Munnariyippu-2014/மலையாளம்/ஒரு பெண் பத்திரிக்கையாளரும் ஒரு கொலைக்காரனும்.



ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் இயக்குரானார்...(குருதிப்புனல்)
வெற்றிபெற்றார்.

ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்

ஒளிப்பதிவாளர் ஜீவா  இயக்குனரானார்
வெற்றி பெற்றார்...

ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்.

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் கேவி ஆனந் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குரானார்
வெற்றிபெற்றார்.



இப்படி வெற்றிபெற்றவர்களை சொல்லிக்கொண்டே போகலாம்... தோற்றவர்கள் நிறைய பேர் இருந்தாலும்.... அவர்கள் இந்த விமர்சனத்துக்கு தேவையில்லாதவர்கள்... வெற்றிபெற்றவர்களில்  சிலர் விடுபட்டும் போய் இருக்கலாம்... மேலே சொன்னது எல்லாம்  உதாரணத்துக்குதான்..

ஒவ்வோரு ஒளிப்பதிவு கலைஞனுக்கு உள்ளேயும் நைட் வாட்ச்மேன் போல இயக்குனர் ஒருத்தன் ஒளிந்துக்கொண்டு இருப்பான்....அவ்வப்போது கையில் இருக்கும் லட்டியால் ஏதாவது  கம்பத்தை தட்டுவது போல.. அவ்வப்போது இயக்குனர் கனவு  அவுத்து போட்டு ஆடும்...
திரைக்கதையின்  சூட்சமம் பிடிபட்டு  இயக்குனர் நாற்காலியில் அமர்ந்தாலோ .. அல்லது அந்த நேரத்து டிரென்டுக்கு ஏற்றார் போல கதை அமைந்தாலோ... வெற்றி உறுதி...

 ஆனால் சில வேளைகளில் சனியன் போட்டி போட்டுக்கொண்டு சைக்கிளில் வருவதற்கு பதில் பைக்கில் வந்தால்..... ஒளிப்பதிவாளராய் இருந்து தினத்தந்தியில் எட்டாம் பக்கத்தில்   இயக்குனர் பிரமோஷன் பெறலாம்..

குருவியார் பதிலில்  இடம் பெறலாம்...

ஆனால்  வெற்றிபெறவில்லை என்றால் ஒளிப்பதிவளாராய் கட்டிகாத்து வைத்த பெயரும் காற்றில் பறந்து விடும்..  ஊர்ப்பக்கம் சொல்லும் பழமொழி போல ஆக்கப்பொருத்தவன் ஆறப்பொருக்க வேண்டும்.. கண்டிப்பாக பொருத்தே ஆன வேண்டும்...


ங்கோத்தா நேத்து என்கிட்ட தொமக்கோல் புடிச்சிக்கிட்டு இருந்திச்சி..இன்னைக்கு படம் டைரக்ட் பண்ணி ஏதோ புளுக்குல ஓடிப்போயிடுச்சி.. அதுக்காக அவன் எல்லாம் இயக்குனரா ? என்று விமர்சனங்கள் எழலாம்.. ஆனால் வெற்றி கண்டிப்பாக  பேசப்படும்.. அதற்க காத்திருக்க வேண்டும்.
  
மலையாளத்தில் அனுராக்ஷ்யாப் படங்களுக்கு  ஒளிப்பதிவு செய்த  ராஜுவ்ரவி இயக்குனரானார்

வெற்றிபெற்றார்

அந்த வரிசையில் காக்டெயில் போன்ற என்னற்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் வேணு இயக்கத்தில்  கடந்த ஆகஸ்ட் மாதம் மலையாளத்தில்  வெளியான திரைப்படம்தான்.  

முன்னறியுப்பு... டெட்லைன்... என்ற கேப்ஷனோடு வெளியாகி இருக்கும்  இந்த திரைப்படம் சஸ்பென்ஸ் ஜானர் வகைத்திரைப்படமாகும்..


இயக்குனர் வேணு இயக்கத்தில் வெளியாக முதல் படம்  தயா சிறந்த திரைப்படமாக  சிறந்த இயக்குனர்  விருதை பெற்றுக்கொடுத்தது... மூன்று திரைப்படத்துக்கு  ஒளிப்பதிவுக்கான  தேசிய விருதினை பெற்றவர்...


லோ பட்ஜெட்டில் அற்புதமான திரில்லர்.. மம்முட்டி என்ற மகா நடிகனை துணைக்கு அழைத்துக்கொண்டு இந்த  படத்தில் தைரியமாக களம் இறங்கி  இருக்கின்றார்...
பல்லேரி மாணிக்கம் திரில்லர் திரைப்படத்தில் அதகளம் பண்ணிய மம்முட்டி சேட்டன்  இந்த படத்தில் அண்டர் பிளே செய்து அடக்கி வாசித்து இருக்கின்றார்,...

அதுவும் சிறைச்சாலையில் உடம்பை சுருக்கிக்கொண்டு  படுத்து உறங்கும் அந்த ஒரு  காட்சி போதும்... படத்தின் பலம்... மம்முட்டி.

அபர்னா கோபினாத்.... ((அஞ்சலி)) மம்முட்டிக்கு இணையான பாத்திரம் ... நம்  சென்னை கூத்துப்பட்டறை கலைஞி... விளம்பரபடங்களில் நடித்தவர்.... படத்தின்  பாரத்தை தூக்கி சுமப்பதில் மம்முட்டி நிகராக விளங்குகின்றார்...

 யோவ் அதெல்லாம் இருக்கட்டும்....  கதை மயிரை சொல்லத்தொலை என்று நீங்கள் திட்டுவது சன்னமாக கேட்கும் காரணத்தால்  கதையை சொல்கின்றேன்..

அபர்னாகோபிநாத்.. பத்திரிக்கையாளர்... பயோகிராபி எழுத ஜெயிலர் நெடுமுடிவேணுவை  சந்திக்க... சிறைக்கதை இரட்டை ஆயுள் தண்டனை கைதி... மம்முட்டி ராகவனை சந்திக்கின்றாள்.. அவன் கதை சுவாரஸ்யமாக இருப்பதால்  அவன் ஏன் இரட்டை கொலை செய்தான் என்று விசாரிக்க....???


 ஒப்பா ஒக்காந்து கதை கேட்டது போதும்...  போய் வேலையை பாருங்க.. அப்படியே படத்தை  வெண்திரையில் பாருங்கள்.

படத்தில் இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர்...  அருமையாக திரைக்கதை அமைத்து இருந்தாலும் இன்டர்வெல்லுக்கு பிறகு... கொஞ்சம் சலிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை... அந்த  இடத்தில் வேறு ஏதாவது பரபரப்பான விஷயத்தை யோசித்து இருக்கலாம்.



 சரி.. படத்தோட டிரைலரை பார்த்துடலாம்.



========

படக்குழுவினர் விபரம்.


Directed by Venu
Produced by Ranjith
Screenplay by Unni R
Story by Venu
Starring Mammootty
Aparna Gopinath
Nedumudi Venu
Prithviraj Sukumaran
Joy Mathew
Prathap Pothan
Renji Panicker
Sreeraman
Sudheesh
Saiju Kurup
Music by Bijibal
Cinematography Venu
Edited by Beena Paul
Release dates
22 August 2014
Country India
Language Malayalam

=-==========
பைனல் கிக்.

மம்முட்டியும் அபர்னா   கோபினாத் என்ற இரண்டே இரண்டு லீட் கேரக்டர்களை வைத்துக்கொண்டு நல்ல திரில்லரை கொடுத்து இருந்தாலும் இரண்டாம்த பாதியில்ல்  திரைக்கதையில் மெருகு ஏற்றி இருந்தால் இது பார்த்தே தீர வேண்டிய திரைப்பட லிஸ்ட்டில் வந்து இருக்கும்... ஓகே இந்த படத்தை பார்க்க வேண்டிய திரைப்படத்தில்  இணைக்கலாம்.


==
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழு.
‘========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. நானும் பார்த்தேன் அண்ணா...
    மனுசன் வசனமே ரொம்ப பேசாமல் முகபாவனையில் நடிப்பைக் கொண்டு வந்துவிடுகிறார்...
    கிளைமாக்ஸ் நச்...

    ReplyDelete
  2. may be can recheck the film in another view , are ladies blockade to freedom !!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner