யாழினி அப்பா (01/11/2014)




மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றேன்...



யாழினிக்கு காலையில் ஒரு பர்ஸ் எடுத்து வந்து என்னிடத்தில் காசு கேட்டாள்... நான் பத்து ரூபாய்  பணம் கொடுத்தேன்... அதை பர்சில்  பத்திரபடுத்திக்கொண்டு இருந்தாள்...

 தேவி தியேட்டர் பின்னே இருக்கும் எல்லிஸ் ரோட்டில் இன்று கொஞ்சம் வேலை இருந்தகாரணத்தால்... நானும் யாழினியும் அங்கு சென்றோம்..

கிளம்பும் போதே பர்சேசுக்கு  செல்லும்  பெரிய மனுஷி போல  பர்ஸ் எடுத்து வைத்துக்கொண்டாள்...



மதியம் நேரம் என்பதால்   பசி வயிற்றை கிள்ளி எடுக்க எல்லிஸ் ரோட்டில் இருக்கும்  புதூர் மெஸ்சில் இருண்டு பேரும்  ஒரு கட்டு கடினோம்...

பர்சை எந்த இடத்திலும் வைக்க வில்லை... பத்திரமாக மடியிலேயே வைத்து இருந்தாள்... தியேட்டரில் டிக்கெட் கவுண்டர் பார்கிங் என்ற எங்கே டிக்கெட் எடுப்பதாக   இருந்தாலும்,  பேருந்து, ரயில்  டோல் என்று எங்கே நுழைவு சீட்டு என்றாலும் யாழினிதான் எடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பாள்...

மேஸ்சில் ஒரு பையன் என்ன வேண்டும்?? என்ன வேண்டும்??? என்று கேட்டு, கேட்டு  சாப்பாடு போட்டான்.... அவனுக்கு   பணம் கொடுக்கவேண்டும் என்று சாப்பிடும் போதே  நினைத்துக்கொண்டேன்...

யாழினி மோர் கேட்க.... டம்பளரில் எடுத்து வந்து  கொடுத்தான்... சர்வர்களில் சிலர் மட்டுமே தன் செய்யும் வேலையை ரசித்து செய்கின்றார்கள்... சிலர்  கடமைக்கு  வேலை செய்வார்கள்..

அது மட்டுமல்ல 15 நாள் சர்வர்வேலையை நான் சென்னையில் செய்த காரணத்தால் எந்த உணவகமாக இருந்தாலும் நன்றாக இருந்தாலும் நன்றாக இல்லாவிட்டாலும்  சர்வருக்கு பணம் கொடுத்து விட்டு வருவது வழக்கம்...

சாப்பிட்டு முடிந்து கைகழுவி  வாய் துடைத்து  பணம் எவ்வளவு என்று  பில் கவுண்டரில் கேட்டேன்....

150 ரூபாய் பாய் என்றார் கடைக்கார பாய்..

நான் பர்ஸ் பிரித்து 140 ரூபாய் கொடுத்துவிட்டு யாழினியை அழைத்தேன்... யாழினி அங்கிள் சாப்பிட்டதுக்கு பணம் கேட்கிறார்  கொடும்மா என்றேன்..

 என்கிட்ட பணம் இல்லப்பா என்றாள்...

கொடுத்த பணம் எங்கே என்று திட்டினேன்..

அதற்குள் பர்ஸ் பிரித்து பணம் கொடுத்தேன்... பர்ஸ் வச்சிக்க துப்பில்லை எதுக்கு பர்ஸ் என்றேன் கோபமாக.. இல்லைப்பா நீங்க கொடுப்பிங்க இல்லை அது போல நமக்கு சாப்பாடு போட்ட அண்ணாவுக்கு  அந்த பணத்தை  கொடுத்துட்டேன் என்றாள்..

சர்வ் செய்துக்கொண்டு.... வேலை மும்முரத்தில் இருந்த சர்வர் பையனை அழைத்தேன். சார் நீங்க கொடுத்து  அனுப்பிய பத்து ரூபாய் பாப்பா கொடுத்துடுச்சி ரொம்ப  தேங்ஸ் என்றான்..

  நான் எங்கே கொடுத்தேன்.. அவளாகவே கொடுத்தாள் என்று மனதில் நினைத்தக்கொண்டு ஒரு புன்னகையை அவனிடத்தில் வீசிவிட்டு  நான் யாழினியை தூக்கி முத்தமிட்டு  நடந்தேன்..


அது பார்ப்பவர்களுக்கு சாதரணநடையாக இருக்கலாம்.. ஒரு அப்பனாக ஒரு பெருமைக்குறிய நடை அதில் இருப்பதை  நான் நன்கு உணர்ந்தேன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
01/11/2014

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 


8 comments:

  1. அருமையாக குழந்தையை வளர்த்திருக்கின்றீர்கள்...வாழ்த்துகள்

    ReplyDelete
  2. முகநூலிலும் படித்தேன்! உங்கள் மகளின் குணம் பொற்றத்தக்கது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. யாழினிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
    நல்ல பழக்கங்களோடு பிள்ளைகள் வளர்வது மிகவும் சந்தோஷமான விஷயம்...

    ReplyDelete
  4. விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்?

    ReplyDelete
  5. Nalla pazhakka valakkam. Friends how to type in Tamil from android mobile ?

    ReplyDelete
  6. Replies
    1. அன்புள்ள நண்பருக்கு,
      யாழினிக்கு மிக நல்ல பழக்க வழக்கங்களையே கற்றுத் தருகின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு தங்களின் தாய் தந்தையே ஆதர்சம், குரு எல்லாம். என் மகளுக்கு 21- மாதம். எல்லாவற்றிலும் என்னை imitate செய்கின்றாள். பார்க்க பார்க்க சந்தோசமாகவும் இருக்கிறது; அதே சமயம், 'சற்று கவனமாகவும் இருக்கவேண்டும்' என்று தோன்றுகிறது.

      என் மாமியாரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு நல்ல பழக்கம் என்னவெனில் restaurant -ல் சாப்பிடும் பெரும்பாலோர் supplier /server - ஆகியவருக்கு tips கொடுப்பார்கள். ஆனால், சாப்பிட்டு முடிந்தவுடனேய வந்து இலையை எடுத்து டேபிளை சுத்தம் செய்யும் cleaner போன்றோருக்கு அனேகமாக யாரும் டிப்ஸ் கொடுப்பதில்லை. cleaner -கள் பெரும்பாலும் வயதான பெண்மணிகளாகத்தான் இருப்பார்கள். சம்பளமும் இவர்களுக்கு மிகக் குறைவானதாகத்தான் இருக்கும். நானும் என் குடும்ப உறுப்பினர்களும் இது போன்ற cleaner -களுக்கு மிகக் கணிசமான டிப்ஸ் கொடுப்போம். எங்கள் டேபிளை clean பண்ணாதவர்களுக்கும் கொடுப்பதும் வழக்கம். அவர்கள் முகத்தில் பெரிய சந்தோசம் கலந்த ஆச்சரியம் தெரியும்.

      அடுத்த முறை இந்தியா வரும்போது யாழினியை சந்திக்க விருப்பம். பார்க்கலாம் எப்படி சந்தர்ப்பம் அமைகிறது என்று.

      Delete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner