அஞ்சலி.
ஒரு எழவு மயிறும்
தெரியாத சொந்தக்காரன்
நமக்கு அட்வைஸ்
பண்ணுவான்...
சின்ன ஜென்ட்ரல் நாலேட்ஜ்
கூட தெரியாம...
கைல கால்ல
விழுந்து, காக்கா
புடிச்சி , வேலை சொல்லற எடத்துக்கு வந்து
சில பேர்
நம்மையே மிரட்டுவான்...
குடும்ப சூழலுக்காக பல்லை
கடிச்சிக்கிட்டு கடனெழவேன்னு பொறுத்து நிறைய பேர்
போய் இருக்காங்க..
அப்படியான சூழலை நான்
கடக்கும் போதோ....
அல்லது நண்பர்கள்
கடக்கும் போதோ....
நான் பார்க்க
சொல்லி பரிந்துரை
செய்யும் திரைப்படம்
எதுவென்றால்....
1968 ஆம் ஆண்டில் இயக்குனர்
சிகரம் இயக்கத்தில்
நாகேஷ் நடிப்பில்
வெளிவந்த எதிர்நீச்சல்
திரைப்படம்தான்...
எப்போது எல்லாம் மொக்கை
மோகன்கள் என்
மன அமைதி
கெடுப்பது போல
நடந்துக்கொண்டாலும் , மனதை அமைதி
படுத்திக்கொள்ளவும்.... என்னை வெறியேற்றிக்கொள்ளவும்....
நான் கணக்கு
வழக்கு இல்லாமல்
பார்த்த திரைப்படம்
எது என்றால்
அது...
எதிர் நீச்சல் திரைப்படம்தான்...
============
வெற்றி வேண்டுமா போட்டு
பாரடா எதிர்
நீச்சல்
சரிதான் போடா தலைவிதி
என்பது வெறும்
கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு
எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா போட்டு
பாரடா எதிர்
நீச்சல்
பிள்ளைய பெறுகிற அம்மாவுக்கு
பத்து மாசமும்
எதிர் நீச்சல்
பொறக்குற குழந்தை நடக்குற
வரைக்கும் தரையில்
போடுவதும் எதிர்
நீச்சல்
பள்ளிக்கு பள்ளி இடத்துக்கு
அலையும் அப்பனுக்கு
அது தான்
எதிர் நீச்சல்
பிள்ளைக்கு எப்படி எடம்
கெடச்சாலும் பரிச்ச வந்தா எதிர் நீச்சல்
எதிர் நீச்சல்
வெற்றி வேண்டுமா போட்டு
பாரடா எதிர்
நீச்சல்
கடற்கரை ஓரம நடக்குற
காதல் கல்யாணம்
முடிச்சா எதிர்
நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளைய
பெத்து காலம்
கழிப்பதும் எதிர் நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடி
போக கருத்தை
சொல்வது எதிர்
நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுகள்
வாங்கி பதவிக்கு
வருவது எதிர்
நீச்சல் எதிர்
நீச்சல்
வெற்றி வேண்டுமா போட்டு
பாரடா எதிர்
நீச்சல்
சரிதான் போடா தலைவிதி
என்பது வெறும்
கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு
எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா போட்டு
பாரடா எதிர்
நீச்சல்
எவ்வளவு தன்னம்பிக்கை கொண்ட
வரிகள்..?????
கெத்து என்பது என்ன
தெரியுமா-? நீ ஒரு மயிறுக்கு புரயோஜனம்
இல்லைன்னு எந்த
பொறம் போக்குங்க
சொல்லுதோ... அந்த எடத்துல ங்கோத்தா.... நான்
உன்னை போல
தோத்து போவ
வரலைன்னு அவமானப்பட்ட
இடத்துல ஜெயிச்சி
எழுந்து நிக்கறதுதான்
உண்மையான கெத்து.
மாடிப்படி மாது எவ்வளவு
பொறுமையா இருந்து
அந்த கேரக்டர்
ஜெயிச்சி... ஒன்டு குடித்தனத்துல எதிர்த்தவன் மூஞ்சியில
கரியை பூசும்கறதை
அந்த படத்துல
இயக்குனர் சிகரம்
ரொம்ப அழகா
எக்ஸ்பிளாய்ட் பண்ணி இருப்பாரு...
.
யார் வேண்டுமானாலும் இயக்குனர்
ஆகலாம்.. ஆனால்
தான் எழுத்தில்
எழுதிய பீலிங்கை
செல்லுலாய்டில் கடத்தி படம் பார்க்கும் ரசிகனை
சினிமா என்பதை
மறந்து கண்
கலங்க வைப்பவனே
என்னை பொருத்தவரை
சிறந்த இயக்குனராவான்.
இயக்குனர் சிகரத்துக்கு என்
அஞ்சலிகள்.
===========
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்
மறைவுக்கு சமுக
வலைதளங்களில் அவர் அவர்களுக்கு தெரிந்தவகையில் அஞ்சலி
செலுத்தி வருகின்றார்கள்…
ஆனால் அதில் ஒரு
சிலர் ஓவர்
சீன்… இதுக்கு அவர்
உயிரோடு இருந்து
இருக்கலாம்…
இன்னைக்கு உருகுகின்றவர்கள் அவர் உயிரோடு இருக்கும் போது
உருகாதது ஏன்?--?
வக்கனையாக உட்கார்ந்துக்கொண்டு அஞ்சலி எழுதும் போது அந்த
எழுத்தில் கெட்ட
வாசம் வீசுவதை
பார்க்க முடிகின்றது..…
நல்லா வாழ்த்து கெட்ட
மனுஷன் 85 வயசுல
போய் சேர்ந்து
இருக்கின்றார் அதுக்கு ஏன் இவ்வளவு பீலிங்???
என்று நிறைய பதிவுகளில்
சிலர் தங்கள்
கேள்விகளை முன்
வைத்துள்ளார்கள் அதற்க்கு என் பதில்.
தங்கள் அஞ்சலிகளை தன்
சமுக வலைபக்கத்தில்
அன்பு காட்டி
எழுதுவதால் இறந்த பாலச்சந்தரோ அல்லது அவர்
வீட்டில் இருந்து
யாரோ ஒருவர்
எழுதுபவருக்கு கீரீடம் சூட்ட போவதில்லை… அல்லது அந்த
எழுத்தை மதித்து
தினப்பேப்பரில் பத்தி எழுத வெற்றிலை பாக்கு
வைத்து யாரும்
அழைக்கபோவத்தில்லை ..
இங்கே பாலசந்தர் புகழ்
பாடி பதிவிட்டவர்கள்
யாரும் அவருக்கு
சொந்தங்கள் இல்லை…
ஒரு கலைஞன் தன்
வாழ்நாளில் எப்படி அவன் இயக்கிய திரைப்படங்களில்
தன்னை கட்டிப்போட்டான்
??? எப்படி அவன் தன்னை நெகிழ்த்தினான் என்பதை
அவன் அவனுக்கு
தெரிந்த விதத்தில்
அவனுக்கு புரிந்த
விதத்தில் எழுதி
அஞ்சலி செலுத்துகின்றார்கள்…
எழுத்தில் கெட்ட வாசம்
இருக்கின்றதா என்று உற்றுபார்த்தால் வரிக்கு வரி
அன்டர்லைன் பண்ணி வீசவைக்க முடியும்… அது மட்டுமல்ல… உயிரோடு இருக்கு போதே
யாருக்கும் எதன் மதிப்பு தெரிவதில்லை.. இதுதான்
மனித நியதி..
சிகரேட் குடித்தால் உடல்
நலம் கெடும்
என்று தெரிந்தும்
குடித்து புற்று
நோயை வரவைத்துக்கொண்டு
அம்மா குடையுதே
குத்துதே என்று
அழுவது நம்ம
ஆட்கள்தான்..
என் அம்மா உயிரோடு
இருக்கும் வரை
அவள் அருமை
பெரியதாய் தெரியவில்லை..
இறந்த பின்
ஒவ்வோரு செயலிலும்
தெரிந்தாள்… அது போலத்தான்
இதுவும்…
சாப்பாடு எதிரில் இருந்தால்
பசிக்கவே பசிக்காது…. பத்துகிலோமீட்டர் நடந்து கடந்த
பின், தான்
பகபக என
வயிறு பசிக்கும்….
அது மட்டுமல்ல.. உடம்பு
சரியில்லை என்றால்தான்
டாக்டர் வீட்டுக்கு
செல்வோமே தவிர… நம் காயத்துக்கு மருந்து
போட்டவர் , என் மனைவிக்கு சுகப்பிரசவம் பார்த்தவர்,
என் கிட்னி
ஆப்பரேஷன் அவர்தான்
செய்தார் என்பதால்
மாதத்துக்கு ஒரு முறை அந்த மருத்துவரை
பார்த்து வணங்கி
விட்டு அல்லது
ஈமெயில் தொடர்பில்
பாராட்டுவதில்லை நாம்..
ஆனால் அவர் இறந்து
போய் விட்டால்… ச்சே என்னா தெறமையான
மனுசன் தெரியயுமா,
என் ஹார்ட்
ஆப்பரேஷன் அவர்தான்
சிம்பிளா முடிச்சி
கொடுத்தார்… என்று அவர்
புகழ் பாடுவோம்…
அது போலத்தான் பாலச்சந்தர்
இறப்பும் என்பது
என் அபிப்பராயம்…
ஜாக்கிசேகர்.
24/12/2014
=============
தமிழ் நாடக்கதுறைக்கும் திரைத்துறைக்கும்
எந்த அளவுக்கு கே.பாலச்சந்தர் உழைத்தாரோ அதே
அளவுக்கு வானொலி அண்ணா என்று செல்லமாக அழைக்கப்படும் கூத்தபிரான் அவர்களும் ஒருவர்.,
வானொலி அண்ணா என்று செல்லமாக அழைக்கப்பட்ட
கூத்தபிரான் காலமானார்..
இன்று 30க்கு மேற்ப்பட்ட தொலைகாட்சிகள்
இருக்கின்றன… ஆனால்
அன்று 1985களில் ரேடியோவை விட்டால் நாதி கிடையாது…
ஞாயிறு அன்று ஒளிப்பரப்பாகும்
சிறுவர் நிகழ்ச்சியில் அவர் குரலை எப்படி மறக்க முடியும்.. ???
முக்கியமா…
நிகழ்ச்சி முடியும் போது…
தம்பி தங்கைகள் எப்போதும் சந்தோஷமா சிரிச்சிக்கிட்டு
இருக்கனும்… என்று
பேசிய வார்த்தைகள் அவர் மறைவு செய்தி கேட்ட உடன் என் காதில் ஒலித்தன…
அதே போல மூவர்ணகொடி என்ற தேசபக்தி
நாடகம் அப்போது ரொம்ப பேமஸ்… பிரிட்டிஷ்
காலத்தில் மாணவர் குழு நமது தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதுதான் கான்செப்ட்.. வானொலி
எதிரே காத்துக்கிடந்த தினங்கள் அவை..
என் வாழ்வில் நான் ரசித்த முதல்
காம்பயரர்… ஒலி வடிவிலே மனதில் புகுந்து எப்படி
இருப்பார் என்ற பிம்பத்தையும் கற்பனையையும் ஏற்ப்படுத்தியவர் ….
சென்னை வந்து வானொலி அண்ணா இவர்தான்
என்று சொன்ன போது வானொலி அண்ணாவுக்கு ரொம்ப வயசாகி இருந்தது..
80,85 களில் சிறுவர்களாக இருந்தவர்களுக்கு
வானொலி அண்ணாவின் அருமை புரியும்…
வானொலி அண்ணாவின் ஆத்மா சாந்தி
அடையட்டும்.
ஜாக்கிசேகர்
24/12/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
I think some body writes KB like that because he was a brahmin.
ReplyDeleteYes, I agree with you ,How can we forget that golden days and voice of vaanoli anna.Till now I know that song " kodi uyarthuwom, kodi uyarthuwom, MOOVARNA KODI,,,......
ReplyDeleteஇருவரும் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்தவர்கள்! ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteஇருவரின் ஆத்மாவும் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...
ReplyDeleteJackie Sir,
ReplyDeleteYennai Yenn Sir Thitreenga?? Naan Yenna Sir Paavam Panninnen???
சிற்பி - தமிழ் சினிமா
ReplyDelete