உண்மைக்கு மிக நெருக்காமான கதைகளே ஜெயித்து இருக்கின்றன...
எழுத்தாளர் ஜெயமோகனோட பேசிக்கொண்டு இருக்கும் போது கிட்டப்பா , கேபி சுந்தராம்பாள்
கதை பேச்சுவாக்கில் வர.... காவியத்தலைவன் பிறந்ததாக
முன்னர் வசந்தபாலன் ஒரு பேட்டியில்
சொல்லி இருந்தார்.
அது மட்டுமல்ல அவ்வை சண்முகம்
எழுதிய பயோகிராபிக்கல் புத்தகம்தான் இந்த படம் தொடங்க முக்கிய காரணம் அதில் அவ்வளவு சுவாரஸ்யங்கள்
என்றும் பகிர்ந்து இருந்தார்..
கிட்டாப்பா கேபி சுந்தராம்பாள் என்று ஒரு சின்ன நாட்டை வைத்துக்கொண்டு
அந்த காலத்திய கதையை சற்று பேன்டசி கலந்து
கொடுக்க முயன்று இருக்கின்றார் இயக்குனர் வசந்தபாலன்
கூத்து நாடகம் சினிமா என்று கொண்டாட்டம் மிகுந்த ஊர்.. ஆனால்
கூத்து மெல்ல அழிந்த நாடகம் அதன் பின் அதனை அழித்து சினிமா, சினிமாவை அழித்து டெலிவிஷன் என்று மாற்றங்கள் மட்டுமே மாறத ஒன்று என்று தொடர்ந்து நிரூபித்தக்கொண்டுதான் உள்ளன.
இன்றளவும் ஐரோப்பிய அமெரிக்க தேசங்களில் சினிமா, மற்றும் ஆயிரக்கனக்கான டெலிவிஷன்
சேனல்கள் வந்த போதும் இன்னும் நாடகம் தழைத்து ஓங்க என்ன காரணம் இருக்க முடியும்..??
1924 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கல் கட்டப்பட்ட பிராட்வே தியேட்டர் 1700 பேர் உட்காரலாம்... இங்கிலாந்தின் விக்டோரியா தியேட்டர் போன்றவைகள் சினிமா டெலிவிஷன் என்று எத்தனை புதிய தொழில்நுட்பம் வந்தாலும் நாடகங்கள் இன்னும் அங்கே வளர என்ன காரணம்...??
சீதோஷநிலையும் சூழ்நிலைகள்தான்
காரணம்...
இங்கே கூத்து பத்து மணிக்கு ஆரம்பித்து விடியலில் ஆறரை மணி
வரை கூத்து நடக்கும் ஒரு சாக்கு இருந்தா போதும்.... அதை
தரையில போட்டு விடிய விடிய கண்ணு முழிச்சி
பார்ப்பான்... ஆனா அங்க அப்படி இல்ல...
சுத்தி பனி... கதகதப்பா ஒரு அரங்கம் அவனுக்கு தேவை... அதனாலதான்
அங்க எல்லாம் நாடக தியேட்டர் கெப்பாசிட்டி
அதிகம்....ஒரு நாடகம் மூன்று மணி நேரம் அவ்வளவுதான்
அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போய் படுத்துடனும் இல்லைன்னா விரைச்சி செத்து போயிடுவான்...
ஆனா நம்மளுக்கு அந்த பிரச்சனை இல்லை.
அதே போல நம்ம ஊர்ல நிலையான
நாடக அரங்குகள் எந்த ஊர்லயும் இல்லை...
அதிக பட்சம் ஒரு ஊருக்கு நாடகம் வந்தா கீத்துக்கொட்டா அல்லது தகர கொட்டாதான்... நிலையான நாடக அரங்கம் என்பதாக ,இருக்கும்....
சென்னை அருங்காட்சியகத்துல
இருக்கற மியுசியம் தியேட்டர் போல பர்பெக்ட்
தியேட்டர் அமைப்பில் தமிழ் நாட்டில் வேறு எந்த இடத்திலும் இல்லை..
550 சீட் கெப்பாசிட்டி....
மைக் தேவையே இல்லை.. கணீர்ன்னு பேசினா கடைகோடியில
இருக்கறவனுக்கு கேட்கும்... அப்படி இருந்து இருந்தா நாடகங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருந்து இருக்கும்.. என்பது என் அபிப்பராயம்.
கிரேசி மோகன்,ஒய்ஜி மகேந்திரன்,எஸ்வி சேகர் இன்னும் சிலக்குழுக்கள்
நாடகத்தை இன்றளவும் நாடகத்தை நடத்தி வருகின்றார்கள்..
சரி காவியத்தலைவனுக்கு வருவோம்..
நாசர்(சிவதாஸ் சுவாமிகள்) நடத்தும் நாடக
சபாவில் சித்தார்த் (காளியப்பா) பிருத்விராஜ் (கோமதி), நடிகர்கள் அவர்களுக்குள்
நடக்கும் நடிப்பு மற்றும் சித்தார்த்தின் வளர்ச்சியினால் பிருத்திராஜ்க்கு ஏற்ப்படும் போட்டி பொறாமையே இந்த படத்தின் கதை...
கிட்டப்பா கேபி சுந்தராம்பாள்.. கதையை ஒன்லைனா எடுத்துகிட்டு கற்பனை கலந்து
அந்த காலத்து நாடக நடிகர்களின் வாழ்வியலை..... அவரால் முடிந்த வரை சொல்ல முயற்சிக்கின்றார்.
அப்படி எடுத்துக்கிட்ட முயற்சிக்கு முதலில் வசந்தபாலனுக்கு வாழ்த்துகள்..
முதலில் பிருத்திவிராஜ்... சான்சே இல்லை.. என்னா நடிப்பு...
சித்தார்த்தோடு ஆடும் பாடலில் ஸ்திரிபார்ட்
போட்டு ஆடும் போது அந்த பெண்மையின் நளினம்... பின்புறத்தை மிக அழகாக திரும்பி ஆடும் அந்த நளினம்.... அந்த வெட்டு சான்சே இல்லை.. தன் ஒதுக்கப்படுவது கண்டு மருகுவது
என்று பின்னி பெடல் எடுத்து இருக்கின்றார்...
அடுத்ததாக சித்தார்த்...
குருவி தலையில் பனங்காய் வைத்தது போல முக்கியமான பாத்திரம் அவரால் என்ன முடியுமோ த பெஸ்ட்டை செய்து இருக்கின்றார்...
தன் காதலி கர்பவதியாய் இறந்த செய்தி கேட்டு மண் தூற்றி குருவுக்கு சாபம் இடும் இடம் நடிப்பின் உச்சம்.
வடிவாம்பாள் கேரக்டர்
செய்து இருக்கும் வேதிகா... சான்சே இல்லை... என்னா வெள்ளை என்னா வெள்ளை நூல் புடவை
கட்டினாலும் வறுமையை மீறிய வெள்ளை... அப்படி ஒரு அழகு....
இரண்டு இட்லியை வாயின்
இரண்டு பக்கமும் அதக்கிக்கொண்டாள் ஜோதிகா என்று சத்தியம் அடித்த நம்பலாம்.
யாருமில்லா தனியறையில் சாங் சான்சே இல்லை...
அந்த புடவை உடுத்து
இருக்கும் அந்த அழகு அந்த நளினம் தெகிலான அந்த வயிறும் ... வாவ் என்று சொல்ல வைக்கும்
அழகு.. ஏனனை வீனனை பாடல் மூலிம் அவர் ஆடும்
அந்த அபிநயம்... அற்புதம்.
அனைக்கா சொட்டி ஏஞ்சலினா ஜூலிபோல உதடுன்னு
சொல்ல முடியாது.. இருந்தாலும் ஷோ கேஸ் கண்ணாடியில உதட பதிச்சா இருக்கற உதடு மாதிரி இருக்கின்றது அவரது உதடு..
அனைக்கா சொட்டின்னு கூகுளில் அடித்தால் மார்டன் டிரஸ்களில்
மிரள வைத்தாலும் இந்த படத்தில் பெரிதாய் எடுபடவில்லை
என்றே சொல்ல வேண்டும்.. ஆனால் நாடககலைஞர்கள் ஊரை காலி செய்துக்கொண்டு சென்று விட்டதும் காரில் வந்து இறங்கிய ஷாட்டில் ஒரு மச்சம் எனக்கு மட்டும் கண்ணில் பட்டு தொலைத்தது...
நாசர், பொன்வண்ணன் மிக சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கின்றார்கள் அதே போல சிங்கம் புலி, தம்பிராமய்யா...மன்சூர் அலிகான் போன்றவர்கள் பாத்திரங்களும் பாத்திரபடைப்பு ஏ ஒன்...
என்று சொல்ல வேண்டும்..
நீரவ் ஷா.. கண்ணில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு...
அருமை.
ஏஆர் ரகுமான் டைட்டில் போடும் போதே அக்கால
திரைப்படங்களில் போடும் டைடிலை போல போடுவதோடு..
பின்னனில் பெருமாள் கோவிலில சாமி தூக்கி கொண்டு
செல்லும் போது இசைக்கும் இசை போல திவ்யமாய்
இருக்கின்றது.. பாடல்கள் எல்லாம் அருமை..
ஆனால்
அக்காலத்திய பாடல்களின் சாயலை கொடுத்தால் நிச்சயம்
போர் அடித்து கொட்டாவி விட்டுவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக நிறைய யோசித்து மியூசிக்
செய்து இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.. உதாரணத்துக்கு காயாத கானகத்தே என்று ஆரம்பித்தால் தியேட்டரில் கொல் என்று சிரித்து விடுவார்கள்
என்பதால் ரசிக்கும் படி போட்டு இருக்கின்றார்...ஒரளவு
படத்தை காப்பாற்றுவதும் இவர்தான்.
ஜெயமோகன் வசனம்.,
எந்த அவுசாரி வீட்டுக்கு போய் குண்டி
கழுவி விட்டுட்டு வந்தீரு போன்ற வசனங்கள் நிறைய ஊர் நாடகங்களில் கேட்ட வசனங்கள்தான்...
சம்பாஷனை ஜெயமோகன்... என்ன முடியுமோ அதை கொடுத்து
இருக்கின்றார்... ஆனால் அவரை இன்னும் உபயோகப்படுத்தி இருக்கலாம் என்பது என் எண்ணம்...
நீரவ்ஷா கண்ணுக்கு குளிர்ச்சி... யாருமில்லா சாங்கின் லைட்டிங் அருமை..
========
படத்தின் டிரைலர்..
========
படக்குழுவினர் விபரம்
Directed by Vasanthabalan
Produced by Varun Manian
S. Sashikanth
Written by Jeyamohan
(Dialogue)
Screenplay by Jeyamohan
Vasanthabalan
Story by Jeyamohan
Starring Siddharth
Prithviraj
Nassar
Vedhicka
Anaika Soti
Music by A. R. Rahman
Cinematography Nirav Shah
Edited by Praveen K. L.
Production
company
Y NOT Studios
Radiance Media Group
Distributed by Dream Factory[1]
Release dates
28 November 2014 India
Running time 150 minutes[2]
Country India
Language Tamil
========
பைனல்கிக்.
சரி... படத்தின் நிறைகளை பார்த்து விட்டோம்....
குறைகளை சற்று பார்போம்.
பிரிட்டிஷ் இந்தியாவில் நாடக உலகம் கொடிகட்டிபறந்த
காலம் என 1950க்கு பிற்பட்ட நாடககலைஞர்களின் வாழ்வியலை சொல்ல வேண்டும் எடுத்துக்கொண்ட முயற்சிக்க வசந்தபாலனை
பாராட்டினாலும்.... இந்த கதையை உண்மைக்கு நெருக்கமாக செல்லலாமா? அல்லது கொஞ்சம்
பேன்டசியா செல்லலாமா என்ற குழப்பம் படம் முழுக்க அவருக்கு இருந்து இருக்கின்றது..
உதாரணத்துக்கு ஷின்டலர் லிஸ்ட் திரைப்படம் பிளாக் அண்டு ஒயிட்... படம் உண்மைக்கு
மிக நெருக்கம் என்று வாய் பேசும்...
ஆனால் காவியத்தலைவனை பிளாக் அண்டு ஒயிட்டில் எடுத்தால்..??,
ஒரு பய தியேட்டர் உள்ளே வர மாட்டான்... காரணம் கிமர்ஷியல் சினிமாவில் அதிகம் கட்டுண்ட
ரசிகனுக்கு இப்படிபட்ட கதையே வேப்பங்காய் கசப்பில் இருக்கும்...
அதில் பிளாக் அண்டு ஒயிட்
என்றால் கேட்கவே வேண்டாம்.. பிளாக் அண்டு ஒயிட் படத்தில் காந்தி பேசுவது , பிரிட்டிஷ்
அடக்குமுறை போன்ற காட்சிகள் பளிச் கலரில் இருந்து பிளாக் அண்டு ஒயிட்டுக்கு போகும்
போது ஜெர்க் ஆகின்றது. ஆனால் கம்பரமைஸ் ஆகித்தான் போகவேண்டும்.
நான் நாடககலைஞர்கள் பலரை பார்த்து இருக்கின்றேன்... அதில் பொன்வண்ணன், சிங்கம் புலி, தம்பி ராமைய்யா, நாசர்,
பிருத்திவிராஜ் பொருத்தினாலும் சித்தார்த் தனது பெஸ்ட்டை கொடுத்து இருந்தாலும்
அவர் பொருந்துவது பேசுவது நிறைய இடத்தில் நெருக்கத்தை குறைக்கின்றது..
உதாரணமாக ராஜபார்ட்டுக்கு வேஷம் போட முதலில் பிருத்வி வசனம் பேசி நடித்த அவருடைய ஆம்ஸ் நடுக்கும்
ஆனால் சித்தார்த் பேசி முடித்த உடன் நமக்கே தெரிகின்றது நன்றாக நடித்து பிருத்வி என்று... ஆனால் நாசர்
சித்தார்த்தை தேர்ந்து எடுக்கின்றார்.. எந்த இடத்தில் பிருத்வி கோட்டை விட்டார் என்பதை நாசர் கேரக்டர்
சொல்லி கொடுத்தும், நடித்தும் காட்டி இருந்தால் இன்னும் ஆப்டாக இருந்து இருக்கும்.
என்னை பொருத்தவரை சித்தார்த்துக்க விஷால் சரியான சாய்ஸ்சாக இருந்து இருக்கலாம்.... இது என் அபிப்பராயம். அமுல் பேபி
சித்தார்த் ஒட்ட மறுக்கின்றார்.
அப்புறம் அனைக்கா சொட்டி செட் ஆகவில்லை... இது போன்ற திரைப்படங்களில்
நெருக்கமான மாநிறமான தமிழ் முகங்களே எடுபடும் என்பது என் அபிப்ராயம்.
டைட்டிலில் நிமிர்ந்து உட்கார வைத்த வித்தையை..... படம் முழுக்க நெகிழ்ச்சி படுத்தி இருக்க வேண்டும்.. முதல் பாதியில்
காதல், குருவை தூற்றி சித்தார்த் படும் துயரம் நம் துயர படுத்தினாலும்... இரண்டாம் பாதியில்
தேச விடுதலை என்று போகும் போது முற்றிலும்
தொய்வடைகிறது..
அதே சித்தார்த் தொடை தட்டி போலிசுக்கு சவால் விட்டு விட்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவது அபத்தம்.
இருவர், ஆடுகளம், போன்ற திரைப்படங்களில் நெகிழ்ச்சியடைய வைக்கும்
காட்சிகள் இருக்கும் இதில் மிஸ்சிங்...
அந்த காலத்தில் பொச்சறிப்பு,
பொறாமை,பெண் சல்லாபம் , குடி, அகம்பாவம் போன்றவை
பதிவு செய்து இருந்தாலும் அக்கால வாழ்வின் அறம் இன்று இல்லை..
நவராத்திரி திரைப்படத்தில்
சாவித்திரியும் சிவாஜியும் தங்க ஐரிகை சேலை
பாடலில காட்டும் அபிநயம் அந்த பேச்சு வழக்கு... ரொம்ப நெருக்கமாக நம்மை உணரவைக்கும்... எங்க ஊர் கீற்று
நாடககொட்டாயில் நாடகம் பார்த்த உணர்வை
பிளாக் அண்டு ஒயிட்டில் இருந்தாலும் அது கொடுக்கும் ஆனால் அது இந்த படத்தில் இல்லை..
நெகிழ்சியான ஆழுத்தமான
காட்சிகள் இருந்து இருந்தால் இந்த திரைப்படம்
பார்த்தே தீரவேண்டிய திரைப்படமாக இருந்து இருக்கும்..
இந்த படம் பழமை மீது காதலும்,, புத்தகம் வாசித்தவர்களுக்கு காவியத்தலைவன் பார்க்க வேண்டிய படம்..கமர்ஷியல் ரசிகர்களுக்கு
டைம்பாஸ் படம்.
======
படத்தோட ரேட்டிங்...
ஓவரால் பத்துக்கு ஆறு..ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் நாடக
உலகம் கொடிகட்டி பறந்த காலத்தை எடுத்துக்கொண்ட அந்த தைரியாமான முயற்சிக்காக பத்துக்கு ஏழு...
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
வீடியோ பதிவு.
வீடியோ பதிவு.
============
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Super. . . . .
ReplyDeleteமேற்கத்திய நாடுகளில் இன்னும் நாடகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு ஒரு காரணம் கொடுத்திருக்கீறீர்கள் பாருங்கள். அருமை. அப்படியே வியந்தேன்.
ReplyDelete--- சீதோஷநிலையும் சூழ்நிலைகள்தான் காரணம்...
இங்கே கூத்து பத்து மணிக்கு ஆரம்பித்து விடியலில் ஆறரை மணி வரை கூத்து நடக்கும் ஒரு சாக்கு இருந்தா போதும்.... அதை தரையில போட்டு விடிய விடிய கண்ணு முழிச்சி பார்ப்பான்... ஆனா அங்க அப்படி இல்ல...
சுத்தி பனி... கதகதப்பா ஒரு அரங்கம் அவனுக்கு தேவை... அதனாலதான் அங்க எல்லாம் நாடக தியேட்டர் கெப்பாசிட்டி அதிகம்....ஒரு நாடகம் மூன்று மணி நேரம் அவ்வளவுதான் அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போய் படுத்துடனும் இல்லைன்னா விரைச்சி செத்து போயிடுவான்... ஆனா நம்மளுக்கு அந்த பிரச்சனை இல்லை.---
வாழ்க உங்களது தொண்டு. நீங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்தவரோ? இத்தனை துல்லியமாக சொல்கிறீர்களே?
Good. As you said instead of sidharth vishaal is correct fit. Also vedhiga ...
ReplyDeletein india marathi theaters still live
ReplyDeleteப்ருத்விராஜ் எவ்ளோ கத்தி பேசினாலும் மலையாளம் வாடை தான் அடிக்குது. அதுவும் தமிழ் நாடகத்தில் #கொடுமை
ReplyDeleteசித்தார்த் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என எனக்குத் தோன்றியது. காவியத்தலைவன் திரைப்படத்தைப் பற்றிய என் பதிவு, முடிந்தால் படித்துப் பார்க்கவும்.
ReplyDeletehttp://karthikeyanonline.blogspot.in/2014/12/blog-post_2.html