கல்லூரி காலத்தில் இருந்தே எனக்கு அவர்கள் இருவரையும் தெரியும்…
அவனை எனக்கு நன்கு தெரியும் … என் மீது நிரம்ப மதிப்பு கொண்டவன்.. நிறைய பேசி இருக்கின்றோம்… என் ஆசிகள் அவனுக்கு ரொம்ப முக்கியம்… என் கருத்து அவனுக்கு ரொம்பவே முக்கியம்…. அவளை எனக்கு அந்த அளவுக்கு தெரியாது என்றாலும் முகநூலில் பழக்கம்…. சில பல வீடியோ விமர்சனங்களுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கின்றாள்…
ஒரு சுபயோக சுப தினத்தில் அவர்கள் இருவரையும் சத்தியம் தியேட்டரில் ஒரு காலைகாட்சியில் மெல்லிய வெளிச்சத்தில் இரண்டு பேரையும் பார்த்தேன்…
இரண்டு பேருமே என்னை பார்த்து விட்டார்கள்… நானும் அவர்களை பார்த்தேன்.. அவர்களிடம் மெல்லிய பதட்டம் ... அந்த பதட்டத்தை நான் அறிவேன்… அதனால் ஏதும் பேசாமல் நான் அவர்களை கடந்து விட்டேன்… ஆனால் அவன் என்னிடத்தில் வந்து பேசினான்… என்னை பொருத்தவரை தியேட்டருக்கு படம் பார்க்க வரும் தைரியம் மிக்கவர்கள்… ஒரு வேளை படத்துக்கு தெரிந்தவர்கள் வந்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்… ரெண்டு பேருமே இயல்பாய் பேசி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
இரண்டு பேரும் காதலிக்கின்றார்கள்… என்பது தெரிந்துவிட்டது.. அதில் எனக்கு என்ன பிரச்ச வந்துவிடப்போகின்றது.. வாழ்த்துவதை விட… தியேட்டர் சம்பவத்துக்கு பிறகு அவன் இன்னமும் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கின்றேன்..
ஆனால் நான் ஒரு விஷயம் செய்தேன்.. என்னை பார்த்ததும் மூஞ்சை திருப்பிக்கொண்ட அந்த பெண்ணை நான் பிரண்ட் லிஸ்ட்டில் இருந்து அன்பிரன்ட் செய்தேன்… நேரில் பார்த்து முகம் திருப்பிக்கொள்ளுபவர்கள் நட்பு பட்டியலில் ஏன் இருக்க வேண்டும் என்ற அடிப்படை கேள்விதான்.
முகம் திருப்பிக்கொண்டு செல்பவர்களை ஒரு போதும் நான் மதித்தது இல்லை.. அதன் பின் இரண்டு மூன்று முறை அந்த பெண்ணை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருந்தாலும் பெரிதாய் நான் கண்டுக்கொள்ளவில்லை.
சில தினங்களுக்கு முன் அதே சத்தியம் தியேட்டரின் லாபியில் வெயிட் செய்துக்கொண்டு இருந்தேன்.. என் எதிரில் அந்த பெண்…
நான் மொபைல் போனை நோண்டிக்கொண்டு இருந்தேன்.. கொஞ்சம் நேரத்தில் அவன் வந்தான் அவளிடம் அவன் பேசிக்கொண்டு இருந்தான்.. நான் எதிரில் இருப்பதை அவனிடத்தில் அவள் சொல்லி இருக்க வேண்டும்… எதெச்சையாக பார்ப்பது போல நான் இருப்பதை கவனித்து அவனும் அவளும் அந்த இடம் விட்டு நகர்ந்து வேறு இடம் சென்றார்கள்..
நான் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ரசித்தபடி இருக்கின்றேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
03/10/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment