Commitment (2013)/உலக சினிமா/தென்கொரியா/ பாசமலர் உளவாளி,






  எப்படி இந்தியா பாகிஸ்தான்  ஒன்னா இருந்து… சுதந்திரம் கொடுக்கறேன்னு ரெண்டுத்தையும் பிரிச்சி வச்சிட்டு போனதில் இருந்து  இன்னைக்கு வரைக்கும் அடிச்சிக்கிட்டு மங்கம் மாய்கின்றோம்..


அதே போலதான்  ஒன்னா இருந்த நாடு  கொரியா… நம்மளை எப்படி பிரிட்டிஷ்காரன் மேல உட்கார்ந்துக்கிட்டு ரவுண்டு கட்டினானோ.. அது போல  கொரியாவை ஐப்பான்காரன்  காய் அடிச்சான்.. விளைவு சவுத்  கொரியா.,.. நார்த் கொரியான்னு பிரிஞ்சி போய் அடிச்சிக்கிட்டு இன்னைக்கு வரைக்கு கொய்யால  அடிச்சிக்கிட்டு சாவரனுங்க…



 என்ன பண்றது… சில நேரத்துல சில நாடுகளோடு ஆக்கிரமிப்பும் அவர்கள்  பயண்படுத்தும் பிரித்தாளும் கொள்கையும் காலம் காலமாக  தொடர்வதும் அதற்காக பல உயிரிழப்புகள் மற்றும்  இராணுவ செலவுகளும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை என்பேன்.


 இது போதாதா  தென்  கொரிய காரர்களுக்கு கதை செய்ய…???? 2013 ஆம் ஆண்டு தென் கொரியாவில்  வெளியான ஸ்பை திரில்லர் திரைப்படம்தான்  கமிட்மென்ட்.


மத்திம வயதில் இருக்கும் வடகொரியாவின் உளவாளி தென்கொரியாவில் சுற்றி வளைக்கப்டுகின்றான்… வட கொரியா  அவனை கைவிட்டு விடுகின்றது… தென்கொரியாவில் அவன் சுட்டுக்கொள்ளப்படுகின்றான்.. சுட்டுக்கொள்ளப்பட்ட உளவாளிக்கு  ஆண் பெண் என இரண்டு பிள்ளைகள்…  

 கொலைசெய்ப்பட்ட உளவாளியின்  பையன்தான் படத்தின் நாயகன்… நீயும்  உன தங்கையும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் … நீ வடகொரியாவின் உளவாளியாக மாறி.... நாங்கள்  சொன்ன அசைன்மென்ட்டை முடிக்க வேண்டும்.. முடித்தவுடன் நீயும் உன் பாச  தங்கையும் சுதந்திரவானில் சிறகடித்து பறக்காலம் என்று ஆசை வார்த்தை காட்டி   வடகொரிய அதிகாரிகளின் தேன் ஓழுகும் பேச்சை நம்பி தென் கொரியாவில் தலைமை  சொல்லும் அத்தனைபேரையும் மாணவன் வேடத்தில்  பரலோகம் அனுப்புகின்றான்..


 காரணம் தன் தங்கை உயிர் மற்றும் வாழ்க்கை அவர்கள் கையில்…அதனால் பிடிக்காத உளவாளி வேலையை  செய்கின்றான்… தென் கொரியாவில் அவனுக்கு ஒரு காதலி கிடைக்கின்றாள்… ஒரு கட்டத்தில்  தென்கொரிய போலிஸ் அவனை பிடிக்க துரத்துகின்றது… அவன் மற்றும் அவன், தங்கை, அவன் காதலி என்னவானார்கள் என்பதுதான் பரபரப்பான  கமிட்மேன்ட் படத்தின் மீதிக்கதை…


இது போன்ற ஆயிரம்  உளவாளி கதைகளை வைத்துக்கொண்டு ஆறு மாதத்துக்கு ஒரு கதை   செய்து ரசிகர்களை அட்ராசிட்டி செய்வதோடு தென்கொரியாவை ஒரு ஹீரோ நாடு போல பாவித்துக்கொள்ள இந்த திரைப்படங்கள் பேருதவி புரிகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை..

 இந்த படம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்றாலும் சைவம் என்றால் சரவணபவன் சாப்பாடு என்னும் அளவுக்கு திகட்ட வைக்கின்றது.. சில நேரத்தில்  இது போன்ற கதைகள் சுவாரஸ்யத்தை அதிகபடுத்துகின்றது என்பதும் உண்மை.. அந்த வகையில் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.


 படத்தின் நாயகன் Choi Seung-hyun கொரியாவில் பிரபல பாய்ஸ்  பேண்டில் பிரபலமானவர்… சிங்கர்,  கம்போசர், லிரிக்சிஸ்ட், கவிஞர், நடிகர்  என்று பன்முகதன்மை கொண்டவர்… கொரியாவில் ஆண் ஹாட் கேக் என்று தாரளமாக சொல்லாம்..


26 வயதில் பெரும் புகழ் கிடைப்பது எல்லாம் பெரிய கொடுப்பினை நாயகன் Choi Seung-hyun அது கடவுள் கிருபையாளும் கடுமையான உழைப்பாளும் சாத்தியமாகி இருக்கின்றது…

============
படத்தின் டிரைலர்




==========
படக்குழுவினர் விபரம்
Directed by Park Hong-soo[1]
Produced by Park Eun-gyeong
Lee Deok-jae
Lee Seong-hun
Choe Ji-yun
Written by Kim Soo-young
Starring Choi Seung-hyun
Han Ye-ri
Kim Yoo-jung
Music by Noh Hyeong-woo
Cinematography Kim Gi-tae
Edited by Kim Sang-beom
Kim Jae-beom
Distributed by Showbox/Mediaplex
(South Korea)
Well Go USA Entertainment (United States)
Release dates
November 6, 2013 (South Korea)
December 6, 2013 (United States)
Running time 113 minutes
Country South Korea
Language Korean
Box office US$6,834,802

=========

பைனல்கிக்..

 கண்டிப்பாக கமிட்மென்ட் கொரிய படத்தினை  கண்டிப்பாக  பார்க்க வேண்டிய திரைப்பட லிஸ்ட்டில் பரிந்துரைக்கின்றேன்..…. அடித்து துவைத்து கிழத்து காய வைத்த கதை என்றாலும் விறு விறுப்பாக பிரசன்ட் விதத்ததில் திரைக்கதையில் ஸ்கோர் செய்வதால் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

=========
படத்தின் ரேட்டிங்
பத்துக்கு ஏழு..
=====


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner