பெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட் பக்கிங்க... ஜாக்கிரதை மக்களே...





பெருங்களத்தூர் ஒரு முக்கிய ஜங்கஷனாக உருவெடுக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்கள்..


முக்கியமா என்றைக்கு மதுரவாயல் பைபபாஸ் தொடங்கியதால்  கோயம்பேடு செல்லும் பேருந்துகள் நகரத்தினுள் நுழையாமல் பைபாஸ் சாலையில் செல்ல ஆரம்பித்ததோ...??

என்றைக்கு தென்மாவட்ட பேருந்துகள்... கோயம்பேட்டில் இருந்து கிளம்பி.... வடபழனி கிண்டி தாம்பரம், வழியாகக  செல்லாமல் பைபாஸ் வழியாக செல்ல ஆரம்பித்ததோ.. அன்றில் இருந்து பெருங்களத்தூர் ஜங்ஷன் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற ஆரம்பித்தது....



அன்றில் இருந்து இன்று வரை குரோம்பேட், பல்லாவரம், தாம்பரம் மடிப்பாக்ம், மேடவாக்கம்   பெருங்குடி  பகுதி மக்கள் என எல்லோரும் பெருங்களத்தூர் பஸ்ஸ்டான்ட் சென்று  பேருந்து பிடிப்பதையே வழக்கமாக வைத்து இருக்கின்றார்கள்...


காரணம்  கோயம்பேடு சென்று பேருந்தில் ஏறி அது  பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியேறி பைபாஸ்ஸ பிடிப்பதற்குள் ஒரு மணி  நேரத்துக்கு மேல் ஆகி விடும் என்பதால் கிண்டியில் இருந்து கோயம்பேடு செல்வது  பயண நேரத்தை  அதிகரிக்கும் என்பதால் பெருங்களத்துதூர் பேருந்து ஜங்கஷன் அதிக முக்கியத்துவம் பெருகின்றது.


ஏரியாக யாரும் சீந்த ஆளில்லாமல் இருந்து  இந்த இடம் இன்று நச நச என மக்கள்  நெரிசலில் சிக்கி தவிக்கின்றது என்பதே  உண்மை.


தினமும் திண்டிவனம், விழுப்புரம் பயணம் செய்பவர்கள்,மறைமலைநகருக்கு வேலைக்கு செல்வபர்கள், இருநாள் பயணமாக தென்மாவட்டம் செல்பவர்கள் என் அத்தனை பேரும் ஒன்று கூடி கும்பி அடித்து பேருந்து  பிடிக்கும் ஒரேஇடம் பெருங்களத்தூர் ஜங்ஷன்தான்.
அதனாலே தற்போது பெருங்களத்தூர் ஸ்டேஷன் நட்சத்திர அந்தஸ்த்து   பெற்று விட்டது.. இன்னோரு காரணமும் இருக்கின்றது...ரயில்வே ஸ்டேஷனும் பேருந்து நிலையமும் இணைந்த இருப்பதும் இதன் சிறப்பு அம்சம்..


பெருங்களத்தூர் சுற்றுப்பட்டு கிராமத்து மக்கள் மற்றும்  கிண்டி,பல்லாவரம்,தாம்பரம் சுற்று வட்டார மக்கள் எல்லோரும்  வண்டி எடுத்து சென்றால்  அரசின்  அதிகாரபூர்வமான வாகன  நிறுத்தம் பெருங்களத்தூரில்  இல்லவே இல்லை.. சரி ஆட்டோ கட்டணம் சரியாக இருந்தால்  ஆட்டோவில்  போய் தொலைக்கலாம்.. என்றால்... என்னதான் ஆட்டோ கட்டணத்தை அரசு விடாக்கண்டனாக முறை படுத்தினாலும் ஆட்டோக்காரர்கள் மனது வைக்காமல் இது சாத்தியம் இல்லை என்பதால் பைக்கில்  பெருங்களத்தூர் சென்று பைக் பார்க்கிங்ல் பைக்கை போட்டு விட்டு செல்வது  ஒன்றே சென்னை வாசிகளின் தலையெழுத்து...


ஆனால் பெருங்களத்தூரில்  சின்ன சின்ன இடங்களை எல்லாம் பைக் பார்க்கிங் என்று வைத்துக்கொண்டு பெருங்களத்தூரில் அடிக்கும் அட்ராசிட்டி  கொள்ளை இருக்கின்றதே.. அப்பப்பா அது கடவுளுக்கே  அடுக்காது.. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக    பத்து பத்து இடம் வைத்து இருப்பவன் எல்லாம் பைக் ஸ்டேன்ட் வைத்து நடத்துகின்றார்கள்..

பைக்கை விட்டு விட்டு அவசரத்து நீங்கள் மட்டும் வெளியே நடந்து வரவே  ஒரு திறமை உங்களுக்கு இருந்தால் மட்டுமே அது  சாத்தியம்..



காலையில் இருந்து மாலை வரை 20 ரூபாய் கட்டணம்... மாலை  சூரியன்  போய் சந்திரன் வந்துவிட்டால் போதும் 40 ரூபாய் இந்த அநியாய கட்டணத்தை தட்டிக் கேட்க ஆளே இல்லை...

சரி என்று விட்டு விட்டு சென்றால் பெட்ரோல் திருடி இருப்பார்கள்.... வழக்கம் போல இண்டிகேட்டர் லைட் ஹோகயா ஆகி இருக்கும்...

சரி இதையெல்லாம் சகித்துக்கொண்டு  பைக்கை விட்டு விட்டு கேட்கும் காசினை கொடுத்து விட்டு சென்றால் குடும்பத்தோடு பேருந்து  விட்டு இறங்கி பைக் எடுக்க சென்றால் அங்கே  பெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட்வாசிகள் ஒரு டுவிஸ்ட்டை அங்கே வைத்து இருப்பார்கள்..

வண்டியை எடுத்தால் வண்டி பஞ்சர்...

 கவலைபடவேண்டாம்.. பக்கத்திலேயே பைக் பஞ்சர் கடையும்  இருக்கின்றது... அவர்களிடம் போனால் பஞ்சர் ஒட்டி விட்டு ஒரு பஞ்சருக்கு 100 ரூபாய் கூசாமல் கேட்கின்றார்கள்..

 கடந்த திங்கள்கிழமை பாண்டியில் இருந்து நானும் தம்பி பாலாவும் பெருங்களுத்தூரில் இருக்கும்  பீர்க்கன்கரனை  காமராசநகர் உரிமைசங்கம் காந்தி சாலையில் ஒரு பைக் ஸ்டேன்ட் இருக்கின்றது..

இங்கே பைக் விட்டு விட்டு சென்று விட்டு  திரும்ப வண்டி எடுக்கும் போது பஞ்சர் ஆகாமல் இருந்தால் உங்களுக்கு நல்ல நேரம் என்று  அர்த்தம்...

நானும் தம்பி பாலாவும் பைக் எடுக்க சென்ற போது  எங்களுக்கு சனியன் அப்பாயிண்மென்ட் கொடுத்து இருந்தான்....

 தம்பி பாலா வைத்து இருப்பது ரேஸ் பைக் போல் இருக்கும்...யமாஹா தயாரிப்பு...பின்பக்கம்  தூக்கிக்கொண்டும்   பப்பரபப்ப என டயர் பெரியதாகவும் இருக்கும் இத்தனைக்கு அது டியூப்லஸ் டயர்...


அந்த டயர் பஞ்சராகி இருந்தது...


இதற்கு முன் இரண்டு முறை பஞ்சர் ஆகி இருந்தது.. இன்று அவசரம்  என்று வண்டியை எடுக்க போனால் டயர் பஞ்சர்.. அங்கே இருந்து மூன்று கடை தள்ளினால் பஞ்சர் கடை இருக்கின்றது..

இந்திவாலா பஞ்சர் போடுகின்றார்...

மூன்று பஞ்சர் என்று சொன்னார்... அதில் கொடுமை என்னவென்றால் பஞ்சர் ஏற்ப்படுத்திய ஆணியோ ஸ்குரு மயிரோ எதுவும் டயரில் இல்லை என்பதுதான்...
அதை விட காமெடி ... ஒரு பஞ்சருக்கு 150 ரூபாய் கேட்டார்... யோசித்து பாருங்கள்.. 

ஆணி இல்லை.. ஆனால் மூன்று இடத்தில் பஞ்சர் ஆகி இருக்கின்றது... 150 ரூபாய் ஒரு பஞ்சருக்கும்.. இத்தனைக்கு டியூப்லஸ் டயரை கழட்டி கூட மாற்ற வேண்டாம்.. ஒரு  இழையை எடுத்து பஞ்சர் துளையில்  சொருகி இழுத்தால் பஞ்சர் ஓவர்...
பைக் ஸ்டான்ட் நடத்துபவரோ.. அல்லது  அங்கு பணியில் இருப்பவர்களோ கூட்டுக்களவானிகள் போல ...

ஒரு பஞ்சருக்கு இத்தனை ரூபாய் என்று என்று கமிஷன் போல..

குடும்பத்தோடு வருபவர்கள் நிலையை சற்று யோசித்து பாருங்கள்..
இதே போல எனக்கு சில மாதங்களுக்கு முன் பெருங்களத்தூர் வேறு ஒரு பைக் ஸ்டேன்டில் ஏற்ப்பட்டது..


உங்களுக்கு பெருங்களத்துர் பைக் ஸ்டேன்டிலோ.. அல்லது  உங்கள் ஊர் பைக் ஸ்டேன்டிலோ இது போன்ற பஞ்சர் சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலோ...பின்னுட்டத்தில் சிரமம் பார்க்காமல் பகிர வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.. அது பதிவை படிப்பவர்களுக்கு விழிப்புணர்வாய் அமையும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.


கஷ்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்குதான் நடுத்தர மக்களின் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியும்... நமக்காகவே  ஆண்டவன் அரியனையில் ஏற்றி  உட்கார வைத்து இருக்கும், ஏழைகளின் தவப்பதல்வர் நமது  மான்பு மிகு முதல்வர் பன்னீர் செல்வம் ஐயா அவர்கள் தனது இரும்புகரம் கொண்டு  கொள்ளை அடிக்கும் பைக் ஸ்டேன்டுகளின் கொட்டத்தை அடக்க வேண்டும்.


பெருங்களத்தூரில் நிரந்தர பைக் ஸ்டேன்ட் ஒன்று உலகதரத்தில் கட்டக்கொடுப்பதோடு  கொள்ளை கட்டனம்  அடிக்கும்  புற்றீசல் போல முளைத்து இருக்கும் பைக் ஸ்டேன்டுகளை ஒழுங்கு படுத்த வேண்டியது காவல்துறை மற்றும் தமிழக அரசின் கடமை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

24/10/2014



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

6 comments:

  1. good one. this things happening in almost all stand. middle class people are always sufferers

    ReplyDelete
  2. Anddha aalu oru spineless dummy piece

    ReplyDelete
  3. பெருங்களத்தூர் பைக் ஸ்டாண்ட் – பற்றிய எச்சரிக்கை மணிக்கு நன்றி!
    த.ம.2

    ReplyDelete
  4. The same happened in Bangalore also last month, IT people complained this to Blore Police facebook page. 8 men team arrested the juice vendor who became mobile panchar vala in night time in HSR Layout. Chennai people can post the issue on Chennai city police facebook page.

    ReplyDelete
  5. well said... very needy one. Thanks for your alert.

    ReplyDelete
  6. //கஷ்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்குதான் நடுத்தர மக்களின் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியும்... நமக்காகவே ஆண்டவன் அரியனையில் ஏற்றி உட்கார வைத்து இருக்கும், ஏழைகளின் தவப்பதல்வர் நமது மான்பு மிகு முதல்வர் பன்னீர் செல்வம் ஐயா அவர்கள் தனது இரும்புகரம் கொண்டு கொள்ளை அடிக்கும் பைக் ஸ்டேன்டுகளின் கொட்டத்தை அடக்க வேண்டும்.//

    Idhu Comedy Thaane!!!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner