Good People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்பணம் பிரதானம்தான் ,இருந்தாலும் சில நேரங்களில்  அதீத  பணத்தேவையின் போது தெரிந்தோ தெரியாமலோ சில  தவறுகளை மனிதர்கள் செய்து தொலைத்து விடுகின்றார்கள்… சில நேரங்களில்   நேரம் நன்றாக இருந்தால் செய்த தவற்றில்  மாட்டிக்கொள்வதில்லை… நேரம் நன்றாக இல்லாமல் ஏழரை சனி புல் போக்கசில் தவறு செய்தவர்களை  பார்த்துக்கொண்டு இருப்பாரேயானால்  ஆப்பு  தவறு செய்தவர்களுக்கு  உருவாகி விட்டது என்று அர்த்தம்.


ஓகே குட் பீபுள் படத்தின் கதை என்ன?


அமெரிக்காவில்  இருந்து  வேலைக்காக லண்டனுக்கு குடிபெயறும் டாம் மற்றும் அன்னா  இரண்டு பேரும் மனம் ஒத்த தம்பதிகள்… வாழ்க்கையை ரசித்து வழலாம் என்று நினைத்தால்  பாழாய் போன பணத்தேவை பாடாய் படுத்திக்கொண்டு இருக்கின்றது… டாமுக்கு இண்டிரியர் டெக்கரேஷன் வேலை…  கிரெடிட் கார்டுக்கு பணம்… வீட்டு வாடகைக்கு பணம் என்று  பணத்தேவை டாம் அன்னா தம்பதிகளுக்கு பெரிய டாச்சரை கொடுக்கின்றது… வீட்டின் கீழ்  வீட்டில் ஒருவன் தங்கி இருக்கின்றான்… மிக சத்தமாக டீவியை வைத்துக்கொண்டு இருக்கின்றான்… அவன்   டிவி சத்தத்தை குறைக்க சொல்லி கத்தி சொன்னாலும் காதில் கேட்பதில்லை…

காதில் கேட்காதவனை  அண்டர் கிரவுண்ட் வீட்டில் இருப்பவன்  காதில் கத்தி சொல்லி விட்டு வரலாம் என வீட்டின் கீழ் தளத்துக்கு தம்பதிகள்  செல்கின்றனர்.  வீட்டை திறந்தாலே…. புகையிலை எதிர்ப்பு விளம்பரம் போல என்னதான் ஆச்சி..? புகை மண்டலமும்  சாம்பல் மேடுகளுமாக வீடு காட்சி அளிக்கின்றது.  அதை விட கப்பு மூக்கை துளைக்கின்றது… மூக்கில் கை வைத்தபடி  படிக்கட்டு இறங்கி வீட்டுக்குள் செல்கின்றார்கள்.
அங்கே டீவி ஓடிக்கொண்டு இருக்கின்றது…. அவன் இறந்து கிடக்கின்றான்…. போசுக்கு தகவல்  கொடுக்கின்றார்கள்… ஆனால் போலிஸ் சரியாக தேடவில்லை.. கீழ் வீட்டில் இறந்தவளின் உடமைகளை சேகரித்து வைக்கின்றார்கள்…


அப்போது  மேலே லாப்டில்  ஒரு கேப் தெரிய.- உள்ளே கை விட ஒரு பேக் இருக்கின்றது… அந்த பேக்கை திறந்தால் 220 தவுசன்ட் பவுண்ட பணம் அந்த பேகில் இருக்கின்றது… அப்பயும்  டாம் பொண்டாட்டி அன்னா சொல்லறா…


 யோவ் வேணாம்யா.. பணத்தை போலிஸ் கிட்ட கொடுத்துடலாம்ன்னு ஆனா டாம் சொல்லறான்… அவன் அவன் பணத்துக்கு ஜிங்கி அடிச்சிக்கிட்டு இருக்கான்  பணத்தை கொடுத்துடலாமாம்.. பணம் அவ்வுளவுதான்.. நல்ல பணம் கெட்ட பணம்ன்னு எல்லாம் கிடையவே கிடையாதுன்னு வியாக்கியானம் வேற  பேசறான்…
அந்த பணத்தை தம்பதிகள் தங்கள்  தேவைக்கு எடுத்துக்குறாங்க…. அந்த பணத்தை தொட்ட அந்த நிமிடத்தில் இருந்து அவர்கள் உயிருக்கு  உலைவைக்கும் அளவுக்கு  பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்.. அவர்கள் உயிர் தப்பினார்களா? இல்லையா என்பதுதான் குட் பீப்புள் படத்தின் மீதிக்கதை.


=======
படத்தின் டிரைலர்


===========
படக்குழுவினர் விபரம்Directed by Henrik Ruben Genz
Produced by Avi Lerner
Benjamin Forkner
Ed Cathell III
Eric Kranzler
Tobey Maguire
Screenplay by Kelly Masterson
Based on Good People 
by Marcus Sakey
Starring James Franco
Kate Hudson
Omar Sy
Tom Wilkinson
Sam Spruell
Music by Neil Davidge
Cinematography Jørgen Johansson
Edited by Paul Tothill
Production
company
Film 360
Maguire Entertainment
Material Pictures
Distributed by Millennium Films
Release dates
August 12, 2013 (Lithuania)
September 26, 2014 (United States)
Running time 90 minutes[1]
Country United States
Language English
=======
பைனல்கிக்.


படத்தின் சுவராஸ்யங்கள் எதிர்பார்த்தது போல  பார்த்து ரசித்த பழகிபோன காட்சிகள்தான் என்றாலும்   படித்த  திரில்லர்  நாவலை திரும்ப படிக்கும் போது எப்படி இருக்கும் அது போலத்தான் ஒட்டு  மொத்த திரைப்படமும் இருக்கின்றது.. கண்டிப்பாக டைம் பாஸ் திரைப்படம் என்று சொல்லுவேன்.. கண்டிப்பான டைம்பாசுக்காக  படத்தை பார்க்கலாம்.

=========
படத்தோட ரேட்டிங்..
பத்துக்கு 5

==========
இப்படத்தின் வீடியோ பதிவில் உங்களை மிரள வைக்க...பிரியங்களுடன்
ஜாக்கிசேகர் 

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

  1. ஜாக்கி! நீங்கள் The equalizer படம் பார்த்து விமர்சனம் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  2. I hope "ariamovie" is the movie library for u

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner