வலி பொதுவானது
யாழினிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு ...  வீட்டை கூட்டி பெருக்கி,சமையல் கட்டில் இருந்து வெளியே வந்து சொன்னாள்...


ஏங்க நடுமுதுகுல பயங்கர வலி...


மயிறு...அப்படி இன்னா  வெட்டி கிழக்கற வேலை  செஞ்சிட்டே  என்று கிராமத்து  மனது  மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டது....


அவள் சொன்ன வார்த்தையை காதில் வாங்கிக்கொள்ளாமல்.... கம்யூட்டரில்  ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேடிக்கொண்டு இருந்தேன்..

நேற்று மாலை போன்...


கிளைன்ட்  மீட்டிங் இருக்கு வர  லேட் ஆகும் என்றாள்...


வீட்டை பெருக்கினேன்....

இரண்டு நாள் சேர்ந்து போன  பத்து பாத்திரங்களை கழுவினேன்...

முந்தாநாள் யாழினி செய்த அட்ராசிட்டியால் பால் வழிந்து காய்ந்த போன சமையல் மேடை  மற்றும் கேஸ் ஸ்டவ்வை பார்ட் பார்டாக கழட்டி கடையில் வாங்கிய  புது ஸ்டவ்  போல துடைத்து மாற்றினேன்...

டிரையரில் போட்ட துணிகள் காய்ந்து விட்டதாக  வாஷிங் மெஷின் சத்தம் போட, கொடியில் காய்ந்த துணிகளை எடுத்து வந்து போட்டுவிட்டு , வாஷிங்மெஷினில் இருந்த  உலர்ந்த துணிகளை  எடுத்து  கொடிகளில் உலர்த்தினேன்..

 யாழினிக்கு டிவியில் சோட்டா பீம் போட்டு விட்டு, தோசை மாவு  வாங்கி வந்து அவளுக்கு  இரண்டு வார்த்து மொளகா பொடியை நெய்யில் குழைத்து கொடுத்தேன்...

எனக்கும், மீட்டிங் முடிந்து வருபவளுக்கும்  என  எட்டு தோசைகள் வார்த்து ஹாட் பேக்கில் நிரப்பினேன்... (அதில் மொளகாபொடி  தோசை மேல் துவிய  இரண்டு தோசைகள் அவளுக்காக  சுட்டு போட்டேன்)

 யாழினி சாப்பிட்டு விட்டு வாய் துடைத்து..  மீத  தோசை மாவை பிரிட்ஜில் வைத்து விட்டு, யாழினி லஞ்ச் பேக்கில் இருக்கும் பாத்திரங்கள் மற்றும்  அவள் சாப்பிட்ட பாத்திரங்களை  கழுவி, சின்க்கிள் அடைப்பு நீக்கி குளம் போலே  தேங்கிய தண்ணீரை வெளியே அனுப்பி...

சிங்கை துடைத்து, சமையல் மேடையை துடைந்து விட்டு, அழுக்கான துணியை அலசி பிழிந்து , இரண்டு உதறு உதறி வேர்வை வழிய  நிமிர்ந்தேன்..

.மனைவி சொன்னது போல்.... என் நடுமுதுகும் விண் என்று வலிக்க  ஆரம்பித்தது...


ஜாக்கிசேகர்
11/11/2014நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
EVER YOURS...

3 comments:

 1. தனக்கு வந்தால் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்?

  ReplyDelete
 2. முகநூலிலே வாசித்தேன் அண்ணா.
  நானும் எல்லா வேலைகளிலும் உதவியிருக்கிறேன்...
  ஒரு நாளே நமக்கு வலி தருகிறது என்றால்...
  தினம் தினம் நினைத்துப் பார்த்து அவர்களைப் போற்றுவோம் அண்ணா...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner