தேவிகா அத்தை...

தேவிகா அத்தை.
எதிரியே ஆனாலும் ஆழிந்து போக வேண்டும் என்று மனதளவில் கூட நினைக்காதவர். அதிர்ந்து பேசாதவர்.
காயப்படுத்தி இருந்தாலும் எதிரியிடம் இருக்கும் நல்ல குணத்தை பேசுவார். கோபமாக பேசினால் கூட அது கோபத்திற்கான பேச்சாகவே பாவிக்க முடியாது. அதுதான் தேவிகா அத்தை.

சோம்பேறிதனத்துக்கு சவால் விட்டு தீயாக வேலை செய்பவர்... பிள்ளைகளே அவர் உலகம்..அவர்களுக்கான உணவை அவரே தயாரித்து கொடுப்பதே அவரது உச்சக்கட்ட சந்தோஷம்..

காலையில் கறிக்கொழம்பும் இட்லியும் கொழுந்து இலையில் பறிமாறி சாப்பிடும் அழகை பார்த்துக்கொண்டு அதன் மூலம் சந்தோஷத்தை அனுபவிக்கும் ஜீவன். என் சொந்த பெரிமாவே தண்ணி கேட்டால் பைப்பில் அடித்துக்குடிக்க சொன்னவர்... ஆனால் தேவிகா அத்தை வீட்டில் நுழைந்து விட்டால்.. எல்லோரும் அவருடைய பிள்ளைகள்தான்....

விடியலில் பேசிக்கொண்டு இருக்கும் போது காபி வேண்டும் என்றால் கொஞ்சம் கூட சோம்பல் இல்லாமல் சின்ன பெண் போல சுறு சுறுப்பாய் எழுந்து காபி போட்டுக்கொடுக்கும் ரகம். அத்தையின் காபி கலவைக்கு நான் ரசிகன். என்னை பற்றி நான் அதிகம் அவரிம் பேசியதில்லை.. ஆனால் என்னை பற்றி அவரிடம் மிக அதிகமாக பேசி வைத்தவர் என்னுடைய வனிதா அத்தை..

தேவிகா அத்தை அது எப்படின்னா... என்று நான் சொல்ல வந்தால்... அதான் எனக்கு தெரியுமே? என்பார். காரணம் வனிதா அத்தை என்னை பற்றி அத்தனையும் இவரிடம் சொல்லி வைத்து இருப்பார்.
பணம் காசை விட மனிதர்களின் அன்பும் பிரியமும் தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தானும் புரிந்து தன் பிள்ளைகளுக்கும் புரிய வைத்து வளர்த்தவர்... ஒரு முறை அத்தை மயக்கம் அடித்து பேச்சு மூச்சில்லாமல் விழ அப்படியே குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு காரை நோக்கி ஓடியது இந்த பதிவை எழுதும் வேளையில் நினைவுக்கு வருகின்றது.

பேஸ்புக்ல எல்லாம் நல்லா எழுதிரியாமே... என் பிரண்டு சொல்லுவாங்க என்றவர் இந்த வருடம்தான் தேவிகா அத்தை பேஸ்புக்கிற்கு வந்து இருக்கின்றார்... வாழ்கையில ஒரு ரிவைன்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று முதல்வன் பட சுஜாதா டயலாக்கை நான் நினைத்து பார்க்கும் போது... தேவிகா அத்தை முகம் கண்டிப்பாய் நினைவுக்கு வரும்.
காரணம் எனது திருமணத்துக்கு அவரை அழைக்கவில்லை.. அந்த வருத்தம் எப்போதும் என்னிடத்தில் உண்டு...
சில நேரங்களில் சில விஷயங்கள் நம்மை மீறி நடந்து முடிந்து விடுகின்றது... தேவிகா அத்தைக்கு இன்று பிறந்தநாள்...இன்று போல என்றும் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழவும் இன்னும் அநேக பிரியங்களை எங்களை போன்றவர்களுக்கு எப்போதும் கொடுத்துக்கொண்டு இருக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்.


பிரியங்களுடன் ஜாக்கிசேகர்.

11/06/2017



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...


2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner