கே.வி ஆனந்...
தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு துறையில் உச்சம் தொட்டு அசத்திய மனிதர்…
அவர் ஒளிப்பதிவில் மிகப்பெரிய சவாலான பணி என்றால் சிவாஜி படத்தில் வரும் சஹான பாடலில் சுற்றிலும் கண்ணாடி மாளிகையில் லைட் வைத்து இருப்பதும் தெரிய கூடாது.. கிளாரும் தெரியக்கூடாது … முக்கியமாக ஆர்ட்டிஸ்ட் உட்கார்ந்து பேசும் காட்சியும் கூடாது.. மூவ்மென்ட் இருக்கும் நடனகாட்சி… அப்படி என்றால் டிராலி, ஜிம்மி ஜிப் எல்லாம் மூவ் ஆகும் இருந்தாலும் எதிர்கண்ணாடியில் பிம்பம் வராமல் படம்பிடித்து இருப்பார்… அது போன்று நிறைய பாடல்களையும் காட்சிகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்…
ஆனந் முதலில் பேச்சிலர் டிகிரியில் பிசிக்ஸ் படித்து விட்டு மாஸ்டர் டிகிரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து விட்டு கழுத்தில் ஸ்டில் கேமரா மாட்டிக்கொண்ட கேமராக்காதலர்…
சிறுவயதில் சூப்பர் நாவலில் கேவிஆனத் எடுக்கும் அட்டை பட போட்டோக்களுக்கு நான் ரசிகன். வரைந்துக்கொண்டு வந்த அட்டைப்பட நாவல் புத்தகங்களுக்கு மத்தியில் மாடல்களை வைத்து எடுக்கப்பட்ட கிரைம் புகைப்படங்கள்
அட்டைப்படத்தில் இடம் பெற… அப் படங்கள் பெரிய பரபரப்பை அக்காலத்தில் ஏற்படுத்தின என்றால் அது மிகையில்லை.
கல்கி, இந்தியா டுடே என்று பணிபிரிந்தாலும் ஆனந்தின் தேடல் அடுத்து என்ன என்ற கேள்விக்கு சினிமா ஒளிப்பதிவு என்று பதில் சொல்ல… நேராக அவர் போய் நின்ற இடம் பிசி ஸ்ரீராம்தான்….
இவர் பத்திரிக்கையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அட்டைப்படங்கள் இவரை பிசியின் உதவியாளராக தேர்வு செய்ய உதவியாய் இருந்தன.. பிசியிடம் ஆறாவது உதவியார்… ஆனால் அவர் நேரம் அவரது சீனியர் அத்தனை பேரும் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய சென்று விட முதல் அசிஸ்டென்டாக விரைவில் தொழிலை திறம்பட கற்று தேர்ந்தார்…
1994 ஆம் ஆண்டு பிரியதர்ஷனின் தேன்மாவின் கொம்பத்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு அவதாரம் எடுக்க முதல் படத்திலேயே ஒளிப்பதிவுக்கு தேசிய விருது பெற்று ஒளிப்பதிவு துறையினர் மூக்கில் விரல் வைத்தார்…
கேவிக்கு முதல் நேரடி 1996 ஆம் அண்டு வெளியான தமிழ் திரைப்படம் காதல்தேசம்.. நேருக்கு நேர் திரைப்படத்தில் இன்றைய முன்னனி நட்சந்திரங்கள் இரணடு பேரையும் தன் ஒளிப்பதிவில் சிறைபிடித்து இருந்தாலும் மனம் விரும்புதே பாடலில் சிம்ரனை திருமலைநாயக்கர் மாஹலில் எடுத்த பாடல் மூலம் நிறைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்க காரணமாக இருந்தவர்.
1999 ஆம் ஆண்டு சென்னை சரவணா வீடியோசில் கேமரா அசிஸ்டென்டாக ஒர்க் செய்துக்கொண்டு இருந்தேன்.-. இப்போது ராயப்பேட்டையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரசின் பழைய பில்டிங் அங்கு இருந்தது.. தமிழ் பட வில்லன்கன் ஆன்ன் ஊன்னா ஹீரோயின்களை கடத்திக் கொண்டு போய் நாயகனை கதறவிடும் இடம் இது…
முதல்வன் படத்துக்கு ஷக்கலக்கபேபி பாடல் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்….ஆனந்த ஒளிப்பதிவு செய்துக்கொண்டு இருந்தார்… அப்போதுதான் அவரை நேரில் சந்தித்தேன்…
மிகவும் குள்ளமாக இருந்துக்கொண்டு எத்தனை பேரை இந்த ஆளு ஆட்டி வச்சிக்கிட்டு இருக்கான் என்று மனதில் கருவி இருக்கின்றேன்.….சுஷ்மிதா சென் என் தோளில் கை போட்டு எடுத்த காட்சியை ரீவைன்ட் செய்ய சொல்லி கேட்க… கைககள் நடுங்க வீசிஆரில் பதிவு செய்த காட்சியை சுஷ்மிதாவுக்கு காண்பித்ததும் அன்று இரவு தூக்கத்தில் சுஷ்மிதாசென் உடன் முழு பாடலுக்கும் டான்ஸ் ஆடியது இந்த பதிவுக்கு தேவையில்லாத ஒன்று.
2005 ஆம் ஆண்டு கணாகண்டேன் திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஆனந்… சாக்லேட் பாய் மலையா ஹீரோ பிரித்விராஜை டீசன்ட் வில்லன் வேடத்தில் நடிக்க வைத்து… வெள்ளையா இருக்கறவன் மற்றும் அழகா இருக்கறவன் கெட்டவனாகவும் இருப்பான் என்று தமிழ் ரசிகமகா ஜனங்களுக்கு பொட்டில் அடித்து தன் முதல் படம் மூலம் உணர வைத்தவர்…. அந்த படத்தில் கோபிகாவுக்கும் ஸ்ரீகாந்துக்கு பிரிமேரிட்டல் செக்ஸ் காட்சியை வைத்து தமிழ் சினிமாவின் சமுக நடிப்பு பிம்பத்தை, நகைமுரனை, முதல் படத்திலேயே உடைத்து காட்டியவர்…
எழுத்தாளர் சுபா குழுவினரோடு சூப்பர் நாவல் காலத்தில் இருந்து பயணிப்பதே இவரின் பெரும் பலம்.
அதன் பின் அயன் , கோ, மாற்றன் என்று வெற்றிபடங்களை இயக்கி இயக்குனர் சிம்மாசானத்தில் நிம்மதியாக உட்கார்ந்தவர்… அயன் படத்தில் பளபளக்கு பகலா நீ பாடலுக்கு 500க்கு மேற்ப்பட்ட கட் ஷாட்டுகளை பயண்படுத்தி இருப்பார் .. நேரம் இருப்பின் எண்ணிப்பாருங்கள்…
பாடல்களை படம் பித்து விட்டு அதனை சோகசீனுக்கு அப்புறம் வைத்து விமர்சனங்களையும் கேலிகளையும் அயன் மற்றும் கே படத்தில் சந்தித்தவர். மாற்றான் திரைப்படத்தில் தொய்வை சந்தித்தாலும் அனேகனில் அசத்திவிடுவார் என்கின்றது.. சமீபத்தில் வெளியான அனேகன் டீசர்கள் சொல்கின்றன…
இன்று கேவி ஆனந்திற்கு பிறந்த நாள்… அவருக்கு இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதோடு இன்னும் தமிழ் திரையுலகில் பல சாதனைகள் படைக்க மனர்பூர்வமாய் வாழ்த்துவோம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
30/10/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தகவல்களுக்கு நன்றி!
ReplyDelete