குட் பை 2014


1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து  சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி  வரும் போது  பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில்  நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல  சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……

எல்ஐசி எதிரில் சென்டிக்கோ ஸ்கூட்டர் கம்பெனியில் கொசுக்கடியோடு செக்யூரிட்டி உடையில்   புத்தாண்டினை வரவேற்றேன்…

 பக்கத்தில் இருந்த தாசபிரகாஷ் ஹோட்டலின் வெளியே தண்ணி அடித்துவிட்டு வந்த பெண் ஸ்டைலாக பிடித்த சிகரேட் புகையோடு தன் நண்பர்களோடு கும்மளாம் அடிக்க….. தாராபூர் டவரில் மணி  12,00 நெருங்கிய போது புத்தாண்டு கொண்டாட்டம்  மவுண்ட் ரோட்டில்  ஆரம்பமானது…

 சிகரேட் பிடித்த பெண் என்னிடம் கை கொடுத்துவிட்டு போதையில் சென்ற பெண்தான்  சென்னையில்  அறிமுகமில்லாத யாரோ  ஒரு அன்னிய பெண்ணின் முதல் பரிசம். 

அதனாலே சென்னை எனக்கு பிடித்து விட்டது…. 

அதன் பின்  அலங்கார் தியேட்டரிலும்  தேவிதியேட்டரிலும்  ஒருவாரம் டிக்கெட் விற்ற கணங்கள்  வாழ்வில் மறக்க முடியாதவை… 

அதன் பின் நிறைய வேலைகள்… 


தற்போது தொலைகாட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்… சப் எடிட்டர் என்று வளர்தாகி விட்டது என்றாலும் 31 ஆம் தேதி கண்டிப்பா 20 வருடத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை என்றும் என் மனம் மறந்தது இல்லை…

சென்னையில் எதிர்கால  வாழ்க்கை பற்றிய பயத்தோடு 20 வருடங்கள் ஓடிவிட்டது..


1994 இல் இருந்து 2014 வரை  சரியாக  20 வருடங்கள்  கழிந்து விட்டது…


31 ஆம் தேதி இன்று  நடிகர் பிரபுவின் பிறந்தநாள்… அன்று பார்த்த ரசிகர்களின் மெட்டேடர் வேன்கள் இன்று  இல்லை என்றாலும்  நடிகர் பிரபு அவர்களின்  மகன் விக்ரம்பிரபு நடித்த  சிகரம் தொடு திரைப்படத்தில் ஒரு 25 செகன்ட் காட்சியில் நானும் நடித்து இருக்கின்றேன்..

 20 வருட போராட்டம்  அது… ஊருக்கு போனால் உங்களை சிகரம் தொடு திரைப்படத்தில் பார்தேன் என்று சொல்லும் அளவுக்கான காட்சி அது…


எனது சொந்தக்குரலில் பதிவு  செய்ப்பட்ட காட்சி என்பதால்  என்னை எளிதில் என் நண்பர்களும் உறவுகளும் அடையாளம் கண்டுகொண்டார்கள்…


 சாத்தியப்படுத்திய நண்பர் ஜெகனுக்கும் , இயக்குனர் கவுரவ்க்கும் முக்கியமாக என் சொந்த  குரலில் டப்பிங் பேச வைத்த இயக்குனருக்கு எனது நன்றியும் அன்பும்.

எந்த பின்புலமும் இல்லாத  நான் வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே இயங்கிய எனக்கு இது பெரிய விஷயம்… 

வெறிகொண்டு போராடினால்  வெற்றி சாத்தியம்.. ஆனால் அது சில நேரங்களில் உடனே பல நேரங்களில் 20 வருடங்கள் கூட எடுத்துக்கொள்ளும்… விடா முயற்சி மட்டுமே வெற்றிக்கு மூலதனம்…

20 வருடத்துக்கு முன் மலங்க மலங்க  சென்னையில் விழித்த என்னைதான் இன்று ஒரு நாலாயிரம் பேஸ்புக்கில் பாலோ செய்கின்றார்கள்…

அதனால் தன்னம்பிக்கை மிக முக்கியம் நண்பர்களே…. எதிரிகள் உருவாகுவார்கள் அவர்களுக்கு  உங்கள் வெற்றியை பரிசாக கொடுங்கள்…

குட் பை 2014

முகநூல் நண்பர்கள், பதிவர்கள்,உறவினர்கள், என்னோடு பணிபுரிந்த ஊழியர்கள், பால்யகால நட்புகள்… அனைவருக்கும் தித்திக்கும் 2015  ஆண்டு புத்தாண்டு  நல்வாழ்த்துகள்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
31-12-2014

((இன்னும் விரிவாய் 2014 ரிவைன்ட்... சாத்தியப்படும் நேரத்தில்...))நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

 1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  தம 1

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 3. Wish you happy new year to you , your family and blog

  ReplyDelete
 4. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றிகள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner