Kayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.
பரிட்சார்த்த முயற்சிகள் தன் திரைப்படங்களில்  அதிகம் செய்து பார்த்த பிரபுசாலாமன் கடைசியில் காதலை கையில்  எடுக்க தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றியோ வெற்றி.. அது மட்டுமல்ல...  மைனா திரைப்படம் அதன் திரைக்கதை கட்டமைப்பு... கேரக்டர் சேஷன் எல்லாம்  தமிழ் சினிமாவில் கொண்டாடப்படவேண்டிய திரைப்படம்  இது என்றால் மிகையில்லை...


காரணம் கிங், லாடம்,கொக்கி, லீ  போன்ற படங்கள் கொடுக்காத வெற்றியை மைனா கொடுத்தது என்பதுதான் நிஜம்..

 காதல்  அதுவும் புரட்டி  போடும் காதல்...நாயகன் நாயகியில் ஒருவர் அப்பாவி... முக்கியமாக இரண்டு பேருமே விளம்பு நிலைமனிதர்களாக இருப்பார்கள்.. முடிவு  இதயத்தை பிழியும் விதமாக இருக்கும்  இதுதான் பிரபு சாலமனின் டெம்ப்லெட் என்று சாலிகிராமம் காவேரி டீக்கடையில் ஒரு பேச்சு உண்டு.

ஆனால் மைனாவு கொடுத்த வெற்றிக்கு பிறகு இழந்த புகழை பெற்ற காரணத்தால் பிரபுசாலமனின் திரைப்படங்களுக்கு தனி மவுஸ் தமிழ் திரையுலகில் உருவானது என்றே சொல்ல வேண்டும்.

கயல்  நிறைய  எதிர்பார்ப்புகளை தூண்டி விட்ட திரைப்படம்.. லடாக், ராஜஸ்தான் என்று இரண்டு மூன்று காட்சிகளுக்கு எல்லாம்  அங்கே சென்று விட்டு வந்தார்கள்.. புறநகரில்  செட் போட்டு மூன்று மாதத்துக்கு மேல்  சுனாமி காட்சி எடுத்ததார்கள். சிஜி ஒர்கிற்கு மூன்று  கோடிக்கு மேல் செலவு செய்தார்கள். அதுவும் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லாத புதுமுகங்களுக்கு  செலவு செய்கின்றார்கள்  என்று பேச்சு கோடம்பாக்க தெருக்களில் பேசிக்கொண்டு இருக்க...

கயல்  டிரைலர்...  பேசிக்கொண்டு இருந்தவர்கள் வாயை அடைத்தது என்றே  சொல்ல வேண்டும்... அந்த மாதிரி காட்சிகள்.. அதுவும் பாரின் எல்லாம் போகாமல் இந்தியாவில் இருக்கும் அற்புதமான காட்சிகளை செல்லுலாய்டில்  சிறை பிடிக்க படத்தை பற்றி  இன்னும் எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்.


 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா??

 கயல் படத்தின் கதையை இரண்டு வரிகளில்  பார்த்து விடுவோம்.. சந்திரன்( ஆரோன்)
அனந்தி (கயல்) இரண்டு பேரும்  அப்பா அம்மா இல்லாதவர்கள்... சில மணி நேரம் பேச்சில் இரண்டு பேருக்கும் காதல் ஒட்டிக்கொள்ள... அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே கயல்  படத்தின் கதை..


படத்தின் சுவாரஸ்யங்கள்..

 சந்திரன் புதுமுகம்... தனது முதல் படத்துலேயே காடு மலை என்று இந்தியா முழுவதும் சுத்தி பார்க்கும் வாய்ப்பு  யாருக்கு, கிடைக்கும் அது சந்திரனுக்கு வாய்த்து இருக்கின்றது.. அது மட்டுமல்ல... தான்  வேலை செய்த சந்தியம் தியேட்டரில்  பாடல் வெளியீட்டு விழா மற்றும் பெரிய எதிர்பார்ப்பில் ஒரு படம் ரிலிஸ் ஆவது எல்லாம் முன் ஜென்மத்து கொடுப்பினை என்றே சொல்ல வேண்டும்..

 கயல்... ஆனந்தி... அசத்துகின்றது அந்த கண்கள்..  வேலைக்காரி என்பதால்  இரண்டு மூன்று காஸ்ட்யூம்களில் ஓவர்... என் ஆலை பார்க்க போறேன்னு  பாடும் அந்த பாட்டில் அந்த கண்கள் அந்த எக்ஸ்பிரஷன்கள் முதல் படத்துலே பின்னி யெடுப்பதால் வாய்புகள் வீடுதேடி வரும். கண்டிப்பாக உண்டு.
பொதுவா பிரபுசாலமனுக்கு சுகுமார்தான் கேமராமேன்.. அவர் ரொம்ப  பிசி கேமராமேனா மாறிட்டதாலே..  வெற்றிவேல் மகேந்திரனை  கேமரா பிடிக்க சொல்லி இருக்கின்றார்... காடு மலை மேடு என்று பயணித்து இருக்கின்றது... அந்த  ஒரு சில காட்சிகளுக்காக அவர்கள் எந்த அளவுக்கு உடல் உழைப்பை கொடுத்து இருப்பார்கள் என்று காட்சிகளை பார்க்கும் போதே நமக்கு அசதி  ஆகி விடுகின்றது.

இமானின் பாடல்கள்தான் படத்தின் பெரிய பலம்... அவர் மட்டும் இல்லையென்றால் இந்த படம் பப்படம் ஆகி இருக்கும்  ..

தனது முந்தைய இரண்டு படங்களில்  லாஜிக்கோடு கதை சொன்ன... பிரபு சாலமன்  காதல் இருந்தால் போதும் லாஜிக் தேவையில்லை என்று நினைத்தது ஏனோ என்று தெரியவில்லை.

ஊர் பேர் தெரியாதவன் காதலை போல்டாக சொன்னதற்காக வேண்டுமானால் அப்பா அம்மா இல்லாத …. பரிவுக்கு ஏங்கும் கயல் வேண்டுமானால் சடுதியில் காதல் வயப்படலாம்… ஆனால் சின்ன வயதில் கயல் குழந்தையாக இருந்ததில் இருந்தே வளர்த்த பாட்டி…. திரட்டிசியான பருவ வயது பெண்ணை…. விலாசம் இல்லாதவனை. எங்கே இருப்பான் என்று தெரியாத காதலனை போய் கண்டு பிடித்து அவனோடு சேர்ந்து விடு என்று கன்னியாக்குமரிக்கு பயணப்பட சொல்லி கயலுக்கு பணம் கொடுத்து பாட்டி வீட்டை விட்டு அனுப்பும் அந்த காட்சியில் இருந்து சினிமாவை நேசிக்கும் ரசிகனிடம் இருந்து கயல் அன்னியப்பட்டு போகின்றாள்….

முக்கியமாக ஒரு விஷயத்துக்காக இயக்குனர் பிரபுசாலமனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்… கருப்பாக கொஞ்சம் அவலட்சனமாக இருப்பவர்கள் எல்லாருமே வில்லன்கள் என்ற பிம்பத்தை வெகுகாலமாக தமிழ் சினிமா ஏற்ப்படுத்தி வருகின்றது…
கோடு போட்ட பனியன் அணிந்தவன் திருடன் என்பது போலான பிம்பம் அது…
ஆனால் கயல் படத்தில் அது உடைக்கப்பட்டுள்ளது… கயலை கன்னியாக்குமாரிக்கு கண்டெய்னர் லாரியில் அழைத்து செல்லும் டிரைவர்… மற்றும் இங்க சுத்திக்கிட்டு இருக்காதடி பன்னு போல பிச்சி பிச்சி தின்னுடுவானுங்க என்று அட்வைஸ் பண்ணும் போலிஸ் இன்ஸ்பெக்டர் பார்க்க கரடு முரடாக இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை…
அவர்களும் நல் இதயம் படைத்தவர்கள்தான் என்று காட்சி படுத்திய பிரபுசாலமனுக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே.

மற்றபடி சுனாமி காட்சிகள்  மற்றும் கடைசி 30 நிமிடங்கள் இ,ந்த படத்தை காப்பாற்றுகின்றது என்றே சொல்ல வேண்டும்.

=========
படத்தின் டிரைலர்..

=========

படக்குழுவினர் விபரம்

Directed by Prabhu Solomon
Produced by Madhan
James
Starring Chandran
Anandhi
Vincent
Music by D. Imman
Cinematography Vetrivel Mahendran
Edited by Samuel
Production
company
Escape Artists Motion Pictures
God Pictures
Release dates
25 December 2014
Running time
approximately 150 minutes
Country India
Language Tamil
Budget INR15 crore

=========


பைனல்கிக்.

என்னதான் கயல் அழகோ அழகியாகவே இருக்கட்டும்.. மனசை போட்டு புரட்டட்டும்.. சுனாமியில்   ஆரோன், கயல், சாக்கரட்டிஸ் மூவரும்  சிக்குகின்றார்கள்.. சுனாமி அவர்கள் மூவரையும்  சிக்கி சின்ன பின்னமாக்குகின்றது...

 நானும்  பார்க்கறேன்.. ஹீரோ . கயல் கயல்ன்னு கத்தறானே ஒழிய.. ஒரு தடவை கூட சாக்கரட்டிஸ்ன்னு தன் கூடவே செவ்வாழை கணக்கா சுத்தின  தன் நண்பனோட பேரை ஒரு வாட்டி கூட அந்த மரண பயத்திலும் அவன் பெயரை உச்சரிக்கவில்லை எனும் போது  என்ன நட்பு அது...???? முதல் பாதியில் பேசும் அந்த பிலாசபி எல்லாம் ஒரே ஒரு முறை  பார்த்த  பெண்ணின் கண் முன் பழகிய நண்பனை உயிர் போகும் நேரத்தில் கூடவா ஒரே ஒரு முறை கூடவா  கூப்பிடமாட்டார்கள்.---????
லாஜின் சொதப்பல்பகள் படத்தை ஒட்டவிடாமல் செய்கின்றன..
ஒலிபெருக்கியில் கயல் இங்கேதான் இருக்கின்றாள் என்று சொல்லியும் அந்த இடத்தை நோக்கி செல்ல முடியவில்லை எனும் போது தியேட்டர் சலசலக்கின்றது..

படத்தின் முடிவை பாசிட்டிவாக முடித்த காரணத்தால் படம் தப்பித்து விட்டது என்றே சொல்லாம்... கண்டிப்பாக படத்தை ஒரு  தடவை  பார்க்கலாம்..

அந்த சின்ன ஜமீனாக  சித்தப்பாவாக நடித்த வாத்தியார் மற்றும் பத்திரிக்கையாளர்  தேவராஜ்  நடிப்பில் இயல்பு....

இன் டு த வைல்ட் திரைப்படம் பார்த்த  பிலிங்கை படத்தின் முதல் 30 நிமிடங்கள் கொடுத்தன  என்றால் அது மிகையில்லை.

பெட்டர் லக் நெக்ஸ்டைம் பிரபுசாலமன் சார்.

=====

படத்தோட ரேட்டிங்...

பத்துக்கு ஆறு...
========

 பிரியங்களுடன்


ஜாக்கிசேகர். 

படத்தோட வீடியோ விமர்சன பதிவு.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. சிறப்பான விமர்சனம்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner