Spy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...



வேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும்  கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை...
சிலருக்கு சுபிட்சமாக இருக்கும் ஆனால் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்...காரணம் நாளைக்கு வேறு ஒருவர் வந்து அந்த சீட்டில்  உட்காரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு செல்ல வேண்டும்..

ஆனால் எட்டு மணி  நேரம் முடிந்து விட்டால் உங்களுக்கும் அந்த இடத்தில் மிதிப்பில்லை...
நீங்கள் உயர் பதிவியில் அதுவும்..உளவாளிகளுக்கு தலைவராக இருந்தவர்..உங்களுக்கு நெருக்கமான, மிகவும் திறைமையான உளவாளி, கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் உளவாளி அவன்...

எதிரி நாட்டில் ஒரு பெண்ணை காப்பாற்ற போய் மாட்டிக்கொள்ளுகின்றான்...அது அவனது பர்சனல்.. அரசாங்கத்துக்கு  அவன் அந்த செயலில் ஈடுபட்டது தெரியாது...ஆனால் அவனை சிறை பிடித்த உடன் அரசு உயர் அதிகாரிகள் அவனை கைகழுவி வட நினைக்கின்றார்கள்..24 மணி நேரத்தில் அவனை சாகடித்து விடுவார்கள்..

நல்ல பையன்.. நாட்டுக்காக  உயிரை துச்சமென மதித்து எதிரி நாடுகளில் பல ஆப்பரேஷன்களை வெற்றிக்கரமாக முடித்தவன்..
காலையில் துயில் கலைந்து நீங்கள் எழுந்து இருக்கும் போது, உங்க பய சைனாவில் மாட்டிக்கொண்டான் என்ற செய்தி வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்??


உங்களுக்கு அதுதான்  கடைசி நாள்.. இன்று மாலை ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும்  உங்களால் என்ன செய்து கிழித்து விட முடியும்...சரி அரசாங்கம் காப்பாற்றும் என்றால் அது கைகழுவி விட்டு விட்டது...உயர் அதிகாரிகள் எல்லாம் உங்களுக்கு எதிராய் இருக்கின்றார்கள்.. 

நீங்கள் என்ன செய்து கிழித்து விட முடியும்....???
கடைசி நாளாக  இருந்தாலும் மனிதாபிமானம் என்று ஒன்று இருந்தாலும்,தன்னம்பிக்கை இருந்தாலும் தன்னால்கிழிக்க முடியும் என்று நிரூபித்த ஒரு அமெரிக்க சீஐஏ எக்ஸ்கியூட்டிவ் ஆபிசரின் கதைதான் இந்த படம்..

=======================
Spy Game-2001 படத்தின் திரி லைன் என்ன??

எதிரிநாட்டில் மாட்டிக்கொண்ட உளவாளியை அரசாங்கம் கைகழுவி விட்ட நிலையில் தனது சாதூர்யத்தால்  அந்த உளவாளியை நேசித்த அதிகாரி அவனை எப்படி விடுவிக்கின்றார் என்பதே இந்த படத்தின் திரிலைன்...
       ===================
Spy Game-2001 படத்தின் கதை என்னன??


டாம் பிஷப் (Brad Pitt ) ஒரு ஜில்லாக்கத்திரி உளவாளி..அவனது திறமையை பார்த்து  நாதன் முர்ரி (Robert Redford) பல ஆப்பரேஷன்களை அவனிடம் ஒப்படைத்து பெயிலியர்  இல்லாமல் எல்லா அப்பரேஷன்களையும் சக்ஸஸ் புல்லாக முடிக்கின்றார்... 

ஆனால் சைனாவில் சிறையில் இருக்கும் அவனது காதலியை காப்பாற்ற  போகும் போது மாட்டிக்கொள்ள. தனது திறைமை வாய்ந்த உளவாளியை ரிட்டெயர்மென்ட் ஆகும் கடைசி நாளின் போது எப்படி மீட்டார்? என்பதை வெண்திரையில் பாருங்கள்.
========================
படத்தின் சுவாரஸ்யஙகளில் சில..

ஹாலவூட்டின் தவிர்க்க முடியாத ஆக்ஷன் பட இயக்குனர் டோனி ஸ்காட் 2001ல் இயக்கி வெளிவந்த படம் இது.. இவருடைய முந்தைய படங்கள் ஆன மேன் ஆன் பயர், டேஜாவூ, அன் ஸ்டாப்பபிள் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.. அன் ஸ்டாப்பபிள் படத்தினை வாசிக்க இங்கே கிளிக்கவும்..

ராபர்ட் ரெட் போர்ட்.... உளவாளியா பிராட்பிட் செய்த சகாசங்களை சொல்லிக்கொண்டே அவனை விடுவிக்க எடுக்கும் ஆயுத்தங்கள்தான் இந்த திரைப்படம்..

24 மணி நேரத்தில் எதாவது செய்யவில்லை என்றால் பிராட் பிட்டை சுட்டுக்கொன்று விடுவார்கள் என்பதால் அந்த பரபரப்பை திரைக்கதையில் காட்டி இருப்பது படத்தின் விறு விறுப்புக்கு பக்க பலம்..

இன்னையோட கடைசி நாள் நீங்க எதாவது மிஸ் பண்ணிட்டிங்களா என்று ரெட் போர்டோட செக்கரட்டிரி கேட்கும் போது மெல்ல முன்னே  வந்து அந்த கருப்பின பெண்ணின் கன்னத்தில் மெல்லிய முத்தமிடும்  காட்சி பல நாள் இணைந்து பணியாற்றிய பாசப்பினைப்பை சொல்லும்  காட்சி..

பிராட் பிட். ,ரெட்  போர்ட் இணையும் காட்சிகள் எல்லாம் கலக்கலோ கலக்கல்..

இந்த பில்டிங்கை விட்டு ஐடி காட்டை கொடுத்து விட்டு வெளிய போய் விட்டால் அதன் பிறகு ஒன்றும் செய்ய முடியாது என்பதால் இரவு முழுவதும் தூங்காமல் காய் நகர்த்துவது அற்புதம்.

மனைவியோடு பேசுவது போல டின்னர்  அவுட் என்ற  சொல்லை பிராட் பிட்டை காப்பாற்றும் ஆப்பரேஷனுக்கு பயண்படுத்துவது மிகுந்த புத்திசாலிதனம்..

காப்பாற்ற தான் சேமித்து வைத்து இருந்த பணத்தை எல்லாம் இழப்பது என நாதன் முர்ரி கேரக்டரில் ரெட்போர்ட் ஜொலிக்கின்றார்..

பிராட் பிட் ஹெலிகாப்டரில் வரும்  போது என்ன ஆப்பரேஷன்? என்று கேட்க... சாப்பர் பைலட் டின்னர் அவுட் என்று சொல்வதும் புரிந்து கொண்டு பிராட்பிட் புன்னகைப்பதும் அசத்தலான காட்சி..

கடைசியாக அந்த அலுவலகத்தை விட்டு கிளம்பி கார் எடுத்துக்கொண்டு பறக்கும் காட்சியில்  ரேட் போர்டை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றும் அதுதான் அந்த கேரக்டரின் வெற்றி என்பேன்...

==================

படத்தின் டிரைலர்..


=======================
படக்குழுவினர் விபரம்.


Directed by     Tony Scott
Produced by     Marc Abraham
Douglas Wick
Thomas Bliss
Written by     Michael Frost Beckner
David Arata
Starring     Robert Redford
Brad Pitt
Catherine McCormack
Music by     Harry Gregson-Williams
Cinematography     Daniel Mindel
Editing by     Christian Wagner
Studio     Beacon Pictures
Distributed by     Universal Pictures
Release date(s)     November 19, 2001
Running time     126 minutes
Country     United States
Language     English
Budget     $92 million
Box office     $143,049,560
============================
பைனல் கிக்..
இந்த படம் விறு விறுப்பான  திரைக்கதைக்காக பார்த்தே தீரவேண்டிய படம்..முக்கியமாக ராபர்ட் ரெட் போர்ட் நடிப்புக்காகவும் மிக அழகாக காய் நகர்ந்தும் அந்த விறு விறுப்புக்கு   பார்த்தே தீர வேண்டும்.. இந்த படம் சென்னை மூவிஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது.

=======================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

11 comments:

  1. சிறப்பான விமர்சனம் சார்..படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்..நன்றிகள்.

    ReplyDelete
  2. இந்த படத்தை நான்
    பார்க்க சான்ஸ் இல்லை.
    ஓகே ...ஆனாலும் உங்கள் விமர்சனம்
    படிக்க படிக்க ....
    i miss the film.
    இப்போ எனக்கு இந்த படம் குறித்த
    தகவல்கள் அதன் சுவாரசியம்
    தேரிந்து உள்ளது ...
    கால ஓட்டத்தில் இந்த படம் எங்காவது கண்டால்
    உங்கள் நினைவு வருவது தவிர்க்க முடியாது.
    என்னமோ போங்கள்.......
    எளிமையான ஆனா வலிமையான எழுத்து நடை ..
    அப்படியும் சொல்ல முடியாத
    அசை போட வைக்கும் எழுத்து நடை
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    யானைக்குட்டி

    ReplyDelete
  3. இந்த படத்தை நான்
    பார்க்க சான்ஸ் இல்லை.
    ஓகே ...ஆனாலும் உங்கள் விமர்சனம்
    படிக்க படிக்க ....
    i miss the film.
    இப்போ எனக்கு இந்த படம் குறித்த
    தகவல்கள் அதன் சுவாரசியம்
    தேரிந்து உள்ளது ...
    கால ஓட்டத்தில் இந்த படம் எங்காவது கண்டால்
    உங்கள் நினைவு வருவது தவிர்க்க முடியாது.
    என்னமோ போங்கள்.......
    எளிமையான ஆனா வலிமையான எழுத்து நடை ..
    அப்படியும் சொல்ல முடியாத
    அசை போட வைக்கும் எழுத்து நடை
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    யானைக்குட்டி

    ReplyDelete
  4. சான்ஸ்லெஸ் மூவி...

    அதுவும் கிளைமாக்ஸ்ல வர்ற லெபனான் சாங்... ஆதல முர்ரே நடந்து காருக்கு போக...
    கார் கேட்ட தாண்டினவுடனே வர்ற பீட்...

    நான் எழுந்து நின்னு கை தட்டினேன் தல...

    Absolute Stunning Climax... :)))

    ReplyDelete
  5. your review tempts me to see this movie...

    ReplyDelete
  6. nice review , it tempts me to see this movie

    ReplyDelete
  7. நன்றி யானைகுட்டி ராஜேந்திரன்.

    நன்றி அகல்விளக்கு,,. உண்மைதான் அந்த லாஸ்ட் ஷாட்...மனதை விட்டு அகலாதவை..

    நன்றி இளம்பருதி,குமரன். செல்வ சங்கர்..

    ReplyDelete
  8. Dear Jackie,

    Ungaloda Inspirationla naanum oru blog open postum pottutten.

    http://powerstarbala.blogspot.com/

    unga comment sollunga..
    anbudan,
    bala

    ReplyDelete
  9. உங்கள் சினிமா கட்டுரைகளை நான் விரும்பி படிக்கின்றேன் சார். வெளிப்படையாக உள்ளது உங்கள் எழுத்து.அவ்வப்போது சில சினிமா கட்டுரைகளை நண்பர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியும் வைக்கின்றேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner