சந்திரபாபுவுக்கு வந்த சத்திய சோதனை.

 இருக்கும் நாலு முடியை ஒதுக்க  சலூனுக்கு  சென்று  மாதத்துக்கு  125 ருபா  தண்டமாக கொடுப்பது என் இயல்பு...  

தலையில் எந்த புதுமையும்  செய்யலாம் என்று ஆசை இருந்தாலும்  இறைவன் கொடுத்த வாய்ப்பை பறித்து விட்ட காரணத்தால் மீசை மற்றும் கிருதாவில் எதையாவது கொடுக்கும் காசுக்கு எதையாவது செய்ய சொல்லி பார்ப்பதும்  பார்பரை செய்ய சொல்லி இம்சிப்பதும்  என் இயல்பு. மீசை கண்ணில் பட்டது...

 அதற்கு முன் பார்பர்கள்  வேலையை பற்றி தெரிந்துக்கொள்வோம்...

பொதுவாக காலையில்  அவசரஅடிதான்  ஜெட்லியே தோத்துக்குவான்... அந்த அளவுக்கு அடிச்சி ஆடுவாங்க..

காலைவேளைகளில் பிசியாக இருக்கும் போது எனக்கு  கட்டிங் ஷேவிங் செய்ய... ஐந்து நிமிடம் எடுத்துக்கொள்வார்கள்.. சில நேரம் ஷேவ் செய்து விட்டு ஆப்டர் ஷேவ் லோஷன் கூட தடவமாட்டார்கள்..  தடால் என   துண்டு உதறி அவ்வளவுதான் சார் என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அடுத்த ஆளை அழைப்பார்கள்..


அதனால் பார்ப்ர் ஷாப் செல்ல உகந்த நேரம்  எது தெரியுமா?


 சரியாக மதியம் நேரம்தான்..


மதியம் பார்பர்  சாப்பிட்டு விட்டு  அரைமணி  ரேஸ்ட்டு  எடுத்து விட்டு,  மூன்று மணிக்கு எதாவது கிராக்கி வருகின்றதா? என்று பார்பர்  வழிமேல் விழி  வைத்து வாசலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது கிருஷ்ணபரமாத்மாவாக ஸ்டாப் பிளாக்கில் பார்பர் எதிரே  தரிசனம் கொடுப்பது என் வழக்கம்.


 அந்த நேரத்தில் சென்று பாருங்கள்..


பார்பர்  பெரிய கோவில் சிற்பி போல செதுக்குவார்... நாலு முடி இருக்கும் எனக்கே இப்படி என்றால் முடி இருப்பவர்கயே யோசித்துக்கொள்ளுங்கள்.. சான்சே இல்லை.. கிடைத்த ஆள்  ஒரு ஆள்...

மதியம் சாப்பிடட் தூக்கம் கண்ணில் எட்டி பார்க்கும்..


 அதனால் சிற்பி போல செதுக்கு தள்ளுவார்கள்... காலையில் ஒரே ஒரு முறை  நுரைபோட்டு அவசரத்தில் ஷேவ் செய்தால் மதியத்துக்கு மேல்  இரண்டு முறை நுரை போட்டு பளபளப்பாக ஷேவ் செய்து தள்ளுவார்கள்...


ஓகே லெட் மீ கம் டூ த பாயிண்ட்.


 மீசையில் அடர்த்தியை குறைக்க  சொன்னேன்.. அவன் அடர்த்தியை  குறைத்தான்... 


சரியாக ஒன்றரை நிமிடத்துக்கு என் மீசையை  சிற்பி போல செதுக்கினான். இருக்கும் இரண்டு நரை முடியை தொல் பொருள் ஆராட்சியாளன் போல  தேடி நறுக்கினான்..


துண்டு உதறி காசு வாங்கி அனுப்பினான்.. சிற்பி போல  செதுக்கியமைக்கு இருபது ரூபாய் சேர்த்து கொடுத்து விட்டு வீடு வந்தேன்...


 நல்லா இருக்கு... நல்லா இல்லை என்று எப்போதுமே பார்பர் ஷாப் பிரவேசம்  சென்று வந்தால் வீட்டம்மா  கருத்தை  உதிர்பது வழக்கம்..


 வீட்டம்மா பீட் பேக்குக்கு ரொம்ப ஆர்வமாக காத்திருந்தோடு  ஒரு ரோமாண்டிக் லுக் விட்டேன்...


பாராட்டுக்கு பதில் திட்டு விழ ஆரம்பித்தது நானே எதிர்பார்க்காத ஒன்று...

 ஏன்யா.. உன்கிட்ட ஒரு விஷயம் பிடிக்குதுன்னு சொன்னா  அதை  நாஸ்த்தி பண்ணிக்கிட்டு வர்ரதே  உன் பொழப்பா போச்சி.. எதுக்கு மீசையில கை வைக்க சொன்னே...

 நல்லாயில்லையா??

மண்ணாங்கட்டி, கேவலமா இருக்கு...


 அவ்வளவு மோசமாவா இருக்கு..??

ஆமாம்...

சிற்பிக்கு 20 ரூபாய் கொடுத்து  ஆப்பு வச்சிக்கிட்டேனே என்று மனது சொல்லியது..

சரி எப்படிம்மா இருக்கு..?? என்று கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டு கேட்டேன்..இரண்டு பேர்  கண் தெரியாம ஒரு படத்துல  இருப்பாங்களே...

ராஜபார்வை..

சனியனே அதுல கமலுக்கு மட்டும்தான் கண் தெரியாது..

ஆமாம்ல...

ரயில் ஸ்டேஷன் படிக்கட்டு குச்சி வச்சி தட்டிக்கிட்டு இரண்டு பேரு...

ஆங்.... குக்கூ...

கரெக்ட்..

 சரி அதுல யார் போல இருப்பேன்... ( எனக்கு ஆர்வம் தாண்டவமாடியது)

அதுல ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டு ஒருத்தன் உதை வாக்குவானே...


ஆமாம் சந்திரபாபு கேரக்டர் போல...


ஆங்.. அதேதான் அந்த ஆளு மீசை போல இருக்கு...
அட தேவுடா... சந்திரபாபுவுக்கு வந்த சத்திய சோதனையா இது..????
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

26/10/2014

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS..
 

2 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner