உலகில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு அப்பா இரண்டு அம்மாவோடு வாழ்வதும் வளர்வதும்தான்.. அவன்
பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்வான் என்று இவளும்… இவள் நம் பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்ளுவாள் என்று
அவனும் நினைத்து இருக்க… இரண்டு பேரும் இணைந்து பெற்ற பிள்ளையை பார்த்துக்கொள்ளாமல் நட்டாற்றில் விடப்படுபவர்கள்
கண்டிப்பாக விவாகரத்து செய்யப்பட்ட பெற்றோர்களின்
பிள்ளைகளே….
குடும்ப சூழல் சரியில்லாத பிள்ளைகள் பிற்காலத்தில் தான் தோன்றி தனமாக வள்ர்ந்து நற்செய்லகள் மூலம் திரும்பி பார்க்கவும் வைத்து இருக்கின்றார்கள்..
கெட்ட செயல்கள் மூலம் காரித்துப்பவும் வைத்து இருக்கின்றார்கள்…
இதில் முதல் கேட்டகிரியில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன்
ஸ்பீல் பெர்க் தன் திரைப்படங்கள் மூலம் தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் என்று சொல்ல வேண்டும்.
விவாகரத்து பெற்றோரிடம் வளர்ந்த சிறுவன் ஸ்பீல் பெர்க் சிறுவயதில் அன்புக்கு
ஏங்கிய சிறுவன் அவன்… விவாகரத்து ஆன பெற்றோர். அதனாலே அவன் திரைப்படங்களில் பாசத்துக்கு
ஏங்கும் காட்சிகள் மிக அழகாக புனையப்பட்டு இருக்கும். உதாரணத்துக்கு ஈடி திரைப்படத்தில் வெற்றி கிரக ஏலியனை கொடுரமாக காட்டாமல் அன்புக்கு ஏங்கும் பர்சனாகவும்..
அதே ஏலியன் மீது நம் பசங்கள் செலுத்தும் அன்பு என பாசமழை பொழிய வைத்து இருப்பார்…
எருமை மாடு போன்றமனிதர்களுக்கு கதை சொல்வதை
காட்டிலும் குழந்தைகளுக்கு கதை சொல்வதில் ஸ்பீல்பெர்கிற்க்கு
கொள்ளை பிரியம்.. அதனாலே தான் வளர்ந்து தயாரிக்கும் தாயரிப்பு
கம்பெனிக்கு டிரீம் ஒர்க்ஸ் என்று பெயர் வைத்தார் அதில் கூட அரை வட்ட பிறை நிலாவில்
ஒரு பையன் உட்கார்ந்துக்கொண்டு தூண்டில் இடுவதை போல கிராபிக்ஸ் செய்து இருப்பார்….
இரண்டாவது மனைவியோடு 5 பிள்ளைகளோடு மேலும் ஒரு பிள்ளையை ஸ்டீவன் தத்து எடுத்துக்கொண்டார் …
அது மட்டுமல்ல.. முதல் மனைவியோடு சேர்ந்து இரண்டு வருடம் வாழ்ந்த கணத்தில் ஒரு பிள்ளை
என குழந்தைகளின் காதல் ஸ்பீல்பெர்க்.
சின்ன வயதில் ஸ்பீல்பெர்க் விளையாட்டாய் இயக்கிய குறும்படத்துக்கு கிடைத்த பாராட்டின் சுவை…
உடல் முழுவதும் வியாபிக்க, படிப்பு மண்டையில் ஏறவில்லை.. தனக்கு பிடித்த
வேலை சினிமா என்பதை உணர்ந்த ஸ்பீல்பெர்க்…..தொலைகாட்சி தொடர்களை
இயக்க முடிவெடுத்தார் யூனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்தில் தன்னை இனைத்துக்கொண்டார்.
அப்போது அவர் எடுத்த
திரைப்படம்தான் டூயல்… எல்லா பிலிம் இண்ஸ்டியூட்டிலும் இந்த திரைப்படத்தை ஓடாத ஸ்கீரினே இல்லை என்று சொல்லலாம்.. அந்த அளவுக்கு அந்த படம்
மிரட்டி இருக்கும்.. ஒரு கார் ஓட்டிக்கும் ஒரு டிரக் டிரைவருக்கும் உள்ள ஈகோவே
இந்த படத்தின் மெயின் ஒன்லைன்….
டிரக் டிரைவர் கால் மட்டும்தான் காண்பிப்பார் ஆனாலும் டிரக்கை திரையில்
பார்க்கும் போது எல்லாம் மிரட்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்று இருப்பார் ஸ்பீல்பெர்க்
அதன் பின் சுகர்லெண்ட் எக்ஸ்பிரஸ் படம் மூலம் வெள்ளிதிரையில் அடி எடுத்து வைத்தாலும்
அவருக்கு பெரிய அளவு பெயரையும் மரியாதையையும் பெற்றுக்கொடுத்த திரைப்படம் ஜாஸ்
திரைப்படமாகும்…
பாதி படம்
வரை சுறாவினை காண்பிக்காமலே திகிலை திரையில் உலாவ விட்டு இருப்பார்… ஸ்பீல்பெர்க்
இந்த படம் எடுத்துமுடிப்பதற்குள் ஸ்பீல்பெர்க்கிற்கு
தாவு தீர்ந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
பிளாட்ரை அழுத்தனும் பாம்பு சீறுது அதுக்கு அப்புறம் டயலாக்கும் சொல்லனுமா?- என்று
பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல் சலித்துக்கொள்வது
போல ஸ்பீல்பெர்க்கை சலிப்பின் உச்சத்துக்கு
கொண்டு சென்ற திரைப்படம் இது.
======
5/10/1975 அன்று ஆனந்த விகடன் இதழில் சுறா பற்றிய விமர்சன பதிவு உங்களுக்காக…
அமெரிக்காவில் 'கடற்கரை சீசன்' ஆரம்பித்துவிட்டால்
போதும்! நீச்சலும் கும்மாளமுமாக அவர்கள் அதை அனுபவிக்கும் விதமே அலாதி. ஆனால், கடந்த
சில மாதங்களாகக் கடற்கரைகளில் மட்டும் எப்போதும்போல் ஆயிரக் கணக்கில் கூடுகிறார்களே
தவிர, கடலில் இறங்கி, நீச்சல் அடிப்ப தற்கு யாருக்கும் துணிவு இல்லை. பலர் கரையோரமாக
நின்று, கால் களை நனைத்துக்கொண்டதோடு சரி! தண்ணீரில் சிறிது தூரத்தில் ஏதாவது மரக்கட்டை
மிதந்தால்கூட, 'சுறா, சுறா' என்று ஒரே கூச்சல்!
இவ்வளவு தூரம் எல்லாரையும் கதி கலங்க அடித்திருப்பது
- சுறா மீன் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, அமெரிக்காவில் இப்போது வெற்றிகரமாக
ஓடிக் கொண்டிருக்கும் 'ஜாஸ்' என்ற திரைப்படம். படம் பூராவும் சுறா மீன் செய்யும் அட்டகாசங்கள்தான்.
கடலில் குளிக்கும் சிறுவர்கள், இளம் பெண்களைத் தாக்கி வரும் அந்தச் சுறாவுக்கு ஒரு
முடிவு கட்ட, மூவர் அடங்கிய படை கடலுக்குள் இறங்குகிறது. கடைசிக் காட்சியில் சுறா மீனுக்கும்
அவர்களுக்கும் நடக்கும் பயங்கரச் சண்டையை யாரும் தியேட்டரில் நாற்காலியில் உட் கார்ந்தபடி
பார்க்க முடியாதாம்.
இந்தப் படத்தை எடுக்க, கடலுக் குள் கூண்டுகளை
இறக்கி, அதிலிருந்து உண்மையான சுறா மீன்களின் நடமாட்டங்களை முதலில் படம் பிடித்தார்கள்.
சுறாவின் திடீர்த் தாக்குதல்களையும், அட்டகாசங்களையும் 'க்ளோஸ் அப்'பில் படம் பிடிக்க
பொம்மைச் சுறாக்கள் தேவைப்பட்டன. டிஸ்னிலாந்திலிருந்து இதற்காக நிபுணர்கள் வந்து, ப்ளாஸ்டிக்கில்
25 அடி நீளமுள்ள மூன்று சுறா மீன்களைத் தத்ரூபமாக உருவாக்கினர். ஒவ்வொன்றுக்கும் ஆன
செலவு சுமார் 11 லட்சம் ரூபாய்!
'ப்ரூஸ்' என்று பெயரிடப்பட்ட அந்த பொம்மைச்
சுறாக்கள் தாமாகவே வாயை அகலத் திறந்து 'பளீர்... பளீர்' என்று மூடிக்கொண் டன; கண்களை
உருட்டிப் பார்த்தன; கடலில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு, வாலை வீசியவண்ணம் நீந்தின.
ஏதாவது ஒரு பிஸ்டன் அல்லது கனெக்ஷன் தவறாக இயங்கினாலும் தண்ணீருக்குள் கண்டபடி சுழல
ஆரம்பிக்கும் இந்த பொம்மைச் சுறாக்களைச் சமாளிப்பதே பெரும் பிரச்னையாக இருந்ததாம்!
வெளிவந்த ஒரு மாதத்திற்குள் 40 கோடி ரூபாய்க்கு
மேல் சம்பா தித்துக் கொடுத்திருக்கும் 'ஜாஸ்', 'காட்ஃபாதர்' என்ற படத்தின் உலக ரிக்கார்டை
(வசூல் சுமார் 110 கோடி ரூபாய்!) வெகு சீக்கிரம் ஓவர்டேக் செய்துவிடும் என்கிறார்கள்.
==
நன்றி விகடன்
====
என்னதான் மக்கள் மதிப்பு பெற்றாலும் அறிவுஜீவிகளால்
நீ காட் பாதர் படத்தை வசூலில் ஜெயித்து காண்பித்து விட்டால் நீ என்ன பெரிய மயிரா என்று
ஸ்பீல்பெர்க்கை பார்த்து ஒரு பெரிய கூட்டமே கொக்கரித்துக்கொண்டு இருந்தது…
அதன் பின் –ஈடி திரைப்படத்தை இயக்க அந்த
திரைப்படம் அவருக்கு பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் உருவாக்க காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.
400 மில்லலியன் டாலர் சம்பாதித்துக்கொடுத்தார்….
ஆஸ்காருக்கு பரிந்துரைத்தது.. ஏதோ ஏலியன் பொம்மையை காட்டி விட்டாலாச்சரியா வேலையை காட்டிட்டா..
நாங்க ஆஸ்கார் கொடுத்து விடுவோமாடா? என்று திரும்புவம் அறிவு ஜீவி கூட்டம் கொக்கரித்தது..
மனதில் அதிகம் வலி ஆனாலும் அவர் அடுத்த வேலையை பார்க்க போய் விட்டார்.
அதன் பின் இன்டியான ஜோன்ஸ் டெம்பிள் டூம்
திரைப்படத்தை இயக்கினார்… அந்த திரைப்படம்
அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்து எனலாம்.
எனக்கு ஈடி படம் மூலமும் இன்டியான ஜோன்ஸ் அண்டு
த டாஸ்ட் க்ரு செட் திரைப்படம் மூலமும் அந்த நாட்களில் பாண்டி ரத்னா தியேட்டர் மூலம் பரிட்சயம்…. இன்டியா
ஜோன்ஸ் திரைப்படம் மீண்டும் அவரை வெற்றி சிம்மாசனத்தில்
அமர்த்தியது.. அந்த திரைப்படம் ஒரு பக்கா ஆக்ஷன் பேக்கேஜ் திரைப்படம் என்று அடித்து சொல்லுவேன்..
ஆனாலும் அவர்
அடுத்த அடுத்த திரைப்படங்களில் தொடர் தோல்வியை சந்தித்து கை குலுக்கினார்..
1991 இல் ஜுராசிக் பார்க் திரைப்படம் மூலம்
பட்டி தொட்டியெங்கும் ஏன் உலகம் எங்கும் அவர் திரும்பி பார்க்க வைத்தார என்றே சொல்ல வேண்டும்.. உதாரணத்துக்கு
தங்கள் வாழ் நாளில் குடும்பத்துடன் பார்த்த
ஆங்கில திரைப்படம் ஜூராசிக் பார்க் என்று சொல்லுவேன்..
ஆனாலும் சிறந்த இயக்குனர் என்ற விருதை அவருக்கு கொடுக்காமல் போக்கு காட்டிக்கொண்டு வாயால் அவருக்கு பழிப்புக்காட்டிக்கொண்டு
இருந்தது ஆஸ்காரில் உட்கார்ந்துக்கொண்டு கொக்கரித்த அறிவுஜிவி குழு….
1993 ஆம் ஆண்டு அவர் எடுத்த ஷிண்லர் லிஸ்ட்
திரைப்படம் கல் நெஞ்சை கரையவைக்கும் திரைப்படமாக பிளாக் அண்டு ஒயிட்டில் எடுத்தார்..
இந்த படத்துக்கு ஆஸ்கார் விருதுக்கு குழுவின்
கண்களும் பணித்தன… தனது முந்தைய திரைப்படமான
ஜூராசிக் பார்கிற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் படத்தை எடுத்து இருந்தார்…
அவருக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினை பெற்றார்…
ங்கோத்தா கலெக்ஷன் படம் மட்டுமல்ல கண்
கலங்க வைக்கும் திரைப்படங்களையும் தன்னால் இயக்க முடியும் என்று நீருபித்ததோடு ஷின்டல்ர்
லிஸ்ட் திரைப்படத்துக்கு சம்பளம் கூட பெற்றுக்கொள்ளவில்லை என்று ஒரு தகவல் உலாவுகின்றது.
ஜெர்மனியின் Bundesverdienstkreuz mit
Stern என்ற உயர்ந்த விருதும் இப்படத்துக்காக
ஸ்பீல்பெர்க் பெற்றுக்கொண்டார்.
அதன் பின் சேவிங் பிரைவேட் ரேயன் திரைப்படத்துக்கு
மற்றோரு ஆஸ்கர் வாங்கினார் என்பது குறிப்பிடதக்கது..
2005 ஆம் ஆண்டில் வெளியான டெர்மினல் திரைப்படம்
என்னை பொருத்தவரை மிகச்சிறந்த உணர்வுபூர்வமான
திரைப்படம் என்று சொல்லுவேன்.
ஸ்பீல்பெர்க் இயக்கிய திரைப்படங்களில்
தீம் மியூசிக்குகள் புகழ் பெற்றவை அதே போல அவரது
நெருங்கிய நண்பர் இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ்தான் அவருடைய பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர்…
திரைப்பட அமெரிக்க திரைப்பட பல்கலைக்கழகம் தேர்வு
செய்த சிறந்த 100 திரைப்படங்கள் பட்டியலில்
ஸ்பீல்பெர்க் இயக்கிய 5 திரைப்படங்கள் இடம்
பெற்றுள்ளன…
அது மட்டுமல்ல உலக திரைப்பட சரித்திரத்தில் மூன்று தெறி மாசான
பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் திரைப்படங்கள் கொடுத்தது ஸ்பீல்பெர்க்மட்டும்தான் என்பதை தாழ்மையுடன்
தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்..
அந்த பாக்ஸ்
ஆபிஸ் வெற்றி திரைப்பங்கள் ஜாஸ், ஈடி,ஜுராசிக் பார்க் போன்றவையே..
திரைப்பட உலகிற்கு ஸ்பீல்பெர்க் கொடுத்த
பங்களிப்பு சாதாரணமானவை அல்ல.. தமிழ் திரைப்படங்களில் நிறைய திரைப்படங்களில் ஸ்பீல் பெர்க் பாதிப்புகள்
அதிகம் இருக்கும்…
திரைப்பட உலகம் உள்ளவரை ஸ்பீல்பெர்க் பெயரை உச்சரித்துக்கொண்டேதான்
இருக்கும்… அத்தகைய பெருமை வாய்ந்த இயக்குர்
ஸ்டீவன் ஸ்பீல் பெர்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்பீல் பெர்க் ஜி…
பின்குறிப்பு…
ஜாக்கிசேகர். காமில் 225 திரைப்படங்கள்
எழுதியாகி விட்டது… 2008 இல் சுத்தமாக தமிழ் டைப்பிங் கிலோ என்ன விலை என்ற கேள்வியோடு
எழுத வந்தவன்… நான் எழுதிய மூன்றாவது திரைப்பட
விமர்சனம் டூயல்தான்…
இன்னைக்கு பக்கம் பக்கமா டைப்புற எனக்கு அன்னைக்கு இந்த டூயல் திரைப்பட விமர்சன பதிவை எழுத மூன்று
மணி நேரம் ஆனது என்பதுதான் உண்மை.. அந்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்..
அதே போல இன்னைக்குதான் ஹாலிவுட் நடிகர் பிராட்பிட்டுக்கு பிறந்தநாள்.,.
அவரையும் வாழ்த்துவோம்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
சூப்பர் கட்டுரை அண்ணா !
ReplyDelete