எனது முதல் முயற்சி வீடியோ பிளாகிங். நண்பர்களின் ஆதரவு தேவை.



ஏன் ஜாக்கி சார் இந்த வேண்டாத வேலை உங்களுக்கு?


இதை விட எழுதிடுங்க... கொடுமையா இருக்கு...

நீ எழுதறதே படிக்கறதே எங்க விதின்னு நினைச்சிக்கிட்டு இருந்த இதுல இது வேறயா?
ஏன்யா படுத்தி எடுக்கற..??

என்பது போன்ற விம்ர்சனங்கள் வரலாம்.... ஆனால்  எனக்கு  தோன்றியைதை இன்றுவரை செய்து இருக்கின்றேன்...

நான் எடுத்து  வைத்த எந்த முதல் முயற்சிக்கும் முதலில் எதிர்ப்பையும்  அவ நம்பிக்கையான பேச்சுக்களைதான் அதிகம் சந்தித்து இருக்கின்றேன்... ஆனால் அவைகளை தகர்த்து முன்னேறிய  போதுதான் நிறைய சாதிக்க முடிந்து இருக்கின்றது..
பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் ஒரு கதையை சொன்னால் லஞ்சு பிரேக்கில்  என்னை சுற்றி 20 பேர் இருப்பார்கள்.. 




ஆனால் அது  போல  சென்னை வந்து நண்பர்கள் சூழ கதை பேசியதில்லை.. அப்படியே பேசிய நண்பர்களும்  உண்மையாய் இல்லை...
ஆனால் பேசுதல் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். ஆனால் அது மிகவும்குறைந்து விட்டது என்பதே உண்மை...

ரொம்ப நாளாக வீடியோ பிளாக்கிங் செய்ய வேண்டும் என்று ஆசை... ஆனால் எழுத்தை விட அதற்கு மெனக்கெடல் அதிகம்... கேமராவுக்கு ஒரு ஆள் எடிட்டிங்கிற்கு ஒரு ஆள் என்று  மற்றவரை சார்ந்து இருக்க வேண்டும்...


இரண்டு மணிக்கு எழுந்து  தூக்கம் வரவில்லையா? சரி எழுதுவோம் என்று நிறைய பதிவுகள் எழுதி இருக்கின்றேன்.. ஆனால் வீடியோ பிளாக்கிங் என்பது குழு முயற்சி...காரணம் எனக்கு எடிட்டிங்  தெரியாது இனிமேல்தான்  கற்றுக்கொள்ள வேண்டும்..

 முதல் முறையாக கேமரா முன்  நின்று பேசும்  போது நிறைய சொதப்பல்கள்.. இயல்பாக இல்லாமல் ஆர்ட்டிபிஷியலாக அதிகம் இருந்தது... அதனை போக்க  நிறைய பயிற்சி எடுத்துக்கொண்டேன்.ஏதோ பேசி இருக்கின்றேன்...
 நீங்கள்தான்  பார்த்து விட்டு கருத்து கூற வேண்டும்.



கல்லூரியில் வகுப்பு எடுக்கும் போது பேசி இருக்கின்றேன்... நிறைய பேசி இருக்கின்றேன்..  திருமணத்துக்கு பிறகு  பேசுதல் மிக குறைவாகி விட்டது...

 சார் அவர் கம்ளெயின்ட் கொடுத்த என்ன? காம்பளான் குடிச்சா எனக்கு என்ன?  பறிபோனது அத்தனையும் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்.. நான் யார் தெரியுமா? ரிப்போர்டர்..  பார்க்கறிங்கலா? நாளைக்கு காலையில பேப்பர்... ஏடிஎம் பணமும் மேனேஜரின் நாமம் போடும் குணமும்ன்னு கொட்டை எழுத்துல முக பக்கத்துல வர வைக்கிறேன் பார்க்கறிங்களா?

 என்பதுதான் சிகரம் தொடு திரைப்படத்தில்  நான் பேசிய  டயலாக்...
ஆனால் இந்த டயலாக்கை மனப்பாடம் பண்ணி,பாத்ரூமுக்கு போய்  கண்ணாடி முன்  பேசி பார்த்து, ஷாட்டிவில் வியர்வை மற்றும்  படபடப்போடு பேசினேன் என்பதே உண்மை...

 ஆனால்   இது என் இயல்பு அல்ல...   ரேடியோ ஜாக்கிபோல நிறைய பேசுபவன்..பழக்கம்  இல்லாத காரணத்தால் கோர்வையாக பேசவரவில்லை... என்பதே உண்மை.

 இந்த வீடியோ பிளாக்கிங்.

 எனக்கான பயிற்சிகளமாக  இருக்கும் என்று நம்புகின்றேன்.
நிறைய விஷங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஜாக்கி சினிமாஸ் தளத்தின் மூலம் வருகின்றேன்..

 சினிமா முக்கியம் என்றாலும் அத்துடன் நான் பார்த்த சந்தித்த நிறைய  விஷயங்களை  இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.. வழக்கமாக ஆதரவு  நீங்கள் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்..

 அப்ப எழுதறது..?? அது எப்பவும் போல  தொடர்ந்து நடக்கும்.. 



 நன்றி

வணக்கம்.

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


(குறிப்பு...


வீடியோ பிளாக்கிங்கில் முதல் வீடியோ என்பதால்... கொஞ்சம் விரிவாய் இருக்கும்.. அடுத்து வீடியோக்கள் மிகவும் ஷார்ப்பாக எடிட் செய்து போடுகின்றேன்..  இந்த வீடியோ  பற்றிய உங்கள்  கருத்துக்களை   பின்னுட்டம் மற்றும் jackiecinemas@gmail.com   மெயில் ஐடிக்கு  மறக்காமல் அனுப்புங்கள்..  காப்பிரைட் பிரச்சனைகள் போன்றவற்றில்  எனக்கு தெளிவில்லை.. இது பற்றி நன்கு அறிந்த நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு விளக்கினால் மிக்க மகிழ்ச்சி.
 நன்றி.)


னைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

16 comments:

  1. அண்ணா வாழ்த்துகள்.

    உங்கள் எழுத்தை மட்டும் வாசித்துவந்த எங்களுக்கு இந்த புது முயற்சி ஒரு பல்சுவை விருந்தாக அமைவது உறுது. நீங்கள் மேலும் புகழ்பெற எனது வாழ்த்துக்கள்.

    ச. இராஜசிம்மன்

    ReplyDelete
  2. Apaaaaaa ini ennoda kannu valikka padikka vendiyadhillai... Jolly.. Nee nadathu pa Jackie... We will support..

    ReplyDelete
  3. ஆஹா.... உங்கள் பேச்சில் இனி விமர்சனங்கள்...
    கல்க்குங்க அண்ணா...

    ReplyDelete
  4. Apdiyae naanga comment podaradhum video comments a vasadhi panni kudutheengana nalarukkum

    ReplyDelete
  5. உங்கள் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் Jackie.

    ReplyDelete
  8. முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. http://www.senkthiron.com/2014/11/blog-post_29.html

    My view

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner