கருப்பு.

நான் ஆசைப்பட்டு கட்டிகிட்டதும்… நான் தவமாய் தவம் இருந்து பெத்ததும் சேர்ந்து….




டாக்சி பார் ஷூயூர்ல பெருங்குடி வரைக்கும் போய் இருக்குங்க…
நான் பெத்ததுதான் முதல்ல ஆரம்பிச்சி இருக்கு…

அம்மா டாக்சி டிரைவர் கருப்பா இருக்கார்… ((இப்ப எல்லாம் கலர் பத்தி எல்கேஜியிலயே பசங்க பேசிக்கறதுதான் கொடுமை))

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது யாழினி… கலரை மென்ஷன் பன்னிபேசக்கூடாது.. பேட் கேர்ள்ஸ்தான் மனுஷங்க கலர் பத்தி பேசுவாங்க…
இத்தோடு பேச்சை முடித்துக்கொண்டு சென்னை பெருநகர போக்குவரத்தை கார் கண்ணாடி ஐன்னல் வழியாக பார்த்து தொலைத்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை… அல்லது இந்த பதிவை எழுதும் வேலையும் எனக்கு வந்து இருக்காது… அல்லது எனது குமுறலையும் இப்படி வெட்ட வெளியில் கொட்டி இருக்க மாட்டேன்.


அப்படியே விடாம நான் கட்டிக்கிட்டது ஆர்வக்கோளாறுல ஆரம்பிச்சி இருக்கு...


சரி யாழினி......உங்க அப்பா என்ன கலர்..??


அப்பா அழகும்மா…


உங்க அப்பா கருப்பு இல்லையா?-??


அம்மா அப்பா புரவுனிஷ் கலர்ம்மா… என்று என் தவம் கடைசி வரை தன் தகப்பனின் இமேஜை காக்க போராடி இருக்கின்றது..


ஆனால் இதயத்தில் ஈரம் இல்லாமல் நான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்டது சொல்லியதுதான் என் நெஞ்சையே வெடிக்க செய்தது….


யாழினி குட்டி.... அம்மா உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா?
சொல்லும்மா..

இந்த டாக்சி டிரைவரை விட உங்க அப்பா கருப்புதான்….

டொம்….

என்ன சத்தம்ன்னு கேட்கறது புரியது…… என் சின்ன இதயம் வெடிச்ச சத்தம்தான்…

என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா??? டாக்சி டிரைவர் முன்னாடி எல்லாம் என் மானத்தை வாங்கறிங்களேம்மா..




உடைஞ்ச லிட்டில் ஹார்ட் இதயத்துடன்
ஜாக்கிசேகர்.
23/12/2014




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. ஆஹா சூப்பர் . கற்பனை என்றுதான் நினைக்கிறேன்,

    ReplyDelete
  2. //என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா???//

    :-)


    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner