்ணறான்... இதான் இன்னைய நிலைமை....
100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் எந்த பெரியதலைவரின் மறைவும் இல்லாமல், பொதுப்பிரச்சனைக்கான கடையடைப்பு இல்லாமல் தியேட்டர்காரர்களே வேண்டி விருப்பி கெத்து காட்ட இறங்கிய ஸ்டைரைக் தற்போது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக போய் விட்டது.... வெற்றிகரமாக நான்காவது நாட்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன..மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இருக்கின்றார்கள் தியேட்டர் ஓனர்கள்...
திருவான்மியூர் எஸ் டூ எதிரிலும், காசி தியேட்டர் எதிரிலும்... போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்று வர முடிகின்றது...
இத்தனை நான் கழித்து திறக்கப்பட்ட காசி தியேட்டர் புரொஜடக்டர்கள் நான்கு நாட்களாக ரெஸ்ட் எடுக்கும் என்று அந்த 4 கே புரெஜெக்டரே நினைத்து பார்த்து இருக்காது...
கேன்டீன் பப்ஸ்கள் கலாவதியாகி விட்டன... எச்சித்தோட்டு சைக்கிள் டோக்கன் கிழப்பது நான்கு நாட்களாக இல்லை...
சத்தியமில் ஷோ முடிந்தவுடன் பெருக்கி துடைக்கும் பெண்கள் ரிலாக்சாக உட்கார்ந்து இருக்கின்றார்கள்...
பரபரப்பாய் இருக்கும் சந்தியம் தியேட்டர் பார்க்கிங் வெறிச்சோடி கிடைக்கின்றது...
ஒரு நாளைக்கு பதினைந்து கோடி வருமான இழப்பாம்....
அதனால் என்ன?
நாங்களா மூட சொன்னோம்... நீங்களே கொழுப்பு எடுத்து மூடினா நாங்க என்ன செய்யறது..??
இந்த அரசு மக்களுக்கான அரசு என்று முழக்கமிட்டு குற்றவாளியாக மறைந்து போனவரின் அரசு.... மக்கள் பிரச்சனை எதுக்கும் செவி மெடுக்காத இந்த அரசுதான் தியேட்டர் ஸ்டைரைக்குக்கு எதிர்வினையாற்ற போகின்றதா? என்ன?
ஜாக்கிசேகர்.
06/07/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ReplyDeleteஒரு குற்றவாளியால் கட்டியமைக்கப்பட்ட அரசு இது.
அற்புதம் சேகர்.