ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்.

நேற்று இரவு நண்பர் புருனோவின் மனைவி மரித்த செய்தி அறிந்து துடித்து போய்விட்டேன்...

இளம் வயதில் மரணம் ரொம்பவும் கொடுமை...

புருனோ எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்து இருக்கின்றார்.... பெரிய பெரிய பிரச்சனைகளில் பதிவுலகத்தினர் சந்தித்த போது ஒரு நண்பனாக தோழனாக தோள் கொடுத்து இருக்கின்றார்.


இன்று மருத்துவமனையில் கூடிய கூட்டமே அதற்கு சாட்சி. டாக்டர் புருனோ இன்றுவரை தனியார்மருத்துவமனையில் பணிபுரியாது அரசு மருத்துவமனையிலேயே பணி செய்துக்கொண்டு இருப்பவர்...

நான் பதிவுலகில் ஒரு காலத்தில் எல்லாத்துக்கும் வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்த போதும் சரி...ரவுண்ட் கட்டி என்னை கார்னர் பண்ணிய போதும் சரி... 
நண்பர் புருனோ போன் செய்து...

ஜாக்கி எல்லாரும் உங்களை ரவுண்ட் கட்டி இருக்காங்க.... படிச்சவன் மட்டும்தான் எழுதனும் அப்படின்ற பிம்பத்தை உடைச்சி ரொம்ப குறுகிய காலத்தில் நிறைய பேரை சம்பாதிச்சிட்டிங்க... அந்த பொறாமைதான் எல்லாத்துக்கும் காரணம்.. பதில் பேச வேண்டாம்... நீங்க எப்பவும் போல புறக்கணிக்க பழகிக்கோங்க என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லி என்னை திசை திருப்பி விட்டவர் அவர்தான்..

ஏதாவது பிராபலமா... மனசு விட்டு அவர்கிட்ட என்ன வேனா பேசலாம்.. அப்படிபட்ட ஆள்... திருமணம் முடிந்து செட்டில் ஆக வேண்டும் என்று பிரிந்து வேவ்வேறு ஊர்களில் புருனோ தம்பதிகள் தங்கள் பணிகளை செய்து பிரிந்து காத்திருந்தனர்.. வாழ்க்கையில் செட்டில் அகும் நேரத்தில் அந்த காலனுக்கு பொருக்கவில்லை.

டாக்டர் புருனோவின் மனைவி அமலி புருனோ நேற்று மதியம்கூட இப்படி ஒரு அசம்பாவிதம் தனக்கு நடக்கும் என்று துளியும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்... ectopic pregnancy யால் ஏற்பட்ட திடீர் உதிரப்போக்கில் ஏற்பட்ட sudden collapse அவரது உயிரைப் பலிகொண்டு விட்டது...

இதில் பெரிய கொடுமை கணவரும் மருத்துவர்.. மனைவியும் மருத்துவர், அவர்கள் குடியிருந்த வீட்டு ஓனர்களும் மருத்துவர்களே.. ஆனாலும் கையறு நிலை.... யோசனை செய்யக்கூட நேரம் கொடுக்காத காலனின் கயவாளிதனம் இது என்றால் அது மிகையில்லை.....15 நிமிடத்துக்குள் முதலுதவி செய்ய வேண்டுமாம்...

டாக்டர் புருனோ அப்போது மருத்துவமனையில் பணியில் இருக்க... டாக்டரின் மனைவியும் மருத்துவர் என்பதால் அவரும் பணி முடிந்து நேற்று மாலை குளிக்க சென்றவர் குளியல் அறையில் மயங்கி சரிய... உதிரபோக்கு அதிகமாகி அவர்கள் 108க்கு போன் செய்து அரசு மருத்துவமணைக்கு அழைத்து வந்து இறந்த காரணத்தால் அது போலிஸ் கேஸ் ஆகி விட்டது..

தம்பி பாலாவிடம் ஒரு பெண் மருத்துவர் பேசிக்கொண்டு இருக்கும் போது சொன்னார்... எத்தனையோ உயிர்களை அந்த கை காப்பாத்தி இருக்கும் ஆனா அவுங்க சம்சாரத்தை காப்பாற்ற ஒரு சின்ன வாய்ப்பை கூட அது வழங்கலையே என்று அங்கலாய்த்தார்..

அந்த அங்கலாய்ப்பில் உண்மை இல்லாமல் இல்லை.

உன் ஆத்மா சாந்தி அடையட்டும் சகோதரி...முன்னை விட அதிக மிருக பலத்தோடு என் நண்பர் புருனோ இந்த பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

 1. மிகவும் வருத்தமான செய்தி! மருத்துவர்களாய் இருந்தும் மரணம் அவரை வென்று விட்டது மிகப்பெரும் சோகம்! ஆழ்ந்த இரங்கல்கள்!

  ReplyDelete
 2. ஆழ்ந்த இரங்கல்!

  ReplyDelete
 3. Heard of Mr.Bruno.. Hard to understand the life. My condolence to bruno & his family...

  ReplyDelete
 4. என் கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தன ,, எனக்கு உங்கள் எழுத்தை படித்த பிறகு .. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் .. டாக்டர் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையும் இல்லை .....

  ReplyDelete
 5. மிகவும் வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner