முத்தப் போராட்டம்…..மடியில் உட்கார்ந்துக்கொண்டு விளையாட்டின் ஊடே…ஐ லவ் யூப்பா என்று சொல்லியபடி யாழினி எனக்கு உதட்டில் முத்தமிட்டால்…

ஹே..???.-! யார் இப்படி முத்தா கொடுத்தா உனக்கு?? என்றேன்..
 யாருமில்லைப்பா…

குட்.. இப்படி முத்தா  கொடுக்க கூடாதுடா செல்லம்… வாய்ல இருக்கற ஜெம்ஸ் ஸ்பிரட் ஆவும் இல்லை அதனால இது வேணாம்டா….

 சரிப்பா. என் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ உதட்டு  முத்தம் எப்போது கொடுத்தேன் என்று யோசித்தேன்..

அப்பா மூஞ்சியை குளோசில் நான்  சிறுவயதில் பார்த்ததோ..?? அல்லது  தூக்கி என்னை உச்சி முகர்ந்ததோ…    குட் பாய் என்று முத்தமிட்டதோ என் வாழ்நாளில்   நிகழவே நிகழாத அற்புதம்  அது.

 எப்போது பார்த்தாலும் உருப்படாத சனியன் என்று திட்டு வாங்கி கொண்டு இருக்கும் பையன் நான்.. அல்லது கண்டிப்பாக  உதை இருக்கும்… காரணம் வாய் அதிகம்… நிறைய கேள்வி கேட்பேன்.. அப்பாவை பொருத்தவரை அது அதிகபிரசங்கிதனம்.

பாராட்டை கூட… அப்பா  ரொம்ப நக்கலாக சொல்லும் ரகம்…
  நான் பத்தாம் வகுப்பு பாஸ் செய்த போது…  அப்பா சொன்னார்.
.
மொண்டாட ஒத்தது… பத்தாவது பெயில்  ஆயி என் மானத்தை வாங்கும்ன்னு நினைச்சேன்… நல்ல வேலை  பாசாயிடுச்சி… என்று அஃறினையாகத்தான் பேசுவார்…


என்னை பார்த்தாலே அவருக்கு ஏனோ பிடிக்காது… திட்டுவதை தவற எந்த வழிகாட்டுதலோ  அல்லது பரிவையோ  அறியாத பிள்ளை நான்….

ஆனால் அப்பாவுக்கு  முதுகு தண்டுவடத்தில் ஆப்பரேஷன் செய்ய அழைத்து சென்ற போது…. மனம் கேட்காமல் அப்பா நெற்றியில் முத்தமிட்டு  ஆப்பரேஷன் தியேட்டருக்கு அனுப்பி வைத்தேன்.

 நிறைய முறை அம்மா எனக்கு உச்சி முகர்ந்து   முத்தமிட்டு இருக்கின்றாள்… என் வயத்து புருஷன் என்ற பெருமையுடன் நான் வயதுக்கு வந்த பின்பும் கட்டிப்பிடித்து  என்னோடு உறங்கி இருக்கின்றாள்…

எல்லோரும் என்னை  விலகி நின்று  பேசுகின்றார்கள் என்று காசநோய் மருத்துவமனையில் மரணத்தின் விளிம்பில்  அம்மா பீல் பண்ணிய போது… கண்ணில் நீரோடு,மஞ்சள் பூசிய  அவள்  முகத்தின் சகல இடத்திலும்… உதட்டிலும்  நான் முத்தமிட்டேன்.. அந்த உதட்டு முத்தம்  நெற்றி வியற்வை ஒற்றி எடுக்கும் கர்சிப் ஸ்பரிசத்தை ஒத்ததாய் இருந்தது.


ஆங்கில படங்களில் தொடர்ந்து பார்த்து வருவதால்  பெற்றோர்…. சிறு குழந்தைகளுக்கு உதட்டு ஸ்பரிச முத்தம் சாதாரணம் என்றாலும் நம்  நாட்டில் உயர்குடியில் அது இருப்பதை பார்த்து இருக்கின்றேன்…


முன்பெல்லாம்  திரைப்படங்களில் சிவாஜி முத்தம்  கொடுத்தால் இரண்டு டோரியா பூ  அல்லது இரண்டு  சூர்ய காந்தி பூக்கள்  ஆக்ரோஷமாக மோதிக்கொள்வதை காட்டி விட்டு.. அதன் பின்பு…. சிவாஜி புறங்கையால் எச்சியை துடைத்துக்கொண்டு  திரையை பார்த்து ஒரு ரொமான்டிக்க்க்க்க் லுக் விடுவார்..

 அதனால் கூட  அந்த வயதில் உதட்டு முத்தம் கொடுக்காமல்  அல்லது முயலாமல் இருந்து இருக்கலாம்.. அது மட்டுமல்ல… கந்தன் கருனை, திருவருட்செல்வர் மட்டுமே  பால்யகாலத்தில் பார்த்த  படங்கள்.. அதனால் உதட்டு முத்தத்தின் மீதான  கவர்ச்சி இல்லைவே இல்லை…

  ஆங்கில படம் பார்த்து பார்த்து   வெறி கொண்டு   கண்காணிப்பு கேமரா வரும் முன்  ஸ்பென்சர் கிரவுன்ட் புளோர்  படிக்கட்டில் ஒரு பெண்ணுக்கு ஆங்கில முத்தம் கொடுத்தேன்..

யாருக்கு என்பது இக்கட்டுரைக்கு தேவையில்லாத விஷயம்…

ஆனால் இப்போது… டிவியில் குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லும் நிகழ்ச்சிகளில் கூட   உதட்டு முத்தம் அல்லது முகவாய் நோக்கி விரகதாபத்துடன் உதட்டை குவித்து  நாயகன் செல்லும்   போது ….

உதட்டு முத்தத்தை நோக்கி அடுத்த தலைமுறை  வேகமாக செல்வதிலும்  முத்த போராட்டம் செய்வதிலும்    ஆச்சர்ய பட  ஏதுமில்லை.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
22/11/2014நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner