ஷாருக்கான்...
நீங்கள் மதிய சாப்பாடு சாப்பிடுகின்றீர்கள்... ஒரு அரைமணி நேரத்துக்கு சாப்பிடுகின்றீர்கள் என்று
வைத்தக்கொள்ளுங்கள்.. அந்த அரைமணி நேரம் சாப்பாடும் நேரத்தின் மதிப்பு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்று சொன்னால் எப்படி இருக்கும்...?
சும்மா தலை கிர்ர்ன்னு சுத்தாது???
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருடத்தில் மொத்தமாய் சம்பாதிக்கும்
பணத்தில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு என்று கணக்கு போட்டு யாரோ சில வருடங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தார்கள். ஆம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சாப்பிடும் மதிய சாப்பாட்டு நேரத்துக்கான மதிப்பு 5 லட்சமோ அல்லது 12 லட்சமோ சரியாக நினைவில்லை... அப்படி சொன்ன போது வாயடைந்து
விட்டேன்...
அடப்பாவிங்களா மாசம்
50 ஆயிரம் சம்பாதிக்கறதுக்குள்ள... நாக்கு தள்ளுது... அதுக்கே ஏகப்பட்ட குழைக்கும்பிடு...போட்டுக்கொடுக்கறவனை
கண்டு பிடிச்சி... அவன் போட்டுக்கொடுத்த மேட்டருக்கு வௌக்கம் கொடுத்து தாவு தீர்ந்துடுது...
ஆனா ஷாருக்கான் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்
ஆக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டும் என்று
யோசித்து பாருங்கள்... தலைசுத்தும் யோசிப்பு அது..
1980களில் இந்தி தொலைகாட்சி சீரியல்களில் பேக்கு போல நடித்துக்கொண்டு
இருந்தவர் இன்று உலகின் அதிகமாக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகர் என்ற பெயரை தட்டிக்கொண்டு
சென்று இருக்கின்றார்...
1992 சென்னை ஜூன்
மாத மதிய வெயிலில் தீவானா இந்தி திரைப்படம் வெளியானது...
அதுதான் ஷாருக்கான் அகன்ற திரையில்
70எம் எம்மில் முதல் முறையாக தன் முகத்தை பெரியதாய் பார்த்த திரைப்படம்.
இயக்குனர் ராஜ்குமார். சந்தோஷி இடம் அசிஸ்டென்ட் டைரக்டரா
ஒர்க் பண்ணிய ராஜ் கன்வர்தான் ஷாருக்கிற்கு வெண் திரையில் ஹீரோ வாய்ப்பு கொடுத்தவர்...... ஷாருக்கு
முதன் முதலாக ரொமான்சின் போது கழுத்து பக்கம் மோப்பம் பிடித்த ஹீரோயின் யார் தெரியுமா?
தமிழில் நிலா பெண்ணே படத்தின் மூலம் அறிமுகமாகி பலரின் தூக்கத்தை கெடுத்து விட்டு ஹிந்தியில் பலரின் தூக்கத்தை
கெடுக்கறேன் என்ற கங்கனம் கட்டிக்கொண்டு சென்றவர் நடிகை திவ்யாபாராதி.... ஆனால் காதல் வயப்பட்டு தற்கொலை செய்துக்கொண்டார் அல்லவா அவர்தான் ஷாருக்கின் முதல் திரை நாயகி..
முதல் படம் யாருடா
இந்த பையன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும் போது...
1993 ஆம் ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகின.... ஒன்று பாசிகர் மற்றது தர் மேற்சொன்ன இந்த இரண்டு படங்களுமே ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட்...
தர் படத்தில் ஐ லல்வ் யூ கிரகிரகிரரண்ண்ண்ண்ண் என்று இழுத்து நாயகி ஜூஹீயிடம் சொல்லும் போது இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த தியேட்டரும் ஆர்பரித்தது...
அன்று ஆர்பரித்த விஷயம் தற்போது வெளியாகி இருக்கும் ஹேப்பி நீயூயர் திரைப்படம் வரை தொடர்வதுதான் அதிஷ்டம்
என்றும் கடவுள் கிருபை என்றும் சொல்ல வேண்டும்.
இந்த இரண்டு படங்களையும்
சென்னை மெலோடியில் திரையரங்கல் பார்த்தேன்.,. சேட்டு பெண்கள்
இந்த இரண்டு படங்களையும் கொண்டாடியது போல அக்காலத்தில் வேறு
எந்த படத்தையும் நான் கொண்டாடி பார்த்தது இல்லை..
ஒரு அறிமுகநடிக்காருக்கான கொண்டாட்டத்தை
சொல்கின்றேன்... அது மட்டுமல்ல... ஷாருக் தொடர்ந்து நடித்த மூன்று திரைப்படமுமே ஹாட்ரிக் வெற்றிபடங்கள்... தீவான ஓகே வெற்றி என்றால் பாசிகர்
மற்றும் தர் உங்க வீட்டு வெற்றி, எங்க ஊட்டு வெற்றி என்று கொண்டாடி தீர்த்தார்க்ள்..
அதன் பின் ஷாருக்கு எல்லாம் ஏறு முகம்தான்... அது மட்டுமல்ல
காஜல் அவருடைய ஜோடியாக நடித்ததால் அந்த படம் ஹீட் என்று சத்தியம் செய்தார்கள்... அந்த
அளவுக்கு ஷாருக் காஜல் ஜோடி
செம பிரபலம்..
ஷாருக்குகின் வெற்றிக்கு
முக்கியகாரணம் அவட் அறிமுகமாகிய போது த பாய்
நெக்ஸ் டோர் கெட்டப்பல் இருந்தது.. மற்றது
அவரது துறுதுறுப்பும் சாமிங் டயலாக் டெலிவரியும்
இளம் பெண்கள் தூக்கத்தை கெடுத்து தலைகானியை பிராண்ட வைத்தது என்றே சொல்ல வேண்டும்..
சின்ன சின்ன சிரிப்புக்கு
எல்லாம் ஒரு காலத்தில் சிக்சர் அள்ளினார் ஷாருக்
என்றே சொல்ல வேண்டும்...
ஷாருக் இதே நாளில் டெல்லியில் பிறந்தாளும் மேங்களுரில் இளம்
பிராயத்தில் வளர்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி
நாட்களில் படு சுட்டி... நம்ம ஊர் சிவகார்த்திகேயன் போல கல்லுரி நாட்களில் ஸ்டேஜ் ஷோக்களில் மற்ற நடிகர்களை
இமிடேட் செய்து ரசிகர்களின் கைதட்டலை அள்ளுவாராம்.
ஷாருக்கான் இன்று புகழ் பெற்று இருக்கலாம்
ஆனால்
அந்த புகழை அவரது பெற்றோருக்கு பார்க்க கொடுத்து
வைக்கவில்லை என்பதுதான் காலக்கொடுமை... ஆம் அப்பா கேன்சரில் இறந்தார்... அம்மா
1991 ஆம் ஆண்டு சக்கரை வியாதியால் மரித்து
போனார்...
திரைப்படத்தில் புகழ்
பெறும் முன்னே 1991 ஆம் ஆண்டு பஞ்சாபி இந்துவான கவுரியை கரம் பிடிக்க... வீட்டில் இரண்டு மதங்களையும் அவர்கள் பிள்ளைகள் கடைபிடிக்கின்றார்கள்...
தீவிர இஸ்லாம் மீது நம்பிக்கை கொண்ட ஷாருக்
தன் மனைவி கவுரியை இஸ்லாத்தக்கு ஒஐரு போதும் மாற சொல்லவே
இல்லை என்பதால் அவரை இன்னும் கோடிக்கனக்கான
பேர் ரசிக்கின்றார்கள்..
1995 ஆம் ஆண்டு ஷாருக்கின்
திருமண நாளுக்கு 5 நாட்கள் முன் வெளியான தில்வாலே
துல் ஹனியா லேஜாயேங்கே திரைப்படம் இன்றுவரை
மும்பையில் 1000மாவது வாரத்தை தொட ஓடிக்கொண்டு இருக்கின்றது...
தில் து பாகல் ஹை, குச் குச் ஹோத்தாடி ஹை, மொஹபட்டின், தேவ்தாஸ்,
ஸ்வதேஸ்,சக்தே இந்தியா, மை நேம் இஸ்கான்... போன்ற திரைப்படங்கள் வெற்றியை கண்ணு மண்ணு தெரியாமல் குவித்தன...
தற்போது வெளியாகி இருக்கும் ஹேப்பி நீயூயர் திரைப்படம் மூன்று நாட்களில் உலகம்
எங்கும் 100 கோடியை தொட்டு இருக்கின்றது..
49 வயதில் இன்னும் ஷாருக்கானை கொண்டாட முக்கியகாரனம் கடும் உழைப்பு..
49 வயதில் சிக்ஸ் பேக்குக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டமே அவரின் வெற்றிக்காரணம்..
பயங்கர செயின் ஸ்மோக்கர்... அதனாலே அதிகம் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு
இருக்கின்றார்...
பாலிவுட் பாஷா , கிக்ஆப்கான், எஸ்ஆர்கே என்று பெயரை சுருக்கி அவரை அவரது பல கோடி ரசிகர்கள் அழைத்து மகிழ்கின்றார்கள்..
80 படத்தில் அ இந்தியாவின் உச்சம் தொட்ட மனிதர் இவர்தான்..
30 பிலிம் ஃபேர் நாமினேஷனில் ,14 விருதுகளை வென்றவர்... இந்தியாவின்
உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டத்தை பெற்றவர்.
நீயூஸ் விக் பத்திரிக்கை வெளியிட்ட கருத்துக்கணிப்பில் உலகின் ஆளுமை மிக்க மனிதர்கள் பட்டியலில் ஷாருக்கிற்கு இடம் கிடைத்து
இருக்கின்றது...
ஆனாலும் அமெரிக்காகாரன்
உன் ஊர்ல பெரிய மயிரா இருந்தா எனக்கு என்ன?
என்று யூஎஸ் அதிகாரில் தெனவெட்டாக விமான நிலையத்தில் அவரை நிறுத்தி வைத்து செக்கிங்
என்ற போர்வையில்படுத்தி எடுக்க.. அவர்கள் கூறிய காரணம்.. ஷாருக்கான் முஸ்லீம் பெயராக இருப்பதால் தீவிரவாதியாக இருப்பார்
என்று சந்தேகிக்கின்றோம் என்று சொல்ல.....
அந்த வெறுப்பில் உருவான திரைப்படம்தான்... மை நேம் இஸ் கான் திரைப்படம் ஐயம் நாட்
டேரரிஸ்ட்.... என்ற கேப்ஷனோடு வெளியானது...
என்னோட ஆல்டைம் பேவரைட்..
பாசிகர், தில்வாலே
துல்ஹினியா,குச்குச் ஹோத்தா ஹை,சுவதேஷ், சக் தே இந்தியா
பாலிவுட் பாஷாவுக்கு இன்று பிறந்தநாள்...
இன்னும் பல உயரங்களை
தொட...... ஆமாம் இன்னும் என்ன உயரம்?? அதான் தொட்டாச்சே...
சரி நோய் நொடியில்லாமல் அவர் வாழ அவர் பிறந்த தினமான இன்று அவரை வாழ்த்துவோம்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
02/11/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
நல்ல தகவல் தொகுப்பு
ReplyDeleteநான் டர் படம் இந்தூர் தியட்டர்(யு.பி) ஒன்றில் பார்த்தேன்
தியேட்டர் மொத்தமும் ஷாருக் மின்சாரம் ஓடிக் கொண்டிருந்தது ...
அன்று நினைத்தேன் இனி பல பெண்பிள்ளைகளின் தூக்கத்தை கெடுக்கப் போறான் ...
நெறைய புகை என் காதில் வந்திருக்க வேண்டும்.
ஆனாலும் அமெரிக்காகாரன் உன் ஊர்ல பெரிய மயிரா இருந்தா எனக்கு என்ன? என்று யூஎஸ் அதிகாரில் தெனவெட்டாக விமான நிலையத்தில் அவரை நிறுத்தி வைத்து செக்கிங் என்ற போர்வையில்படுத்தி எடுக்க.. அவர்கள் கூறிய காரணம்.. ஷாருக்கான் முஸ்லீம் பெயராக இருப்பதால் தீவிரவாதியாக இருப்பார் என்று சந்தேகிக்கின்றோம் என்று சொல்ல.....
ReplyDeleteஅந்த வெறுப்பில் உருவான திரைப்படம்தான்... மை நேம் இஸ் கான் திரைப்படம் ஐயம் நாட் டேரரிஸ்ட்.... என்ற கேப்ஷனோடு வெளியானது...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தவறான தகவல். அந்த படம் வெளியாக இருக்கும் நேரத்தில் தான் அவருக்கு இந்த நிகழ்வு நடந்தது. அதனை இந்த படத்தின் விளம்பரத்துக்காக பயன் படுத்திக்கொண்டார்.