நேற்று இரவு பாரிஸ் வரை ஒரு வேலை….
மன்ரோ சிலை வழியாக பாரிஸ் சென்று விட்டு கடற்கரை
சாலை , லைட் ஹவுஸ் வழியாக வீடு திரும்ப திட்டம்.
மன்ரோ சிலை அருகே சென்ற போது எதிர் பக்கத்தில் அப்போதுதான் விழுந்து சில நொடிகள்
கடந்து இருக்க வேண்டும்..இரண்டு போலிஸ்காரர்கள் மற்றும் அவர்களுக்கு பக்கத்தில்
சென்ற குட்டி யானைக்கு நடுவில் இரண்டு
பசங்கள் ஸ்பெலன்டரில் சாகசம் காட்ட…
போலிஸ்காரர்கள் சென்ற வண்டியில் இடித்து நால்வரும் ரோட்டில் விழ.. பின்னே உட்கார்ந்து இருந்த சின்ன பையன் மண்டையில் அடிப்பட்டு ரத்தம் ஊத்திக்கொண்டு
இருந்தது…
இன்னோரு பையனுக்கு முட்டிக்கு கீழே அனகோண்டா
கடித்து குதறியது போல பெரிய அளவு வெட்டுக்காயம் இருந்தது…முக்கால்வாசி சதை இல்லாமல் எலும்பு தெரிந்தது..
போலிஸ்காரருக்கு கையில் பயங்கர அடி அவர் கூட்டத்தை பார்த்ததும் அழ
வேண்டும் போல இருந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு வலியை கண்ணில் மட்டும் காட்டிக்கொண்டு
இருந்தார்…
பாரிஸ் சென்று வேலை முடித்து கடற்கரை சாலை சென்னை
பல்கலைக்கழ மாணவர் விடுதி அருகே கூட்டம் நின்றுக்கொண்டு
வழிமேல் விழிவைத்து அம்புலன்ஸ் வருகைக்கு காத்து இருந்தது..
அம்புலன்ஸ் அலறிக்கொண்டு வந்தது…
வேடிக்கை பார்க்கும் கும்பலுக்கு ஒரு வேண்டுகோள்…
ஒரு மயிறும் புடுங்கவில்லை என்றாலும்…. வேடிக்கை
பார்க்கும் எருமைகள் வண்டியை ஓரம் நிறுத்தி வேடிக்கை பார்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ள
படுகின்றார்கள்..…
ஆனால் அதை விடுத்து கொஞ்சம் கூட சுதிமதி இல்லாமல் நடு ரோட்டில் வண்டியை படிர் என்று பிரேக் அடித்து எதையோ கிழப்பது போல வண்டியை நிறுத்தி வேடிக்கை பார்க்க…. பின்னால் வந்த வண்டிகள் சடக்பிரேக்கால்
நிலைகுலைந்து போய்…..வேடிக்கை பார்க்க நின்று ஆர்வ வண்டிகளை இடித்து சின்ன சின்ன
களேபரங்கள் உருவாகிக்கொண்டு இருந்தார்கள் சில ஆர்வக் கோளாறுகள்.
சென்னை கடற்கரை சாலை விபத்துதான் இருப்பதிலேயே கொடுமை… கடற்கரை சாலை பக்கம் இருக்கும் புல்வெளியில் நான்கு எருமைகள் கால்பந்து விளையாட திடிர் என்று கடற்கரை காமராஜர் சாலையில் கால்பந்து ஒன்று உருண்டு வந்தால் என்னவாகும்.. ???
வாகனத்தில்
வந்த இரண்டு பேர் திடிர் என்று சாலையில் கால் பத்தினை பார்த்து போய் பயந்து சடன் பிரேக் அடித்து வண்டி புரட்டி விட ....
பின்னால் வந்த வண்டி மோத பின்னால் உட்கார்ந்து இருந்தவருக்கு தலையில் பலத்த காயம் என்றும் உயிர் பிழைப்பது கடினம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்க்ள்
உச் கொட்டி சொல்லி சென்றார்கள்..
முன்பெல்லாம் சென்னையில் விபத்துகள் ஒன்று இரண்டு எப்போதாவது நடக்கும் ஆனால் இப்போதெல்லாம் சாலை விபத்துகள் ஒரு கிலோ மீட்டருக்கு ஒன்று என நடக்க ஆரம்பித்து விட்டது….
என் அருகில் நின்ற நடுக்குப்பம் மீனவபையன் சொன்னான்..
அண்ணே அந்த பசங்கதான் பால் விளையாடினவங்க
என்று சிலரை சுட்டிக்காட்டினான்.…
அவர்களிடத்தில் பதட்ட இல்லை….
சிரித்துக்கொண்டு இருந்தார்கள்……
அவர்கள் பல்கலைக்கழக விடுதி மாணவர்களாகவும் இருக்கலாம் அல்லது நடுக்குப்பம் மீனவ பசங்களாகவும் இருக்கலாம்..
வேகமாய் நடந்துக்கொண்டு இருந்தார்கள்…..
குழந்தைகள் விளையாடி பந்து என்றால் கூட மனம் ஏற்றுக்கொள்ளும்…. ஆனால் விளையாடியது மீசை வைத்த எருமைகள்…
கொஞ்சம் கூட சென்ஸ் இல்லாமல இருப்பார்கள்…..????
இரக்கம் இல்லாமலா இருப்பார்கள்….?????
ஆனால் அவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு
இருந்தார்கள்.
ஜாக்கிசேகர்
25/11/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
//ஆனால் அவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தார்கள்.// POLI SAMIYARKAL...
ReplyDelete