பொதுவா தமிழ் திரைப்படங்களில் பேய் படம் பார்த்து பயப்படுவதற்கு பதில் சில நேரங்களில் சிரிப்பை வரவைத்து விடுவார்கள்...
அந்த அளவுக்கு பேயை
சிரிப்பு பொருளாக மாற்றும் வித்தை
தெரிந்தவர்கள்… மற்றும் புரிதல் அதிகம் உள்ளவர்கள் என்றும் சொல்லலாம்.
இன்னைக்கு வரைக்கும் பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்களில் நான் பார்த்து பயந்த திரைப்படம்
நெஞ்சில் ஓர் ஆலயம்.
அதே போல ரைட்டர் சுஜாதா எழுதிய கொலையுதிர்காலம் நால் படிச்சிட்டு பேய்க்கு பயந்து போய் இருக்கேன்.... அனால் கடைசியாக நானுத்தி சொச்சம் பக்கத்துல கடைசிபக்கத்துல அந்த முடிச்சை அவித்து
அடச்சீன்னு சொல்ல வைச்சி இருப்பார் வாத்தியார் சுஜாதா…
1980 மற்றும் 90 களில் தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை பேய் படம்னா....
மைடியர் லிசா மற்றும் 13 ஆம் நம்பர் வீடு யார்... போன்ற திரைப்படங்களை சொல்லலாம்
தமிழ் சினிமாவில் பேய் படம் எடுக்கறது ரொம்ப ரொம்ப ஈசி... கான்செப்ட் ரொம்ப
சிம்பிள்....நாலு பேர் சேர்ந்து ஒரு பொண்ணை ரேப் பண்ணுவாங்க... அந்த போராட்டத்துல குத்தி உயிறும்
கொலை உயிறுமா அந்த பொண்ணு இருப்பா .. அதுல ஒருத்தன் ஊமையா இருப்பான் அவன் அந்த பங்களா வாட்ச்மேனா கூட
இருக்கலாம்.. முதலில் அவன் வேணாம்ன்னு சொல்லுவான்.. வற்புறுத்தி அவனையும் அந்த பொண்ணை கற்பழிக்க சொல்லுவாங்க.. அவன் சபலபட்டு அந்த பொண்ணு மேல படுக்கும் போது ….அந்த பொண்ணு செத்துடுவா.. அதுக்கு
அப்புறம் இந்த நாலு பேரையும் எப்படி அந்த
பொண்ணு பேயா மாறி பழி வாங்கறா என்பதுதான் மீதிக்கதை...
ராம் கோபால் வர்மா இயக்கிய சக்ரவர்த்தி
மகேஷ்வசரி நடிச்ச தமிழ்லடப் ஆகி வந்த பேய்
அப்படின்னு ஒரு படம் பார்த்து இருக்கேன்....தெலுங்கில் தெய்யம்ன்னு நினைக்கறேன்...
அதன் பிறகு தமிதுல் சந்திரமுகி. அப்புறம் அனந்த புரத்து வீடு.. யாவரும் நலம். என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய
திரைப்படங்கள் வந்தன என்று சொல்ல வேண்டும்... யாமிருக்க பயமே அதுக்கு அப்புறம் இப்ப அரண்மனை..
ஆனா ஆங்கில படங்களில் ஈவில்
டெட், எக்சாசிஸ்ட், ஓமன் போன்ற திரைப்படங்கள் அக்காலத்தில் மிகப்பெரிய பயத்தையும்
தாக்கத்தையும் ஏற்படுத்தின என்றால்
மிகையில்லை…. வீடியோ லைப்ரேரியில் வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன்… ஒரு காலத்தில் இங்கிலிஸ் படம்னா அதுவும் பேய்
படம்னா ஈவில் டெட்தான்….
ஹயத் ஓட்டல் பிசாசு பிரஸ் மீட்... பேய் படம்னா மைடியர் லிசா, 13 நம்பர் வீடு போன்ற திரைப்படங்களை சொல்லலாம் அதன் கான்செப்ட் ரெப் அதன்
பின்பழிவாங்கும் கதையா இருக்கும் இந்த படம் எப்படி வித்தியசமான படமா இருக்கும்ன்னு சொல்லுங்க
என்று மிஷ்கினிடம் நான் கேட்ட போது.. இந்த பேயை இன்னும் நீங்க ரசிப்பிங்க
என்றார்..
அதே போல 1990 ஆம் ஆண்டு டெமி மூர் நடிப்பில் வெளியான
கோஸ்ட் என்ற திரைப்படம் முதன் முதலாக
பேய்க்கு பயப்படாமல் , அந்த ஆவியின் மேல் பரிதாபத்தை வரவைத்த திரைப்படம் அதுவாகும்…
நண்பன் சதியால் காதலன் இறந்து விட .. அந்த காதலன் தன் காதலியிடம் தன்னுடைய நண்பன் எப்படி துரோகம்
செய்து தன்னை கொன்றான் என்பதை
வெளிப்படுத்தும் அந்த காட்சியும் அந்த காதலும்
கவித்துவமாய் படம் பிடித்து இருப்பார்கள்.. அந்த படம் போல இது இருக்குமா?
என்று கேட்டேன்… அந்த படத்தை 200 மடங்கு
மேலாக இந்த திரைப்படம் இருக்கும் என்றார்…
பிசாசு படத்தோட ஒன்லைன்
என்னன்னு பார்த்துடலாம்..
ஊர் பேர் தெரியாத ஒரு பொண்ணு விபத்துல அடி படறா.. நாயகன் அவளை ஹாஸ்பிட்டல் போய் சிகிச்சைக்காக
சேர்க்கும் போது அவள் இறந்து விடுகின்றாள்..
அதன் பின் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் பிசாசு
திரைப்படத்தின் கதை.
ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு பிறகு இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வந்து இருக்கும் படம் பிசாசு.
சமுகவலைதளங்களில் அவர் மீதான சாடல்கள் நிறையவே இருக்கின்றது... அதற்கு அவர்
பேசி பேச்சுகள்தான் காரணம் என்றாலும்,
கொரிய திரைப்படங்களின் நகல் திரைப்படத்தை எடுப்பவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது
வைக்கப்பட்டாலும், அந்த கலைஞர்களுக்கு சமர்பணமாக அந்த காட்சிகளை என் சினிமாவில் வைத்தேன் என்று சொல்லி இருந்தாலும்.
மிஷ்கின் தன் வித்தியாசமான
திரை உத்தி மூலம் சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் அறியபபட்டவர்..
என்பது மட்டுமல்ல.. கேமரா கோணம், லைட்டிங். என்று அவர் படங்கள் மூலம் பிரேக் த ரூல்ஸ் உடைத்தவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.. ஒரு சீன்ல லோ ஆங்கில் ஷாட் இல்லாத காட்சிகளே இல்லைன்னு சொல்லிடலாம்.
படத்தின் முக்கிய நடிகர்களை பார்த்து விடுவோம்.
நாகா அறிமுக நடிகர்... நல்லாவே நடித்து இருக்கின்றார்... மிஷ்கின் வார்ப்பு
என்பது எல்லா செய்ல்களிலும் தெரிகின்றது. முக்கியமாக வயலின்
வாசிக்கும் போது அவரே வாசிப்பது
போல நடித்து இருப்பது.. நன்று.
பிரியங்கா அவர் திரைப்படத்தில் ஓரே காஸ்ட்யூமில்
வருவது பத்து நிமிடங்கள்தான்... இருந்தாலும் தன் கண்கள் மூலம் பேசி இருக்கின்றார்.... உதவி செய்பவனை அர்த்த புஷ்ட்டியோடு காதலாக பார்க்க
வேண்டும் என்று இயக்குனர் சொல்லியதைஅ அச்சரம் பிசகாமல் பார்த்து பரிதாபத்தை
வளர்த்து அதை தன் நடிப்பின் மூலம் திரைக்கு கடத்தி இருக்கின்றார்…
அந்த ஒற்றை செருப்பும் சரி
ஆட்டோவில் ஒற்றைகாலில் ஜொலிக்கும் செருப்பும் சரி… நிறைய கதைகளை சொல்கின்றன..
படத்துல ரொம்ப கம்மியான ஆட்கள்தான்... அந்த சுரங்க நடை பாதை பாட்டும் அதில்
வரும் வயலின் இசையும் அடுத்த அடுத்த காட்சிகள் என்று திரைப்படம் ஒடினாலும் இன்டர்வெல் வரை அந்த வயலினும் அந்த பாட்டும் நெஞ்சில் அசை போட வைக்கின்றார் புதுமுக இசையமைப்பார் அருள் கொரலி. அதே போல அறிமுக பாடலாசிரியர் தமிழ்ச்சி தங்கபாண்டியன்
பாடல் வரிகளும் அசத்துகின்றன என்றே சொல்ல வேண்டும்...
ஒரு பைட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சுரங்க பாதை பைட் ஒரு நல்ல உதாரணம்... சித்திரம் பேசுதடி படத்துல
ரிஜிஸ்டத் ஆபிஸ்ல நரேன்கிட்ட வம்புக்கு வரும் அதே கேரக்டர் மிஷ்கினின் எல்லா படத்திலும் தலை காட்டுகின்றார்...
நல்லா நடிப்பார்.. இந்த படத்துல வரும் அந்த கூரங்கபாதை சண்டையில முதுகுல குத்திட்டு மறைஞ்சி மறைஞ்சி
போய் நின்னுக்குட்டு பீர் பாட்டில் குத்து வாங்குவரே அவர்தான்..
ரவிராய் ஒளிப்பதிவு கணக்கச்சிதம்... முக்கியமா பீர் பாட்டிலோடு உடைந்த
கொட்டும் இடம்....நைட்டு எபெக்ட்ல
ஐஸ் பெக்ட்ரியில் காரை சத்தி விழல் ஆடும் அந்த காட்சி....வீட்டுக்குள்ள இருக்கற இன்டோர் லைட்டிங் எல்லாமே ஏ கிளாஸ்.. அது மட்டுமல்ல டிரிபிள்ஸ் போற பைக்குல பின்னாடி போற கேமரா.. கார்ல அப்பார்ட்மென்ட் உள்ளாற நுழையும் போது..லோ ஆங்கிலில் பில்டிங் காமிக்கும் இடம் என்று ரசிக்க
வைக்கின்றார்.
அதே போல நாகாவோட அம்மா கேரக்டர்... இவ்வளவு அழகான அம்மாவை தமிழ்சினிமா
பார்த்ததே இல்லை என்று சொல்ல வேண்டும்... கல்யாணி நடராஜன் ரொம்ப இயல்பாக செய்து
இருக்கின்றார்… முதல் பாதியில் தியேட்டரை கலகலக்க வைப்பவர்கள் பேய் ஓட்ட வரும் பெண் டீமும்
அந்த மொட்டை அசிஸ்டென்டும்.. பின் பகுதியில் திருட வரும் பிளாட்டோ கேரக்டர்
செய்யும் சேட்டைகள்.. பிசாசு படத்தின்
சிரிப்பில் ரிலிப் கொடுப்பவர்கள் என்று சொல்ல வேண்டும்...
======
படத்தின் டிரைலர்..
=======
படக்குழுவினர் விபரம்.
Directed by Mysskin
Produced by Bala
Written by Mysskin
Starring Naga
Prayaga Martin
Harish Uthaman
Music by Arrol Corelli
Cinematography Ravi Roy
Edited by Gopinath
Production
company
B Studios
Distributed by Sri Thenandal Film
Release dates 19-Dec-14
Country India
Language Tamil
========
பைனல் கிக்.
பேய் இருக்கா இல்லையா..,? கடவுள்
இருக்கின்றாரா? இல்லையா என்பது போலத்தான்.. நம்பிக்கை சார்ந்த விஷயம்.,. அதை வைத்துக்குகொண்டு
மிஷ்கின் அருமையாக ஹாரர் சஸ்பென்ஸ் திரில்லர் டைப்பில் இந்த படத்தை கொடுத்து
இருக்கின்றார். மிஷ்கின் நரேனில் இருந்து நாகா வரை ஒரே மாதிரியான நாயகர்கள் நின்று ஒரு
இடத்தை வெறித்து பார்த்துக்கொண்டு அதன் பின் முடிவெடுக்கும் அந்த கிளிஷே காட்சிகளை
தவிர்த்து இருக்கலாம்…
கண்டிப்பா இந்த படம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதில் ஐயம்
இல்லை..
ஆயிரம்தான் சர்ச்சைகளில் மிஷ்கின் சிக்கினாலும் அவர் ஒரு சிறந்த கலைஞன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை… உலக திரைப்படங்களுக்கு இணையான காட்சிகள் தமிழ் திரையுலகில் காட்சிகள் மூலம் கேமரா கோணங்கள் மூலம் தமிழ் ரசிகர்ளுக்கு கடத்தியவர் அவர் என்றால் அது மிகையில்லை…
சமகால தமிழ் திரையுலகில் அவரளவிற்கு தன் திரைப்படங்களில் லென்தி ஷாட் மற்றும் லோ ஆங்கில் ஷாட்டுகள் அதிக அளவில் பயண்படுத்திய இயக்குனர் எனக்கு தெரிந்து யாருமில்லை என்பேன்… தன் முதல் படத்தில் இருந்து இன்று வரை தன் திரைப்படங்களில் தான் நினைக்கும் ஷாட்டுகளை வைத்து பார்வையாளனை தன் திரைப்படம் என்றால் தனித்து தெரிவது போல பழக்கப்படுத்தி வைத்து இருப்பது மிஷ்கினின் திரையுலக சாதனை என்பேன்..
இதே லென்தி ஷாட்டுகளை எந்த அறிமுக இயக்குனர் வைத்தாலும் படம் போர் என்று ரசிகர்கள் கூச்சலிட வாய்ப்புள்ளது… என்பதால் தன் படத்துக்கு வரும் பார்வையாளனை தான் ரசிப்பது போலே கமர்ஷியில் ரசிகனையும் ரசிக்க வைத்த பெருமை மிஷ்கினையே சாரும்… பிசாசு மிஷ்கினுக்கு மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி திரைப்படம் என்று சொல்லுவேன்.
வாழ்த்துகள் மிஷ்கின்…
முதலில் பிசாசு திரைப்படத்தின் வீடியோ விமர்சனம்…
இனி இந்த கொடுமையை அனுபவிச்சே ஆகனும் வேற வழியில்லை நண்பர்கேளே…. நன்றாக இருந்தால் வீடியோவை ஷேர் செய்து ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
======
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு எழரை
நன்றி.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
--இன்னைக்கு வரைக்கும் பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்களில் நான் பார்த்து பயந்த திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.---
ReplyDeleteஜாக்கி சேகர்,
நீங்கள் சொல்லவந்தது ஸ்ரீதரின் திகில் படமான நெஞ்சம் மறப்பதில்லையாக இருக்க வேண்டும். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் பயப்படும் அளவுக்கு எதுவும் அவ்வளவு மோசமில்லை.
-// படத்தோட ரேட்டிங்
ReplyDeleteபத்துக்கு எழரை//- சனி பெயர்ச்சி ?
அது நெஞ்சில் ஓர் ஆலயம் இல்லை. நெஞ்சம் மறப்பதில்லை பாஸ்!!
ReplyDelete"அதன் பிறகு தமிதுல் சந்திரமுகி. அப்புறம் அனந்த புரத்து வீடு.. யாவரும் நலம். என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய திரைப்படங்கள் வந்தன என்று சொல்ல வேண்டும்"
ReplyDeleteEeram movie vittuteengale Jackie.
நல்லது ஜாக்கி
ReplyDeleteஆனால் இது எந்த கொரியன் படத்தின் காப்பி
என்பதை குறிப்பிடவில்லையே ?
லாங் ஷாட் அது இது என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள் !
எதுவுமே அவர் சரக்கு கிடையாது .மிஷ்கின் இன்னும் திருந்தவில்லை !
ஹாங்காங் , கொரியன்,மொழிகளில் வந்த படம் தான் .

மிஷ்கின் திருந்துகிறதா?
ReplyDeleteஹூகும் ...... திரும்பவும் காப்பி அடித்து மாட்டி கொண்டார்
இயக்குனர் பாலா வின் பணம் போயிற்று ......
DEVIL TOUCH, Heavenly Mission, Bunshinsaba 2 , The Chaser OST - Chase 1,
இந்த படங்களின் கலவை தான் !

பத்துக்கு 'எழரை' ithu ethavathu Kuriyeedaa Jacki??
ReplyDeleteபார்க்க வேண்டிய படம் for Mysskin
ReplyDeleteஅமெரிக்க கொடி டிசைனில் பனியன் போட்டு வருபவருக்கு என்ன குறியீடு?
ReplyDeleteஅருமையாக நடித்திருந்த ராதாரவி பற்றி ஒன்றுமே கூறவில்லையே!
ReplyDelete