நண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....
தஞ்சை அருகே இருக்கும் வெட்டிக்காடு என்னும் சிறுகிராமத்தில் பிறந்து,
படிப்பில் முதல் மாணவனாக திகழம் போதே அப்பாவோடு வயலில் கடலை கொல்லையில் கவளையில் தண்ணீர் இறைப்பது, மடை கட்டுவது, வயலில் களை எடுப்பது, கதிர் அறுப்பது, இரவில் களத்திற்கு காவலுக்கு படுக்க போவது, என்று வயல் வேலைகள் செய்துக்கொண்டே ....
நன்றாக படித்து, மேல் தட்டுவர்கம் மட்டுமே படிக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து...கிராமத்து பிள்ளைகள் சந்திக்கும் ஆங்கிலமொழி பிரச்சனையை ஊதி...
BE முடித்து...
தொலை தொடர்புதுறை பணியில் சேர்ந்து கடுமையாக உழைத்து.... அமெரிக்கா சென்று அங்கே குடியுறுமை பெற்று திருமணம் செய்து , ஓரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனார்தான் நண்பர் ரவிச்சந்திரன் சோமு...
தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் மறு பெயர் ரவி...
வெட்டிக்காடு கிராமத்து பையன் இன்று உலகம் சுற்றும் வாலிபன்... செல்லாத நாடுளை இல்லை என்று விரல் விட்டு என்னிவிடலாம்...
காலையில் ஹாங்காகில் மீட்டிங்....மாலையில் சீனாவில் தன் துறை அதிகாரிகளோடு பேசிக்கொண்டு இருப்பார்... அந்த அளவுக்கு உலகம் சுற்றிக்கொண்டு இருப்பவர்...
தொலைதொடர்பு துறையில் ஆசிய அளவில் தலைவர் பதவியில் பெரிய பொசிஷனில் இருப்பவர்...
ஒரு நாள்... ஒரே ஒரு நாள் அந்த பேச்சில்.. அந்த மிடுக்கு அந்த அலட்டல் ஒரு போதும் பார்த்தது இல்லை.. ஆங்கிலம் அதிகம் பேசி பேசி வளர்ந்த காரணத்தாலே பேசும் தமிழில் ஒரு ஸ்டைல் இருக்கும்..
எத்தனை பணம் காசு வந்தாலும் அந்த கிராமத்தானின் உதவும் குணமும் அலட்டல் இல்லாமல் இருப்பதும் ரவியிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம்.. இத்தனைக்கு பணம் வந்து விட்டால் ரெண்டு கொம்பு முளைத்து பழகும் நண்பர்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக பழகும் நபர்...
ஒரே ஒரு முறை பெண்களூரில் நேரில் சந்தித்து
இருக்கின்றோம்.. பேச்சின் எல்லா கட்டங்களிலும் தன் தேசம் பற்றி அதிகம் கவலைகொண்டு இருக்கின்றார்.
என் மீதும் என்குடும்பத்தின் மீதும் அதிக மதிப்பு வைத்து இருப்பவர்...
எனக்கு மலை போல் ஏதாவது பிரச்சனை என்றால் ரவியிடம் போனில் பேசிவேன்.. போன் பேசி முடிக்கும் போது அரைக்கிலோ தன்னம்பிக்கை பூஸ்ட்டை வாயில் அப்பி விட்டு செல்லுவார். அப்படியே ஒரு உற்சாகம் நம்மை வந்து தொற்றிக்கொள்ளும்...
என் வாழ்க்கையை புரட்டி போட்ட நண்பர்களில் இவர் மிக மிக முக்கியமானவர்... என் சொந்த வீட்டு கனவுக்கு அச்சாரம் போட்ட முதல் மனிதர்... மனிதர்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை தன் செயல்களின் மூலம் உணரவைத்தவர்.
என் எழுத்தை எவன் படிக்க போகின்றான் என்று அவ நம்பிக்கையோடு பிளாக் எழுத வந்தவன் நான்... ஆனால் என்னுடைய வலைதளம் நிறைய நண்பர்களை பெற்றுக்கொடுத்ததோடு என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைகளை சாத்தியப்படுத்தி இருக்கின்றது. அப்படி கிடைத்த முக்கிய நண்பர்களில் ரவி மிக முக்கியமானவர்.
அப்படி வலைதளம் மூலம் எங்கோ வெட்டிக்காடு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரவியை நண்பராக்கியது இந்த இணையம்தான்.. நண்பர் வெட்டிக்காடு ரவிச்சத்திரன் சோமுவுக்கு இன்று பிறந்தநாள்....
நினைத்த காரியங்கள் எல்லாம் கை கூடவும்... நோய் நொடி இன்று வாழவும் எல்லாம் வல்ல பரம்பொருளை நான் வேண்டிக்கொள்கின்றேன்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
25/10/2014
குறிப்பு...
ரவியும் சாதாரண ஆள் இல்லை.. மனதை தொடும் எழுத்துக்கு சொந்தக்காரர்... பெரிய பதவியில் இருந்துக்கொண்டு இந்தளவுக்கு எழுதுவது பெரிய விஷயம்... அவர் அப்பா பற்றி பதிவு கல் நெஞ்சையும் உருக வைக்கும் பதிவு... வாசித்து பாருங்கள்.. உங்கள் நெஞ்சமும் விம்மும். அந்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
பிறந்த நாள் வாழ்த்து
ReplyDeleteMany More Happy Returns of the Day....Valthukkal Anna...
ReplyDeleteMannargudi NHSS nalle Vibration irukkathane Seyyum...
S.Satheesh Kumar,Muscat.Oman
Many More Happy Returns of the Day
ReplyDeleteV.ArulPrakash