அடித்து பிழிந்து
சக்கையாக்கி தூர எறிந்த திரைக்கதைதான்...
இருந்தாலும் சுவாரஸ்யமான சென்டிமென்ட் காட்சிகளின் காரணமாக இந்த கொரிய திரைப்படமான டார்கெட் திரைப்படம் இரண்டு மணி நேரம் உட்கார வைத்து சுவாரஸ்யம் கூட்டி
பார்க்க வைக்கின்றது என்பேன்.
துப்பாக்கி குண்டு அடிப்பட்டு ஒருவன் உயிருக்கு போராடிக்கொண்டு ஓட்டமாக ஓடுகின்றான்... அவனை இரண்டு
பேர் துரத்துகின்றனர். அவன் மருத்துவமனையில் உயிர் பிழைக்க ஒரு நேர்மையான டாக்டர் முயல... அவன் உயிர் பிழைக்கின்றான்...
ஆனால் அவனை கொலை செய்ய ஒரு கூட்டம்
மருத்துவமனையிலும் முயல்கிறது.. அங்கேயும் அந்த மருத்துவன் அவனை காப்பாற்றுகின்றான்... இந்த நேரத்தில் மருத்துவனின்
மனைவி நிறைமாத கர்பினியாக இருக்கின்றாள்...
கர்பினி மனைவியை கடத்தி டாக்டரை மிரட்டுகின்றார்கள்... அவனை
எனக்கு உயிரோடு திரும்ப ஒப்படைக்க வேண்டும்
என்று ஒருவனும்... அவனை கொலை செய்தே தீருவது என்று ஒரு கூட்டமும் அலைகின்றது.. இன்னா காரணத்துக்காக
இப்படி கொலை செய்ய அலைகின்றார்கள்..
அவன் செய்த தவறு
என்ன?
கர்பினி மனைவி உயிரோடு
பிழைத்தாளா?
டாக்டர் எல்லா டிமாண்டும்
ஒத்துக்கொள்கின்றானா போன்றவற்றை வெண்திரையில் காணுங்கள்.
=====
படத்தின் சுவாரஸ்யக்ளை வலு பெற செய்வது சேசிங் காட்சிகள்தான்.. சின்ன டுவிஸ்ட்டுகள்
படத்தை சுவாரஸ்யபடுத்துகின்றன.
(2014) இந்த ஆண்டு ஏப்பரல்
மாதம் சவுத் கொரிய திரைகளை முத்தமிட்ட இந்த
திரைப்படம். ஸ்பைடர் மேன் திரைப்படம் ரிலிஸ்
ஆன போது கூட இந்த படத்தின் வசூல் ஏறுமுகம்
என்பதால் கொரியர்கள் அடித்து துவைத்து சக்கையாக்கப்பட்ட திரைக்கதை என்பதை துளியும்
பொருட்படுத்தாமல் இந்த திரைப்படத்தை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பெரிய வெற்றியை பெற்றுது....
நாயகனாக கொரிய திரைப்பட வரலாற்றில் அதிக அளவு சம்பாதித்தியம் மற்றும் புகழை பெற்றுக்கொடுத்த ஒரே திரைப்படம்... மிரக்கள் இன் செல் நம்பர் செவன் திரைப்படத்தில் மென்டலி ரிட்டார்டடட் அப்பா நடிச்ச... Ryu Seung-ryongதான் இந்த படத்தின் ஹீரோ...
ஆன்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கின்றார்... மிராக்கிள் செல் நெம்பர் செவன் படத்தில் நடித்தவர்தானா? இவர் என்று ஆக்ஷன் காட்சிகளை பார்த்து விட்டு மனதில் கேள்வி எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை.
ஹாங்காங் இயக்குனர் ஜான் ஹூ படங்களில் வில்லன் கிட்ட ஒரு ஸ்டைல் இருக்கும் முக்கியமா புரோக்கன் ஏரோ திரைப்டபத்தில் ஜான் டிரைவோல்டா வோட ஸ்டைல் எப்படி இருக்குமோ? அதே போல கொஞ்சம் ஓவர் டோசா செஞ்சா எப்படி இருக்குமோ? அது போல இந்த படத்து வில்லனின் பாடிலேங்வேஜ் இருக்கும்.
=======
படத்தின் டிரைலர்
====
படக்குழுவினர் விபரம்
Directed by Yoon Hong-seung
Produced by Im Seung-yong
Seo Woo-sik
Written by Jo Seong-geol
Jeon Cheol-hong
Starring Ryu Seung-ryong
Lee Jin-wook
Yoo Jun-sang
Kim Sung-ryung
Music by Park In-young
Cinematography Choi Sang-muk
Edited by Kim Chang-ju
Production
company
Barunson
Yong Film
Distributed by CJ Entertainment
Release dates
April 30, 2014 (South Korea)
May 22, 2014 (Cannes)
Running time 98 minutes
Country South Korea
Language Korean
==
சேசிங் காட்சிகளோடு கதையின் திரைக்கதை பரபரக்கின்றது.. அதனால் விக்கென்டில்
இந்த படத்தை பார்க்க பரிந்துரைக்கின்றேன்... இந்த படம் பார்க்க வேண்டிய திரைப்படம்
=====.,,
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழு
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
KAMAL BDAY KU POST ethum illaya jackie... viruppam ilayaa???
ReplyDelete