ஜூராசிக் பார்க் திரைப்படம் ஒரு பிளாஷ் பேக்.அந்த திரைப்படம் 1993 ஆண்டு வந்தது... அந்த திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல... உலக  நாடுகள்  அத்தனையிலும் அதிர்வலைகளை  அது உண்டு பண்ணியது என்றே சொல்ல  வேண்டும்...

 பின்னே?  பல்லாயிரக்கணக்கான  வருடங்களுக்கு முன் நாம் வாழும் பூமி பந்தில்  வாழ்ந்த உயிரினம்  கண் முன்னே நிற்பது என்பது சாத்தியாமா? அது எப்படி இருக்கும் ??? அது என்ன செய்யும்..??? போன்ற வினாக்களுக்கு  அந்த திரைப்படம்  பதில் சொல்லியது…  அது ஏதோ ஏப்பைக்கு சோப்பையாக வந்து சென்றால் கூட பரவாயில்லை… அது மனித இனத்தை பந்தாடியது… அதனாலே அந்த திரைப்படம் பார்த்து  மிரண்டு போனதும் உண்டு.


  சின்ன சின்ன படிவங்களை தரையில்  இருந்து சுத்தப்படுத்தி பார்த்த ஆராய்சியாளர்களுக்கு கண் எதிரே  பிரமாண்ட உருவமாய் டைனோசரஸ்களை பார்த்தால் எப்படி இருக்கும்.???

 ஆச்சர்யத்தில் உலகமே வாய் பிளந்தது எனலாம்.... ஜூராசிக் பார்க்  திரைப்படம் வந்த போது அப்படித்தான் இருந்தது.. எல்லோரும் அந்த திரைப்படத்தை பற்றியே பேசினார்கள்...
தமிழ் நாட்டில் குடும்பம் குடும்பமாய் சென்று ஜுராசிக் பார்க் படத்தை  பார்த்தார்கள்.

எனக்கு தெரிந்து என் வாழ்வில் அதிர்வலைகளையும் ஆச்சர்யங்களையும் ஒரு  சேர ஏற்ப்படுத்திய திரைப்படம் எதுவென்றால்  ஜூராசிக் பார்க் திரைப்படத்தை சொல்லுவேன்..

இப்போது  இணையத்தில்  இருக்கும் பல  பேருக்கு தெரியாது...  இது 22 வருடங்களுக்கு முன்  ஆச்சர்யப்பட்ட கதை.
இன்னும் அந்த திரைப்படம் மற்ற திரைப்படங்கள் போல அல்லாமல் இன்னும்  புதுமையாய்  மிக நெருக்கமாய் அக்காலத்தில் திகழ முக்கிய காரணம்.. டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டம் அப்போதுதான் அறிமுகமானது...

மோனோவில் திரைக்கு பின்னால் புனல்  அதன் பிறகு  ஸ்பீர்க்ஸ் நிலை மாறி 5.1 சவுண்ட் சிஸ்டத்துக்கு  தியேட்டர்கள் மாற வேண்டிய கட்டாயத்தை அத்திரைப்படம் ஏற்ப்படுத்திய எனலாம்..

1993களில் டிடிஎஸ் அறிமுகமானலும்  அடுத்த 5 ஆண்டுகளில் டிடிஎஸ் சவுண்ட்  சிஸ்டம்  இல்லாத தியேட்டடரில் படம் பார்க்க ரசிகன் வருவதை குறைத்துக்கொண்டான் என்பதே நிஜம்...

நாவலிஸ்ட் மைக்கேல் கிரிங்டன் 1990களில் எழுதி ஜூராசிக் பார்க் நாவலின் திரைவடிவம்தான்  அதே பெயரில் படமாகி 900 மில்லியன் பணத்தை சம்பாதித்துக்கொடுத்தது.

 படம் முழுக்க உழைப்பு....பால்ஸ் பக்கத்துல ஹெலிபேட் செட், ஜூராசிக் பார்க் செட்.. முக்கியமா  அந்த கார் மரத்து மேல தொத்திக்கிட்டு  கொஞ்சம் கொஞ்சமா கீழே இறங்கும் அந்த காட்சி இருக்கே... அத உண்மைன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. அது செட்டுன்னு சொன்னப்ப... ச்சீன்னு போயிடுச்சி..

மொத்தம் 20 அவார்டு வாங்கிச்சி.... அதுல மூன்று ஆஸ்கர் விருதுகள்...
1997ல டைட்டானிக் வரும் வரை வசூலில் இந்த படம்தான் கிங்காக இருந்தது எனலாம்.
சரியா 22 வருடங்கள் கழித்து  திரும்புவம் ஜூராசிக் பார்க் படத்தோட நான்காம் பாகம்  ஜுராசிக் வேர்ல்டு வரப்போகின்றது... அதற்கான டிரைலர்... டிரைலரை பார்க்கையிவ் கடந்த காலம் கண் முன் வந்த செல்கின்றது.. அடுத்த தலைமுறை 1990 களில் பிறந்தவர்களுக்கு இந்த ஜூராசிக் வேர்ல்டு திரைப்படம் புது அனுபவத்தை கொடுக்கும் என்று  நினைக்கின்றேன்..
 இந்த 20 வருடத்தில் பிலிம் வழக்கு  ஒழிந்து  போய்.. டிஜிட்டல் புரொஐக்ஷன் வந்து விட்டது.   சவுண்ட் சிஸ்டத்தில் டால்பி ஆட்மாஸ் வந்து விட்டது அதாவது 7.1 சேனல் சவுண்டுகள் வந்து விட்டன... திரிடி மற்றும் ஐமேக்ஸ் திரைகள் இந்த படத்தை மேலும் அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும்..


டிரைலரில்  ஜூராசிக் பார்க் முன்னிலும் பாதுகாப்புடன் திறக்க படுக்கின்றது... ஆனாலும் டைனோசர்கள்  பொது மக்களை வேட்டையாடுகின்றன.... நிச்சய்ம இந்த படம் பெரும் வெற்றி பெரும் என்றே நம்புகின்றேன்..

 22 வருடங்களுக்கு பிறகு  முதல் பாகத்தை போல அதே தேதியில் ஜூராசிக்  வேல்டு திரைப்படம்  ரிலிஸ் ஆக  போகின்றது.. சமீபத்தில் அந்த  டிரைலர் வெளியிடப்பட்டது.,. அது பற்றிய  விரிவாகன வீடியோ பதிவு… உங்களுக்கா….

 ஜூராசிக் பார்க் வந்த பிறகுதான் உலகம் எங்கும் ஜூவாலஜிக்கல் பார்க்குகளில் டைனோசர் பொம்மைகள் அதிக அளவில் இடம் பிடிக்க ஆரம்பித்தன.. சென்னையில்  அருங்காட்சியகத்தில் ஒரு  டைனோசர் பொம்மை வெளியே இருந்தாலும்  உள்ளே 40 லட்சம் செலவில்  சத்தம் போட்ட படி அசையும்   பெரிய டைனோசர்  பொம்மை ஒன்று   உள்ளது....

 திரும்புவம் டைசோனர் படம் கொண்ட டிஷர்ட்டுகள் வலம் வர போகின்றன...

1993 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ஜூராசிக் பார்க் ரிலிஸ்,.... அதே போல  அடுத்த வருட்ம் ஜூன் மாதம் இப்படத்தை ரிலிஸ் செய்கின்றார்கள்...
பார்ப்போம் எந்த அளவுக்கு வரவேற்ப்பை பெற போகின்றது என்று..??.


பிடித்து இருந்தால்  நண்பர்கள் ஷேர் செய்யும் படி கேட்டுக்கொள்கின்றேன்.,

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
28/11/2014   


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. ரொம்ப அருமையா விமர்சனம் பண்ணுறீங்க அண்ணா...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஜுராசின் வேர்ல்டு பார்க்கத் தயாராகிவிட்டேன் நண்பரே

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner