படத்தின் நிறைய குறைகள் இருக்கின்றன… அதை நான் மறுக்கவில்லை
படம் நல்லா இல்லை என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.
திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்று சொல்லுங்கள்.. கிளைமேக்சில் காஜல் வெறியேற பாட்டு பாடியதை நக்கல் விடுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்..
ஆனால் விவேகம் படத்தில் கதையில்லை என்று சொல்லாதீர்கள்.
1996 ஆம் ஆண்டு வெளியான படம் புரோக்கன் ஏரோ…
படத்தின் கதையும் விவேகம் திரைப்படத்தின் கதைதான்.
புரோக்கன் ஏரோ திரைப்படத்தின் கதை என்ன?
.
இரண்டு நண்பர்கள்… அவர்கள் அமெரிக்க ராணுவ விமானிகள்(ஜான் டிரவோல்டா) Deakins (கிரி்ஸ்டன் ஸ்லேட்டர்) Riley Hale இருவரிடத்திலும் ஒரு ரகசிய பணி ஒப்படைக்கப்படுகின்றது அதாவது இரண்டு நியுக்ளியர் வெப்பன் வேறு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்... இருவரும் நண்பர்கள்தான் அனால் அதில்மேஜர் டிக்கன்ஸ் கெட்டவன். கேப்டன் ஹேல் ரொம்ப நல்லவன்,
பணத்துக்கு ஆசைப்பட்டு இரண்டு நியுக்ளியர் வெப்பன்களை கடத்த முயற்ச்சிக்கின்றான்.. ,டிக்கெனஸ் ஹேலை கொலை செய்ய முயற்ச்சிக்க விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பிக்கின்றான்.அந்த யாருமற்ற சமவெளியில் அவனுக்கு ஒரு பார்க்ரேஜ் ஆபிசர் பெண் அவனுக்கு உதவ படம் வேகம் எடுக்கின்றது....
டிக்கென்ஸ் ஒரு மிரட்டலை அமெரிக்க அரசாங்கத்து விடுகின்றான் 14 மணிநேரத்தில் 250 மில்லியன் டாலர் வேண்டும் என்று கேட்கின்றான் அப்படி கொடுக்கவில்லை என்றால் 250 கோடி மக்கள் உயிர் இழக்க வாய்பு அதிகம் என்று மிரட்டுகின்றான்...
அமெரிக்க அரசாங்கம் டிக்கன்ஸ் விடுத்த மிரட்டலை எப்படி எதிர் கொண்டது, கடத்தப்பட்ட நியுக்கிளியர் வெப்பனை கண்டு பிடிக்க அமெரிக்க அரசு என்ன முயற்ச்சிகளை மேற்க்கொண்டது, ஹேல் எப்படி டிக்கென்ஸ்க்கு சவலாக இருந்தான் என்பதை ஆக்ஷன் கலந்த விறு விறுப்புடன் ஜெட் வேகத்தில் கதை சொல்லிக்கொண்டு போய் இருக்கின்றார்கள்....
rope-a-dope என்ற மெத்தெட் குத்து சண்டையில் வெகு பிரபலம் அதாவது இவன் இப்படித்தான் பஞ்ச் கொடுப்பான் என்று எதிராளி நினைத்துக்கொண்டு இருக்கு்ம் போது முற்றிலும் வேறு வழியில் அவனின் மூவ்கள் இருக்கும் இதுதான் படத்தின் ஒன்லைன் ஆர்டர்....டிக்கென்ஸ் போடும் திட்டங்கள் எல்லாம் ஹேல் ஸ்மெல் செய்வது ஒரு சுவாரஸ்யமான ஆட்டம்.....
அதைதான் விவேகம் படத்தில் ஜான்டிரவோல்டா ரோலை விவேக் ஒபராயும்… ஜான் சிலேட்டர் ரோலை அஜித்தும் செய்து இருப்பார்கள்.. ஒருவேளை கொஞ்சம் கொஞ்சம் நகாசு வேலை செய்து சிவா புரோகன் ஏரோவை தமிழ் மசலா தூவி விவேகமாக மாற்றி இருக்கலாம்..
ஹு நோஸ்..???
அதனால் விவேகத்தில் கதை இல்லை என்று சொல்லாதீர்கள்..
ஜான் வூ எடுத்தால் கை தட்டுகின்றோம்.. ஆனால்.. சிவா எடுத்தால் கதை என்ன என்று கேட்பீர்களா?
புரோக்கன் ஏரோவில் கதை இல்லை என்றால் விவேகத்திலும் கதை இல்லை என்றே சொல்லவேண்டும்..
#VivegamMovie
#Ajith #AjithKumar
#ThalaAjith
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
27/08/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
விவேகம் பார்க்கவில்லை பில்லா -2 மாதிரியான கதையோ ?
ReplyDelete