அவர் 1996 இல் எனக்கு பேனா நட்பினால் அறிமுகம். இப்போது வளைகுடா பக்கம் வாழ்க்கையை ஓட்டும்… நண்பர் ஆனந்தராஜ்தான் என்னிடம் விஜயை அறிமுகப்படுத்தி வைத்தார். நண்பர் ஆனந்தராஜும் எனக்கு பேனா நட்பினால்தான் அறிமுகம்.
விஜயராஜன் சென்னை என்பதால் சென்னை வாழ்க்கையின் போது… அவரை கடிதம் தவிர்த்து நேரில் சந்தித்து இருக்கின்றேன்…
ஓல்ட் வாஷர்மேன் பேட்டில் மெடிக்கல் கடை வைத்து இருந்தார்… நேரம் கிடைக்கும் போது அந்த பக்கம் செல்வேன் கடையில் உட்கார்ந்து கொஞ்சம் நேரம் பேசி விட்டு வருவேன்…
திநகர் வடபழனி என்றாலும் கூட அடிக்க சந்தித்துக்கொள்ளலாம்.. இவர் சென்னையின் பழைய நகர வாசம் என்பதாலும் எனக்கு அந்த பக்கம் வேலை இல்லை என்பதாலும் அந்த பக்கம் அதிகம் செல்வதில்லை.. எப்போதாவது செல்வேன்…
இந்த கதை நடந்தது 1996 களில்…
சாப்பாட்டுக்கு சென்னையில் ஜிங்கி அடித்துக்கொண்டு இருந்த சிறப்பான காலகட்டம் அது..
சத்தியம் தேவி தியேட்டரில் 6,50 டிக்கெட்டுக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னே சென்று கால் கடுக்க டிக்கெட் வாங்க காத்திருந்த காலகட்டம்…
சென்னையில் இப்போது போல அப்போது நண்பர்கள் என்று எனக்கு யாரும் இல்லை.. என் சோகத்தை சொல்லி அழக்கூட ஆள் இல்லாத காலம் அது..
அந்த நேரத்தில் உடம்பு சரியில்லை என்றால் கூட அதை சரிபடுத்திக்கொள்ள பணம் இல்லை..
அப்படியான காலகட்டத்தில் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது…
என் கண்பார்த்து அதில் உள்ள தவிப்பை பார்த்து..…. என்னன்னு சொல்லுங்க ஜாக்கி.. எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க என்றார் விஜய்..
இல்லை ஒரு 200 ரூபாய் பணம் வேண்டும் என்று தயங்கினேன்.. சட்டென டிராயரில் இருந்து 200 எடுத்துக்கொடுத்தார்..
அந்த பணத்தை ஒரு மூன்று மாதத்தில் கொடுத்து விட வேண்டும் வைராக்கியத்துடன் வாங்கினேன். ஆனால் என் வைராக்கியத்தையும் நேர்மையையும் உடைத்து விளையாடுவதில் காலத்திற்கு அலாதியான பிரியம் உண்டு..
அந்த பக்கம் போகும் போது காசு இருக்காது… அப்படி ஒரு டிசைன். அதன் பின் என் திருமணம் போராட்டம் என வாழ்க்கை ஒரு வழியாக கடந்து போனது… விஜய்யுடன் போனில் எப்போதாவது பேச்சு என்று போகும்.. அவர் மெடிக்கல் கடையில் இருந்து வக்கிலாக உருமாறினார். திருமணமாகி ஒரு பெண்குழந்தை…
அதன் பின் டச்சில்லை..
எனக்கு திருமணம் ஆகி விட்டது…
ஒரு நாள் மாலை என் மனைவியிடம் ஏதாவது வேலை இன்னைக்கு இருக்கா என்று கேட்டேன் இல்லை என்றார்…
மாலை வளசரவாக்கத்தில் இருந்து பழைய வண்ணாரபேட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் பயணித்து விஜய் மெடிக்கல்ஸ் சென்றோம்…
விஜய் வழக்கம் போல அன்பாய் வரவேற்றார்.
என்ன இந்த பக்கம் என்றார்..இல்லை பதினைந்து வருசத்துக்கு முன்ன சீக்கரம் கொடுத்தடறேன்னு பணம் வாங்கினேன்.. அன்னைய சூழலில் அது முடியலை…
இந்தாங்க என் அவசரத்துக்கு நீங்க கொடுத்த 200 ரூபாய் என்று கொடுத்தேன்… ஏங்க இன்னாங்க காமெடி பண்ணாதிங்க என்றார்…
நினைப்பு இருக்கு ஆனா நான் மறந்தே போயிட்டேன்… என்றார்… முதலில் வாங்க மறுத்தார்.
நான் சொன்னேன் என்னை பத்தி உங்களுக்கு தெரியும் இல்லை.. வாங்கிக்கோங்க என்றேன்..
200 ரூபாயை விஜய் வாங்கி கொண்டார்…
அது அவரே மறந்து போன விஷயம்தான்… ஆனால் நான் மறக்கவேயில்லை.. அவரை பற்றி நினைக்கும் போது எல்லாம் அந்த பதினைந்து வருடத்தில் அந்த 200 ரூபாயும் மனக்கண்ணில் வந்து செல்லும்…
அந்த பணத்தை கொடுத்த அன்று ஒரு நிறைவு…
அப்புறம் முக்கியமான விஷயம்… இப்ப விஜய்யோட பெரிய அளவுக்கு டச் இல்லை.. எப்பயாவது பேஸ்புக்குல கமென்ட் போடுவார்..
அவ்வளவுதான்…
பட் பழைய வண்ணாரபேட்டை என்றாலோ..?
மெடிக்கல்ஸ் போய் மருந்து வாங்கினாலோ?
யாரிடமாவது தயங்கி கடன் வாங்கினாலோ..
என் நிலைமை புரிந்து சட்டென என்னை தவிக்க விடாமல் உடனே பணம் எடுத்து கொடுத்தாலோ விஜய் எனக்கு நினைவுக்கு வருவார்.
காரணம் நான் முதன் முதலில் தயக்கத்தோடு சென்னையில் நான் வாங்கிய முதல் கடன் 200 ரூபாய் அவரிடம்தான்..
அவருக்கு இன்று பிறந்தநாள்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜயராஜன்…
வாழ்க்கை ஓட்டத்தில் நாம் தற்போது அதிகம் பேசிக்கொள்ளாமல் கடந்து போகலாம்.. ஆனால் என் வாழ்வின் சிலமுக்கிய தருணத்தில் உங்கள் கடையில் உட்கார்ந்து நான் மனது விட்டு பேசி சில மணி நேர பேச்சுகள் என்றும் என் நினைவுகளில்…
நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல பரம்பொருளை இந்த நல்ல நாளில் வேண்டிக்கொள்கிறேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
22/05/2017
Vijayarajan V Adv
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment