சவுஜன்யா…
இந்த பெயரை கடந்த மே 12 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியான போது சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1200க்கு ஆயிரத்து 1168 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்ற மாணவி…
அப்போது இந்து இதழில் ஒரு புகைப்படம் வெளியானது… அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அந்த போட்டோவை போட்டு கீழ் வருமாறு எழுதினேன்.
=========
ஆயிரம் பேர் மார்க் எடுக்கலாம் ,கேமராவுக்கு உதடு நடுங்க வாயை திறந்துக்கொண்டு இனிப்பு வாங்க போஸ் கொடுக்கலாம்..
ஆனாலும் சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1168, மதிப்பெண் பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கும் சவுஜன்யாவுக்கு அம்மா இல்லை.. ரத்தபுற்றுநோயால் இறந்து போய் விட்டார்…
அப்பாவுக்கு கண் தெரியாது… தம்பி தங்கைகளுடன் சொற்பமாக வரும் வீட்டு வாடகையில் படித்து வெற்றி பெற்று இருக்கின்றார்…மதிப்பெண் ரிசல்ட் பார்த்து விட்டு பார்வையற்ற தகப்பனை அழைத்துக்கொண்டு நடந்து வந்த இந்த சவுஜன்யாவில் பீடு நடை இருக்கின்றதே…
அதுக்கு இணையே இல்லை.. காலையில் அந்த போட்டோ ஆயிரம் மிடுக்குளை உணர்த்தியது.
வாழ்த்துகள் சவுஜன்யா
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
==========
என்று எழுதி இருந்தேன்…
அந்த ஒரு பதிவுக்கு மட்டும் 10,664 லைக்குகளும் அந்த பதிவை 7,869 பேர் ஷேர் செய்து இருந்தார்கள்…
ரிசல்ட் வந்த அன்றே… நான் அந்த பெண்ணின் நம்பரை வாங்கி எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள் என்றேன்…மீடியா கூட்டம் அதிகம்…உதவிகள் சிலர் செய்தார்கள்…
கட்சி ரீதியாக காங்கிரஸ் மற்றும் அதிமுகவினர் நிதியுதவி செய்ததாக அந்த பெண்ணின் அப்பா தெரிவித்தார்… இந்த வருடம் நண்பர்கள் அனுப்பிய கல்வி உதவிதொகையில் இந்த வருடம் தீபாவளிக்கு துணிமணிகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை போன வருடம் போல இந்த வருடமும் அளிக்க நினைத்தேன். இந்த முறை 20 மாணவ மாணவிகள்… அதில் சவுஜன்யாவும் ஒருவர்.. விரிவான பதிவு விரைவில் எழுதுகின்றேன்.
அப்பா அல்லது அம்மாவை இழந்த ஏழ்மையில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு அந்த உதவி சென்று சேர வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தேன்.
சவுஜன்யா வீடு சைதாபேட்டை அருகே கிண்டி எஸ்டேட் செல்லும் ஆலந்தூர் சாலையில் இருந்தது…
வீட்டு வாசலில் இருக்கும் கடையில் மாட்டுகறியை பீஸ் பீசாகி கொண்டு இருந்தார்கள்.. யாழினி மற்றும் மனைவியோடு அவர்கள் வீட்டை கண்டு பிடித்தேன்… அவர் அப்பா வரவேற்றார்…
அந்தகாலத்து வீடு… அந்த வீட்டில் வரும் சொற்ப வாடகையில் அந்தபெண் படித்து 1168 மதிப்பெண்கள் பெறுவது சாதாரண விஷயம் இல்லை…
மழை பெய்த காரணத்தால் நசநசப்பு எல்லா இடத்திலும் வியாபித்து இருந்தது.. பத்துக்கு பத்து அறை எப்படி இருக்கும் என்றால் சவுஜன்யா வீட்டை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.
அழுக்கேறிய ஒரு படுக்கை… அதற்கு எதிர்புறம் இருக்கும் செல்பில் டிவி ...அந்த சின்ன வீட்டில் கண் தெரியாத அப்பா… அவளின் தம்பி மற்றும் அக்காவோடு வாசம் செய்து படிக்கவும் வேண்டும்.
யாழினிக்கு ரொம்பவும் வியப்பாக இருந்தது….
முதலில சவுஜன்யாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன்…
தற்போது சீஏ படிக்கின்றார்… அடுதத வருடத்தில் இருந்து எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேட்க சொன்னேன்.. 5 நோட்டு புத்தங்கள் மற்றும் நான்கு சுடிதார் செட்டுகளை யாழினி மூலம் வழங்கினேன்…
சவுஜன்யாவிடம் என் மனைவி சீஏ படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தன்னிடத்தில் தயக்கம் இல்லாமல் கேட்குமாறு கேட்டுக்கொண்டார்..
எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெற்றேன்..
அவர் அப்பா நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார்…
வாழ்த்துகளை சொல்லி விட்டு விடைபெற்றோம்…
ச்சே இந்த மாதிரி எடத்துல இருந்துக்கிட்டு இவ்வளவு மார்க் எடுத்து இருக்கறது எல்லாம் சாதரண விஷயம் இல்லை ஜாக்கி என்று என் மனைவி உணர்ச்சிவசப்பட்டார்…
வீரீயமுள்ள விதை மிக விரைவில் தடைகளை உடைத்து வெளிவரும் சக்தி கொண்டது அதற்கு உதாரணம் சவுஜன்யா…
சாத்திய படுத்திய நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
03/11/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Boss . I admire you. pl keep it up. Thanks
ReplyDeleteசவுஜன்யா வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteவீடுதேடி சென்று உதவிய தங்களின் மனதைப் பாராட்டத்தான் வேண்டும் நண்பரே
பாராட்டுக்கள்
தம 1
ReplyDeleteநல்ல பணி... வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteGood work sir
ReplyDeleteGreat , good
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பர்களே...
ReplyDeleteதிரும்பவும் சொல்கின்றேன்… இந்த விஷயத்தில் நான் ஒரு கருவி அவ்வளவே… அன்பே
சிவம் படத்தில் கமல் சொல்வது போல… காலண்டர் மாட்ட ஆணி அடிக்க சுத்தி தேவைப்படும்…
ஆணி அடிச்சதும் சுத்தியை ஓரமாவச்சிடுவாங்க.. அது போலத்தான் நான்… இதன் பெருமைகள் அனைத்தும் என்னை நம்பி பொருளுதவி செய்த நண்பர்கள்
வட்டத்தையே சாரும்… மீண்டும் என் நண்பர்களுக்கு உங்கள் முன் சிரம் தாழ்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
அற்புதமான இந்த உதவும் மன உணர்வாளர்கள் அனைவரையும் வணங்கி கொள்கிறேன் சார் அடுத்த முறை என்னையும் இம்மாதிரி ஒரு நல்ல விசயத்துடன் இணைத்து கொள்ளும் வாய்பை இறையருள் உதவும் .
ReplyDeleteYou have involved your family members also in helping the poor and needy. Great Job.
ReplyDeleteKeep it up.
முற்றுப்புள்ளி வைத்துவிட்டீர்களே,இருப்பினும்,தங்களையும்,தங்கள் நன்பர்களையும் வாழ்த்தி பெருமிதங்கொள்கிறேன்
ReplyDeleteஅன்பே
ReplyDeleteசிவம் படத்தில் கமல் சொல்வது போல… காலண்டர் மாட்ட ஆணி அடிக்க சுத்தி தேவைப்படும்…
ஆணி அடிச்சதும் சுத்தியை ஓரமாவச்சிடுவாங்க.. அது போலத்தான் நானும்... ம் ... பல விசயங்கள். உங்கள் பார்வையும் என்னுடன் பயணிக்கிறது.