இயக்குனர் டோனிஸ்காட்
இயக்கத்தில் ராபர்ட் ரெட்போர்ட், மற்றும் பிராட்
பிட் நடித்து வெளிவந்த மகத்தான காவியத்தை யாரெல்லாம் கண்டு ரசிச்சி இருக்கிங்க..??
சார் அப்படி படம் இருக்கா என்று பேய் முழி
முழிப்பவர்கள் இந்த லிங்கில் போய் ஸ்பைகேம் படத்தின் விமர்சனத்தை வாசித்து விட்டு வரவேண்டுமாய் கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.
உளவாளி என்ற வேலை இருக்கின்றதே... நாமே வலியபோய் வாண்டட்
ஆக வண்டியில் ஏறி பிரச்சனைகளை சந்திக்கும்
தொழில்..... எந்த நேரத்திலும் தம் உயிருக்கும்
குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து வரலாம்...
வில்லன் குரூப்பில் உளவாளியாக
சேந்து விட்டால் சொந்த நாட்டு மக்களேயே
கொல்ல வேண்டி வரும்..
அதனால் உளவாளியாக இருப்பது என்பது பேஜாரான வேலை.. ஒரு முறை இந்த விளையாட்டில் இறங்கி விட்டால் ஜென்மத்துக்கு வெளிவர முடியாது... அதனால்தான்... த ஸ்பை நெவர் அவுட் அப் த கேம் என்று கேப்ஷன் வைத்து இருக்கின்றார்கள்.
சரி ஸ்பை கேம் படத்துக்கு
வருவோம்... அந்த படத்துல ரபார் ரெட் போர்ட்டோட சிஷ்ய பிள்ளையா பிராட் பிட் வருவார்..
பிரச்சனையில் பிராட்பிட் சிக்கும் போது ராபர்ட்
ரெட் போர்ட் அசத்தலா காப்பாத்துவார் இல்லையா..?
இதுல அப்படியே பியர்ஸ் பிராசனனுக்கு லுகிபிரேசிதான் சிஷ்யபுள்ள...
பிராசன்தான் தொழில் கத்து கொடுத்த குரு...
ஆனா இரண்டு பேரும் எதிர் எதிர் துருவத்தில்
இருக்க குருவா? சிஷ்யனா? என்ற விளையாட்டு படத்தை ஏகத்துக்கு சுவாரஸ்ய படுத்த ...
முக்கியமா
குருவோட மனைவியை லுகி கொல்கின்றான்.. ஆனாலும் பியர்ஸ் பிராசன் தன் சிஷ்ய பிள்ளையை விட்டுக்கொடுத்தாரா இல்லையா?
என்பதுதான் படத்தின் மொத்த சேசிங் மற்றும் விறு விறுப்பும்.
இந்த படம் தே ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலின் தழுவல்... டேன்டிஸ்
பிக் படத்தை பியர்ஸ் பிராசன் வைத்து இயக்கிய ரோஜர் டோனால்ட்சன் மீண்டும் பியர்ஸ் பிராசனோடு கை கோர்த்து நவம்பர்மேனாக மாற்றி இருக்கின்றார்..
====
படத்தின் டிரைலர்.
====
படக்குழுவினர்விபரம்.
Directed by Roger Donaldson
Produced by Beau St. Clair
Pierce Brosnan
Sriram Das
Screenplay by Michael Finch
Karl Gajdusek
Based on There Are No Spies
by Bill Granger
Starring Pierce Brosnan
Luke Bracey
Olga Kurylenko
Eliza Taylor
Caterina Scorsone
Bill Smitrovich
Will Patton
Music by Marco Beltrami
Cinematography Romain Lacourbas
Edited by John Gilbert
Production
company
Irish DreamTime
SPD Films
Distributed by Relativity Media
Release dates
August 27, 2014
Running time 108 minutes
Country United States
Language English
Budget $15 million
Box office $28.5 million
======
பைனல் கிக்.
இந்த படம் டைம்பாஸ் படம் என்றாலும் கண்டிப்பாக விக்கென்டில் பியரோடு
பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. இன்னும் கொஞ்சம்
மெனக்கெட்டு இருந்தால் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
லிஸ்ட்டில் வந்து இருக்க வேண்டியது... பழக்கப்பட்ட சேசிங் திரில்லராக இருந்தாலும் கண்டிப்பாக பார்க்கலாம்.
கண்டிப்பாக பார்க்கலாம்.
============
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறு.
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜெயக்குமார்.. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDelete