#சத்யம் தியேட்டர் பாடாவதி பப்ஸ் #satyam #chennaisatyam #satyamtheater
#சத்யம் தியேட்டர் போய் இருப்பிங்க…
அங்க ஒரு பப்ஸ் விப்பானுங்க…
வெஜ் பப்ஸ் 50 ரூபாய் சிக்கன் பப்ஸ் 80 ரூபாய்.. எங்க ஊர் ஆளுங்களை தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு போனா… ஏய் யப்பா… என்னடா இது… ங்கோத்தா.. கோமனத்தையே உருவி இல்லை மொய் வைக்கனும் போலியே என்று அங்கலாய்ப்பார்கள்…
விஷயம் ரேட் பற்றியதல்ல..
இந்த பப்ஸ் என்னால சிந்தாம சாப்பிடவே முடியாது.. எப்படி சாப்பிட்டாலும் சட்டை மேல கொட்டிக்கிட்டு இருக்கும்… அது மட்டுமல்ல சட்டை அல்லது பனியனுக்கு உள்ளே போய் விழுந்து நெஞ்சு முடியில சிக்கி அதை சுத்தம் பண்ணறதுக்கே பேரும் அக்க போரா மாறி அதை சுத்தம் பண்ணவே ஒரு இரண்டு மூனு நிமிஷம் ஆகி தொலையும்.
சில நேரத்துல பேச்சு சுவாரஸ்யத்துல ரெஸ்ட் ரூம் போய் எல்லாம் அந்த பப்ஸ் துளை தட்டி விட்டு இருக்கேன்.
அதை விட கொடுமை… படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது சுவாரஸ்யமா படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது சாப்பிட்டா.. அவ்வளவுதான்… சட்டை பேன்ட் எல்லாம் பப்ஸ் தூள் அபிஷேகம்தான் போங்கள்…
டேஸ்ட் எப்படி இருக்கும்ன்னு கேட்கறிங்களா…?? ஏதோ ஒரு மாதிரி இருக்கும் காரமாவும் இருக்காது.. சப்புன்னும் இருக்காது…
பசிக்கு சரி ஒரு பப்ஸ் ஒன்னு சாப்பிட்டு வைப்போம்னு பார்த்தா பசியையும் அடக்காது…
அந்த பப்ஸ் டிசைனே அப்படித்தான்… பப்ஸ்ன்னா கமலா தியேட்டர் பப்ஸ்தான்.. ஆனா சில நேரத்துல நேத்து ஸ்டாக்கை அப்படியே ஊடால விடுவாங்க..
ஆனா சத்யம் தியேட்டர்ல அப்படி இல்லை..
ஒரு இட்லி ஏழு ரூபாய் பத்து இட்லி வாங்கினா.. எழுபது ரூபாய்தான்.. புருசன் பொண்டாட்டி மூன்று வகை பொட்டுகடலை சட்னி கார சட்னி சாம்பாருடன் பார்சல் கொடுக்கின்றார்கள்..
ஆனால் 80 ரூபாய் கொடுத்து வாங்கும் பப்ஸ் எந்த உணர்வையும் தந்தது இல்லை…
எல்லாத்தையும் பொருத்தக்க ஒரே காரணம்.. ஒலி ஒளியில் மற்றும் டைம் கீப்பிங்கில் அவர்களை அடித்துக்கொள்ள முடியாது… அதே போல ஆண்கள் பாத்ரூமில் கடைசி உலுக்கலில் கீழே சிந்தும் சிறுநீரை உடனே மாப்பு போட்டு துடைத்து சுத்த பத்தமாக வைத்துக்கொள்வதும் சத்யம் தியேட்டர்தான்.
அதனால் இந்த பப்ஸ் சுவை பெறவும் சிந்தாமல் சாப்பிட வழி சொல்லவும் சத்யம்தியேட்டர் நிர்வாகம் அதை ஏதாவது செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்….80 ரூபாய் போனா மயிரே ஒன்னாச்சின்னு வாங்கி சாப்பிடும் அளவுக்கு அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டியது நிர்வாகத்தின் கடமை… அல்லது அந்த கிரிஸ்ப்பியையாவது குறைத்து தொலையுங்கள்…
இந்த பதிவின் நோக்கம் சத்யமில் அந்த படாவது பப்ஸ் தின்று கொண்டு இருக்க.. சட்டையில் சின்ன பையன் போல சிந்திக்கொண்டு சாப்பிட்ட என்னை கலுக் என்று ஒரு சின்ன பெண் சிரித்து விட்டு சென்றதே இந்த பப்ஸ் பதிவை பதிய முக்கியகாரணம் என்பதை சமுகத்துக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
சார் செம டேஸ்ட் பப்ஸ்சார் அது… அப்படியே வாயில நல்லா உட்டு கசாக்குன்னு ஒரு கடி கடிச்சா எப்படி சிந்துங்கறேன் என்று நீங்கள் கேட்டால்… உங்கள் வாய் ரொம் பெரியது என்று அர்த்தம்.
குறிப்பு
அந்த பாடாவதி பப்சால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின் இந்த பதிவை ஷேர் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்…
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
01/06/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment