Arjun Reddy 2017 | அர்ஜுன் ரெட்டி தவறவிடக்கூடாத தெலுங்கு திரைப்படம்.மீண்டும் விமர்சனம் எழுத வந்து இருக்கேன்… வாழ்த்துங்க பிரண்ட்ஸ்…
ரொம்ப நாள் எழுதனும்னு நினைச்சி தள்ளி போய்கிட்டே இருந்துச்சி.. அர்ஜுன் ரெட்டி  எழுத  வச்சிடுச்சி…

அர்ஜூன் ரெட்டி தவறவிடக்கூடாத  தெலுங்கு திரைப்படம்…ஹீரோ படுத்து இருக்கான்… டாப் ஆங்கிள்ள கேமரா இருக்கு… அவன்  பேன்ட் அப்படியே தந்துகிக்கவர்ச்சி  போல ஈரம் பரவுது…  அவன்  தூக்கத்துல பயத்துல வருத்ததுல குழப்பத்துல முழு போதையில அவனுக்கு  அவனை அறியாமல்  இருக்கும்  போதே பேண்டுல உச்சா போயிடுறான்….

அப்பதான் அர்ஜுன் ரெட்டின்னு இங்கிலஷ் டைட்டில் வருது…    அதுல போதையும் மார்பின் போன்ற அதீத போதை திரவங்கள்  அந்த சிவப்பு ரத்ததில் அதில் கலக்குது… இண்டர்வெல்பிளாக்..

 எனக்கு தெரிஞ்சி இன்டர்வெல் பிளாக்ல  படத்தோட டைட்டிலை குறியீடோட போட்டதும்  ஹீரோ பேன்ட்ல ஒன்னுக்கு போயிக்கறது போல காட்றதும்  என்னை ரொம்பவே இம்பரஸ் பண்ணிச்சி..  காக்கா முட்டை படத்துல இது  போல  ஷாட் பர்ஸ்ட் ஷாட்டாக இருந்தாலும் ஒரு ஹீரோ இப்படி நடிக்க ஒத்துக்கிட்டது பெரிய விஷயம்.

 இன்னும் முத ஷாட்டு செம..  

சில நேரத்துல நமக்கு  காலையில காமம் பொங்கி வழியும்.. ஏன் எதற்கு என்று எல்லாம்  தெரியாது… ஆண் உறுப்பு விரைத்து இருக்கும் திருமணம் ஆனவன் என்றால் உடனே  தீர்வு… இல்லையென்றால்  மொபைலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு போய் தீர்வை நோக்கி  வேர்க்க விறு விறுக்க செய்ய வேண்டியதுதான்.. ச்சை செல்ல வேண்டியதுதான்…

ஹீரோ காலையில்  எழுந்து இருக்கின்றான்.. பக்கத்தில்   இருக்கும் சரக்கு பாட்டிலில் பாதி  இருக்கின்றது..  அதனை அப்படியே எடுத்து  பக்கத்தில் இருக்கும் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் முக்கி   தண்ணீரை ரொம்பி ஊறுகாயை  கூட  நக்கிக்கொள்ளாமல்  அப்படியே குடிக்கின்றான்..  உடை மாற்றி   எப்போதோ கடலை போட்டு  தேத்தி வைத்த பிகர் வீட்டுக்கு செல்கின்றான்…

சமையல் கட்டில் அவள்.. அவனை  பார்ததும் முகம் மலர்கின்றாள்…  அப்படியே  கட்டி அணைத்து   அவளை  அலேக்காக தூக்கி  சமையல் தின்டில் உட்கார வைக்கிறான்…  அப்போது மேட்டர் செய்யும் போது எரிச்சல் ஏற்படுத்தும் என்று நினைத்த பொருட்களை அப்படியே கீழே தள்ளுகின்றான்..  பிங்கான் தட்டுகள்  உடைந்து சிதறுகின்றன..


 அவள்   காலை அகற்றுகின்றான்.. அவள் சொல்லுகின்றாள்.. முதல் தடவை என்பதால்  கொஞ்சம் பொறுமை என்கின்றாள்,.. அவளும்  அவனும் மேலே உள்ள உடைகள்  களையும்  போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்கின்றது… அவள் சொல்கின்றாள்.. என் கணவன் வந்து விட்டான்.. நீ  கிளம்பு… என்கின்றாள்… எனக்கு  இப்போது புணர வேண்டும்… நீ வேண்டும்..  என்கின்றான்…கரன்ட் போய் விடுகின்றது.. பாடல்  ஒலிக்கவில்லை…  அவளுக்கு சட்டென்று பயம் வியாபிக்கின்றது…  ஆனால் விரைத்த சமாச்சாரத்துக்கு தீர்வு இல்லாமல்  தான்  செல்ல  போவதில்லை என்று  அவளை கத்தி காட்டி  அவளது காலை விரிக்க சொல்கின்றான்.. அவள் பயத்தில் வெளிறிபோகின்றாள்… கரன்ட் வருகின்றது-.  பாடல் ஒலிக்கின்றது… சட்டென தன் நிலை உணர்ந்து..  கத்தியை கீழே போட்டு  சட்டையே தோளில் போட்டுக்கொண்டு அப்படியே  போனை எடுத்துக்கொண்டு   கதவை திறக்கின்றாள்.. அந்த வீட்டு பெண்ணின் கணவன்  உள்ளே ஓடிய பாடலை ஹம் செய்துக்கொண்டு  இருக்க தன் வீட்டில் இருந்து  ஒருவன் சட்டை இல்லாமல் நடந்து எந்த பயமும் இல்லாமல் அலட்சியமாக செல்வதை பார்த்து வெளிறிப்போய்  நிற்கின்றான்…

 அங்கே இருந்து போன் செய்கின்றான்.. யாருக்கு தெரியுமா? அவன் உயிர் நண்பனுக்கு மச்சான்  நான் இப்பயே யாரையாவது போடனும் குட்டி  ஏதாவது இருக்கா..??? என்கின்றாள்..  முயற்சியில் தோல்வி..
  என்னசெய்வதென்று  தெரியவில்லை..  விரைத்த  சமாச்சாரத்துக்கு தீர்வு இல்லை…  நடு ரோட்டில் வேறு என்னதான்  செய்வது… பக்கத்தில் இருக்கும் கரும்பு ஜூஸ் கடையில் ஐஸ் கட்டி பாக்சில் கையை விடுகின்றான்.. கை  நிறைய ஐஸ் எடுத்து தனது  பேண்ட் உள்ளே கை நுழைத்து  ஜட்டி உள்ளே  ஐஸ் கட்டிகளை போட்டுக்கொண்டு  சட்டையை மாட்டிக்கொண்டு நடக்கின்றான்….

 பேண்ட் புல்லும் ஈரம் அவனுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.. ஒரு மருத்துவமனைக்கு செல்கின்றான்..  அப்போதுதான் அவன் டாக்டர் அதுவும் ஆர்த்தோ சர்ஜன் என்பது படம் பார்க்கும் நமக்கு புரிகின்றது.
 ஐஸ் கட்டியால்  ஈரமான பேட்டை மாற்றி ஆப்பரேஷனுக்கு செல்ல வேண்டும்… ஒரு கட்டிங் பெக் அவனுக்கு ஊற்றி வைக்கப்படுகின்றது.. பேன்ட் அவிழ்க்க  ஜிப்பில் கை வைத்து அவிழ்க்க போவதை  குறு குறு என பார்த்த  செவிலி பெண்ணை பார்த்து  அவள் எதிரில் ஜிப்பை அவிழ்த்து  காட்ட போவதாக   பயமுறுத்த … அவள் தலை தெரிக்க ஓடுகின்றாள்…  ஊற்றி வைத்த ஒரு பெக்கை வாயில் சரித்துக்கொண்டு  ஆப்பரேஷன் தியேட்டருக்கு செல்கின்றான்.. ஒரு முஸ்லிம் பெரியவருக்கு  ஆப்பரேஷன் செய்கிறான்…
  ஆப்பரேஷன் தியேட்டருக்கு   வெளியே கிளவுஸ் எல்லாம் ரத்தமாக  உட்கார பெண் உதவியாளர்  அவன்  உதட்டுக்கு சிகரேட் ஒன்றை  கொடுத்து பத்த வைக்கின்றார். அவன் புகை  இழுத்து சகஜமாக பேச அந்த பெண் கண்ணும் கருத்துமாக அவன் சிகரேட் பிடிக்க  உதவி செய்கின்றார்..
ஒரு டாக்டர் அதுவும் ஒரு ஆர்த்தோ செபஷலிஸ்ட்… ஆனால்   எப்படி இப்படி மாறி போனான் என்பதுதான் அர்ஜூன் ரெட்டி  தெலுங்கு திரைப்படத்தின் கதை..?

  அர்ஜூன் ரெட்டி  அப்பர் கிளாஸ் பையன்…  தோட்டம் தோரவோட பங்களா டைப்பில் வாழும் பையன்…  பாசமான அப்பா அம்மா.. அதுவும் அப்பா புரிதல் உள்ள அப்பா.. ஒரே ஒரு அண்ணா…

 மெடிக்கல் காலேஜில் படிக்கறான்.. கோவம் மூக்கு  மேல  அதனால   நிறைய பிரச்சனைகள்…

  மெடிக்கல் காலேஜ்ல ஜுனியர் பொண்ணை பார்த்த உடனே புடிச்சிடுது.. லவ்  பண்ணறான் முதல்ல அவளை அவனுக்கு பிடிக்கலை..  அதுக்கு அப்புறம் அவனை  அவளுக்கு புடிச்சிடுது.

ஜாதி பிரச்சனை கல்யாணம் நடக்கும்  நினைக்கும் போது அது நடக்கலை அர்ஜூன் ரெட்டி வாழ்க்கை தடம் மாறுது..  போதை அவனை முழுசா முழுங்குது.. அவன் அதுல இருந்து வெளிய  வந்தானா? அவன்  எதிர்காலம் எப்படி இருந்தது என்பதுதான் மீதிக்கதை..

 தேவதாஸ் டைப் கதைதான்…  அனுராக் கஷ்யாப்போட தேவ் தி இப்படியான திரைப்படம்தான்.. பட் என்னை பொருத்தவரை தி பெஸ்ட் அர்ஜுன் ரெட்டிதான்.

 தெகிலான வயிறும் குழைவான   இடுப்புமே   சாமுத்ரிக்கா லட்சனம் எனும் கூற்றை  உடைத்து கன்னங்கள் உப்பலாக சின்ன தொப்பையோடு குவித்த  சின்ன உதட்டோடு ஷாலினி பான்டே என்று சுமாரான பொண்ணை அறிமுகப்படுத்தி இருக்கின்றார் இயக்குனர்..  ஆனால் படம்  முடியும்  போது அவள் பேரழகியாக மாறி நமது மனதில் குடியேறுகின்றார் பாருங்கள் அதுதான் சினிமா மேஜிக்…

 அதுவும்  முதல் பார்வையில்   ஷாலினி பாண்டே நடந்து வந்து டீ எடுக்க  வரும் போது புகையும்  அந்த சிகரேட்டும் அவன் பார்ர்வையும் அவள் பார்வையும் ஆயிரம் கதைகள் சொல்லும்  கவிதையான காட்சி….
ஒரு பெண்ணை நீங்கள்  விரும்பினாலும் அவள்  உங்களை விரும்பினாலும அந்த பெண்ணே   உன் ஸ்பரிசம் எனக்கு தேவையாய் இருக்கின்றது என்று   உங்களை உரிமையாய் சுவீகரிக்கும்  அந்த கணத்துக்கு பெயர்தான் ஆண்மைதனம்…

 அவனுக்கு அவளை பிடிக்கும்  ஒரே மெடிக்கல் காலேஜ் அவன் சீனியர்..  அவளுக்கு  அனாடமி வகுப்புகள் எடுப்பான்.  ஒரு நாளும்  தப்பாக பார்க்கமாட்டான்.. தவறாக தொடமாட்டான்.. இத்தனைக்கு அவள் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம்… அந்த கண்ணியம் அந்த பாதுகாப்பு எதையும் கொடுக்கலாம் என்று ஷாலினியை கொடுக்க வைக்கும் காட்சிகள் கவிதை.,
ஆறு மணி நேர டைம்… அவன் செய்த பெரிய தவறு அதுதான்… ஆனாலும் வீட்டுக்கு வெளியே ஷாலினி அவனிடம் கெஞ்சி கெஞ்சி மன்றாடும் காட்சி இருக்கின்றதே.. ரசிகர்கள் ஷாலினி  பாண்டேவை கொண்டாட அந்த காட்சியே  போதுமானது என்ன ஒரு காதல் எப்படியும் தன் வாழ்வில் அர்ஜூன் தவிர்த்து யாரோடும் தன்னால் டிராவல் ஆக முடியாது என்ற பயம்… அந்த தவிப்பு  கண் உடல் மொழி இரைஞ்சுதல் என கலந்துக்கட்டி அடிக்கின்றார்..

 ஒரு திரைப்படத்தில் வரும் காமமும் காதலையும் பார்வையாளனுக்கு கடத்தி விட்டாலே… அந்த திரைப்படம் 100 சதவிகிதம் வெற்றி.. இந்த திரைப்படம் பார்வையாளனுக்கு   திரையில்  வந்த காதலையும் காமத்தையும் கடத்துகின்றது..

 சொம்மாவா.. 18 லிப்லாக் சீன் வருவதாக  பொழுது போகாத பொம்மு  ஒருவர் சொல்லி இருக்கின்றார்..

ஏ சர்ட்டிபிகெட்தானே கொடுப்பே பிரச்சனை இல்லை கொடு என்று கேட்டு தைரியமாக படத்தை எடுத்து இருக்கின்றார். இப்படியான திரைப்படங்கள் தமிழிலும் வர வேண்டும் என்பதே எனது ஆசை..
 அவள் என் காதலி அவளுக்கு   கல்யாணம் ஆயிடுச்சி.. குழந்தை வயித்துல இருக்கா…? இருந்துட்டு போவட்டும்..    அதுவும் என் பிள்ளைதான் என்று தனது நண்பர்களிடம் சொல்லும் இடத்தில்  அர்ஜூன் கேரக்டரை கொண்டாட தொன்றுகின்றது.

 அதை விட நண்பர்கள்…  நல்ல நண்பர்கள் வாய்ப்பது  வரம்…  அர்ஜுனுக்கு நல்ல  டாக்டர் நண்பர்கள் இருப்பார்கள்.. அதை விட   மார்பினை போட்டுக்கொண்டு பரலோகம் போனவனை  காப்பாற்றி விட்டு சீனியர் வகுப்பு தோழனை நான் ரொம்பவே ரசித்தேன்…


 கடைசி பத்து நிமிடம் உங்களை இந்த திரைப்படம்  கலங்க வைக்கும்… அப்படி கலங்கவில்லை என்றால்  உங்களுக்கு இதயம் மறுத்து போய்விட்டது என்று அர்த்தம். அர்ஜனாக விஜய் தேவரகொண்டா அசத்தி இருக்கின்றார்..  பெல்லி சுப்புலு பாருங்கள் அசந்து போய் விடுவீர்கள்.

 படத்தோட டிரைலர்
 மெடிக்கல் காலேஜ் அதில் உள்ள நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையில் போதை அது ஏற்படுத்தும் தாக்கம் என்று மிக இயல்பான ஒரு மருத்துவகல்லூரி  மாணவனோடு பயணித்த  ஒரு   நிறைவை இந்த திரைப்டம் வழங்குகின்றது..
சில மாணவர்கள் செமஸ்ட்டருக்கு கஞ்சா அடித்து விட்டு எல்லாம் படிப்பார்களலாம்…

 நிறைய எழுதலாம் உங்கள் ரசனையை நான் குறைக்கவிரும்பவில்லை..
ராதனின் இசை இந்த படத்துக்கு பெரிய பலம்…  சான்சே இல்லை.. அதே போல ராஜு தோட்டாவின் ஒளிப்பதிவு லைவ்லிநஸ் படத்துக்கு பெரிய பலம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்..

 படக்குழுவினர் விபரம்.

Directed by Sandeep Vanga
Produced by Pranay Vanga
Written by Sandeep Vanga
Starring Vijay Deverakonda
Shalini Pandey
Music by Radhan
Cinematography Raju Thota
Edited by Shashank
Production
company
Bhadrakali Pictures
Release date
August 25, 2017[1]
Running time
187 minutes
Country India

 அனுக்க குண்டோ  ஒக்க ரோஜுன்னு  ஒரு தெலுங்கு  படம்.. அந்த படத்துக்கு அப்பறம் நான் அசந்து பார்த்த தெலுங்கு திரைப்படம்  இந்த அர்ஜுன் ரெட்டி.
இந்த திரைப்படம் எனது தம்பி  டாக்டர் அலைகள் பாலாவுக்கு இந்த  பதிவு சமர்பணம்…

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

2 comments:

  1. என்னோட பையன் மெடிக்கல் காலேஜ்-ல செகண்ட் இயர் படிக்கிறான். நான் முதல்ல பார்த்துட்டு அவன பார்க்கச் சொல்கிறேன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner