சத்யம் தியேட்டர் நிர்வாகம் நல்லா இருங்கடே…




#சத்யம் தியேட்டர் நிர்வாகம் நல்லா இருங்கடே…

நல்ல  விஷயத்தை யார் செஞ்சாலும் அதை பாராட்டும் பழக்கம் என்னிடத்தில் உண்டு… அது நமக்கு புடிக்காத பேமானி எவனாவது தப்பி தவறி ஒரு நல்ல விஷயத்தை   செய்யறான்னு வச்சிக்கோங்க… அதுல பெரிசா  ஈகோ பார்க்காம  அதை பாராட்டுறது என் வழமை.




சென்னை ஜெமினி மேம்பாலத்துல சென்னை வாசிகள் எல்லோரும் பயணிச்சி இருப்பிங்க.. ஆறு அல்லாத ஆதாவது நீர்நிலைகள் மீது பயணிக்கதான் பாலம்… ஆனால்   போக்குவரத்திற்காக தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் பாலம் ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம்தான்  என்பதும் அதை கலைஞர் ஆட்சிகாலத்தில் அந்த காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்ட சாதனை என்பதும் வரலாறு தெரிந்வர்கள் அறிந்து இருப்பார்கள்.


அந்த மேம்பாலத்துக்கு அருகில்தான் அமெரிக்க தூதரகம் அமைந்து இருக்கு…அதை பாதுகாக்க…. பாலத்துக்கு மேல மூன்று காவலர்கள் இரவு பகலாக  பணியில் இருக்கின்றார்கள்… இரவு பணி  பிரச்சனை இல்லை.. ஆனால்  பகலில் அதுவும் கத்திரி வெயிலில் பல லட்சக்கணக்காக வாகனங்கள் கார்பன்டை ஆக்சைடை துப்பி விட்டு  செல்லும் அந்த இடத்தில் பணி புரிவது என்பது கொடுமையான விஷயம்.

தலைக்கு  மேல் கடமைக்கு ஒரு சின்ன ஷீட் கடமைக்கு  போட்டு இருப்பார்கள்.. அவர்கள்   மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் வேண்டுமானால்  அந்த சின்ன ஷீட் பயண்தரும் மற்றபடி  காலை வெயில் மாலை வெயில் அவர்கள் மேல் அகுதினமும்  அபிஷேக ஆராதனை நடத்தும்.

 அதுவும் 2017  கத்திரி வெயிலில்  நா முத்துக்குமாரின் மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகு.. என்று பாடினால் ங்கோத்தா அப்படியே திரும்பி பார்க்கமா ஒடிடு என்று அந்த  காவலர்கள்  சொல்லுவார்கள்..
  இத்தனைக்கும் அவர்கள்  உட்கார கூட அந்த இடத்தில்  இருக்கை இல்லை..


கொஞ்சம் வெளியே போய் விட்டு வந்தால் கூட சட்டையை பேன்டையை அவிழ்த்து விட்டு   ஏசியை ஆன்  செய்து ..  வின்னர் படத்தில் வடிவேலு  காலை விரித்து  தூங்குவது என்னா சுகம்  என்பது போல காலை ஏசிக்கு எதிரே விரித்து வைத்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது.. அந்த அளவுக்கு கோடை வெப்பம் வாட்டுகின்றது..

உட்கார கூட முடியாமல் வெயிலில் வேலை செய்யும் அத்தனை பேருமே பாவம்தான் .. முக்கியமாக  சென்னை போக்குவரத்து காவலர்கள்..
சரி டாபிக் மாறுது இல்லையா?

சத்யம் தியேட்டர் பாடாவதி பப்ஸ் பற்றி நான் எழுதிய பதிவை நிறைய  பேர் வாசித்து விட்டு ஷேர் செய்து இருந்தார்கள்… கமென்டில் போய் பார்த்தால் என்னை போல நிறைய பேர் பாதித்து இருந்ததை உணர முடிந்தது.

 சரி விஷயத்துக்கு வரேன்….


 சத்யம் தியேட்ட பார்க்கிங் எல்லாருக்கும் தெரிஞ்ச  விஷயம்…
மொட்டை வெயிலில் அனைத்து வாகனங்களும் நிற்கும்..

  இந்த வெயிலில்  பைக் நிறுத்தி படம் பார்த்து விட்டு பைக்கின் மேல் உட்கார்ந்தால்  சூத்து பழுத்து விடும்…


காரை நிறுத்தி அதன் உள்ளே உட்கார்ந்தால் ஓவன் உள்ளே உட்கார்ந்த பீலை கொடுக்கும். அப்படியான  பார்க்கிங் சத்யமின் வெட்டவெளி பார்க்கிங்.

அப்படியான  வெட்ட வெளியில் பைக்  டோக்கன் போடும் ஆண்களையும் பெண்களையும் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்… நமக்கு  படம் பார்க்க போகும் போது டோக்கன் போடும் வரைதான் வெயில் தியேட்டர் உள்ளே போய் விட்டால் குளுகுளு ஏசி. ஆனால் இவர்கள் கத்திரி வெயிலில் கசகசப்போடு வேர்வை மழையில் நனைந்தபடி டோக்கன் போட வேண்டும்.


சத்யம் தியேட்டர் நிர்வாகம் இவர்களுக்கு ஈரபதத்தை அள்ளி வீசியபடி இரண்டு  பெரிய மின் விசிறிகளை இவர்களுக்கு வைத்து இருக்கின்றார்கள்.. வெயிலில் வேலை பார்க்க வேண்டும் ஒதுங்க வேறு இடம் இல்லை…  என்று சொன்னாலும் வேலை பார்க்க நிறைய பேர்  தயாராகத்தான் இருக்கின்றார்கள். ஆனாலும் இந்த  மின்விசிறிகளை வைத்த சத்யம் நிர்வாகத்துக்கு பாராட்டுகள்.


சென்னை சாலையில் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்ப்பட்டால்  மேன் ஹோலை திறந்த உடன் அதை பார்த்து இருக்கின்றீர்களா?
மேலே மிதக்கும் மலங்களை  கையால் நகர்த்தி அதனை ஒரு சேர அள்ளி பக்கத்தில் குவித்து விட்டு, மூக்கை பிடித்துக்கொண்டு மேன் ஹோல் வழியாக கழிவு நீர் குழாயில் இறங்கி வயிற்று பிழைப்புக்கு வேலைசெய்பவர்கள் இன்றளவும் இருக்கத்தான்  செய்கின்றார்கள்…

சோ இந்த  வேலை இப்படித்தான் என்று சொல்லி  சத்யம் நிர்வாகம் வேலைக்கு  ஆட்களை எடுத்து சம்பளம் கொடுத்தால் அவனும் நமக்கு அடிமைதானே என்ற மனோபாவத்துடன்   அண்ணா பிளை ஓவர் மேல் மனிதாபிமானம் இல்லாமல்  மொட்டை வெயிலில் நின்ற படி காவல் காக்கு காவலர்கள்  போல  சத்யம் தியேட்டரில் டோக்கன்  கொடுப்பவர்களை நடத்தினால்  பெரிதாய் இங்கு யாரும் கேட்கப்போவதில்லை…

ஆனால் தன் ஊழியர்களுக்கு கடுமையான வெப்பத்தின்  போது அவர்களை மனிதான பாவித்து மனிதாபிமானத்துடன்   மின் விசிறி வைத்த விஷயம்.. நிச்சயம் போற்றதக்கது..


காரணம்.. சின்ன சின்ன விஷயங்களை மனம் திறந்து வெளிப்படையாக பாராட்டும் போதுதான். மேலும் மேலும்  இன்னும் நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை…


என்னிடம் சம்பளம் வாங்குபவர்கள் என் அடிமைகள்.. அவர்களுக்குதான் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுக்கின்றேனே என்று   நினைக்காமல் சக ஊழியனை மனிதானாக பாவிக்கும் நிறுவனங்கள் இது போன்ற தன் ஊழியர்களுக்கு கொடை வெப்பத்தை தவிர்க்க  செய்த சேவையினை இங்கே பகிருங்கள்.

#chennai #chennaisatyamtheater #satyam #sathyam #sathyamtheater #chennaisathyam #spicinemas  #sathyamcinemas  #சென்னை # சத்தியம்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
05/06/2017





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner