தந்தி டிவியில் கிழக்கு பதிப்பகம் பத்ரி ராஜபாட்டை என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கின்றார்...
தந்தியை விட்டு வெளிவந்து ஒன்றரை வருடங்கள் ஆனாலும் அதுதான் என் தாய் வீடு என்பதால் சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கவனம் செலுத்துவேன்...
நண்பர் ரசனை ஸ்ரீராம் பேஸ்புக்கில் எழுத்தாளர் பாலகுமாரனை பத்ரி நேர்முகம் செய்த ராஜபாட்டை நிகழ்ச்சியின் லிங்க் கொடுத்து இருந்தார்... அள்ளி அள்ளி பருகும் அமிர்தமடா என்று கேப்ஷன் வேறு எழுதி இருந்த காரணத்தால் மிகவும் ஆர்வமானேன். அதனால் யூடியூபில் அதனை பார்த்தேன்..
பத்ரியின் உடை செலக்ஷன் பிளசன்டாக இருந்தது...40 நிமிட நிகழ்ச்சியில் பாலகுமாரனின் அத்தனை சாதனைகளை பேசி விட்டார் என்றே சொல்ல வேண்டும்...
மோட்டர் கொட்கையில் இருந்து பீரிட்டு செல்லும் தண்ணிரை தேவையான இடங்களில் நீர் பாய்ச்சி, கவனத்தோடு மடை கட்டி அடுத்த இடத்துக்கு தண்ணீரை கொண்டு செல்வது போல மிக அழகாக நிகழ்ச்சியில் அடுத்த அடுத்த கேள்விகளுக்கு பத்ரி தாவினார்.
முக்கியமான விஷயம் தான் எல்லா துறையிலும் இன்டலெக்சுவல் அதனால் எனக்கு உங்களை விட எனக்கு எல்லாம் தெரியும் என்று கேள்விகளில் முந்திரிக்கொட்டை தனம் இல்லை.. அது மட்டுமல்ல செலிபிரிட்டியை பேசவிடாமல் லொட லொட என்று பேசிக்கொண்டு இருக்கும் காம்பயர் போல இல்லாமல் அண்டர்பிளேயில் தனக்கு என்ன தேவையோ அதனை மட்டும் கேள்விகளாக சிம்பிளாக கேட்டார்.
அதனால்தான் பாலகுமாரன் பயணித்த அத்தனை துறைகள் பற்றியும் அடுத்த அடுத்த கேள்விகளுக்கு தாவ முடிந்தது...
பாலகுமாரனும் லேசுபட்டவரில்லை மிக அருமையாக எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசினார்...
முக்கியமாக என்னுடைய ஆள்டைம் பேவரைட் புக் பயணிகள் கவனிக்கவும் புத்தகத்தை பற்றி இந்த பேட்டியில் தான் பேசி இருக்கின்றார்...
அதை விட இவ்வளவு காதலும் காமும் வன்மும் உள்ளவனாக டிராவல் ஆனா உங்களிடம் இன்னமும் காமமும் காதலும் இருக்கின்றதா? என்று பத்ரி சுற்றிவளைத்து கேட்க.. அது இல்லாமலா? ஆனா காதலுக்கோ காமத்துக்கோ இனமை பிராயத்தில் செய்த அபத்தத்தை இந்த மனது செய்வதில்லை... காமம் சில நேரங்களில் அது ஓரமாகவும் நினைவு ரூபமாகவும் இருக்கின்றது என்று சொல்லி அசத்தினார்.
பாலகுமாரனின் எழுத்துக்களை மட்டும் வாசிக்கவில்லை என்றால் நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க வாய்ப்பேயில்லை.... இன்னமும் இன்பிரியாரிட்டி காம்ளக்சில் முக்கிக்கொண்டு இருப்பேன்..
ஆனால் தன் எழுத்தின் மூலம் நாம ஜெயிக்கலைன்னா வேற எவனாலும் ஜெயிக்க முடியாதுடா என்று சாட்டையை எடுத்து தன் எழுத்தின் மூலம் வாசிப்பவர்கள் மீது வீசியது மட்டும் இல்லாமல் சோம்பேரியாக பத்தோடு பதினோன்னா இருக்காதே...சோம்பி உட்காராதே ஓடு ஓடு என்று துரத்தி விட்டவர் அவர்தான்...
எல்லாத்தையும் விட எந்த எழுத்தாளன் சொல்றான்... நான் நிறைவா இருக்கேன்... இரண்டு பொண்டாட்டி, இரண்டு புள்ள, ஒரு காரு , ஒரு வீடு, நிறைவா இருக்கேன்... இது போதும்ன்னு சொல்ல ஒரு மனசு வேணுமில்லை..
என்டிடிவியின் வாக் த டாக் போல டிரை செய்து இருக்கின்றார்கள்.
கேமரா ஒர்க்கும் எடிட்டிங்கும் நன்றாகவே இருந்தது... ஆனால் யார் கேமராமேன் யார் புரொட்யூசர், யார் எடிட்டர் என்று பெயர் போடவேயில்லை... என்ன காரணம் என்று தெரியவில்லை...ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை தட்டிபறிக்காதீர்கள்...
மற்றபடி நிறைவாய் பேட்டி அமைந்தது.. அது மட்டுமல்ல... சும்மா பேட்டிக்கின்னு கூப்பிட்டு மொக்கையா இரண்டு பொண்டாட்டியை வச்சிக்கிட்டு ஒரே வீட்டுல எப்படி சமாளிக்கறிங்க என்று எல்லாம் கேட்காமல் ரொம்ப டீசன்டாக கேள்விகள் முன் வைத்த பத்ரிக்கு வாழ்த்துகள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
28/10/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

வாவ்! அருமையான பேட்டி. முதலில் 50 நிமிடமா என்று யோசித்தாலும் கேட்க கேட்க நேரம் போனதே தெரியவில்லை. இவருடைய எழுத்தை ரசித்த ரசிக்கிற எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.சிங்கை ரயிலில் போகும் போது படிக்க ஆரம்பித்துவிட்டால் நான் என்னிலை மறப்பேன்.கதை களத்துள் நானும் ஒருவனாகிவிடுவேன்.உடையார்/அப்பம் வடை தயிர்சாதம் எல்லாம் படிக்கும் போதே எப்படி இவ்வளவு விவரங்களை கொடுக்கிறார் என்ற சந்தேகத்துக்கு இதில் விடை கொடுத்துள்ளார்.பத்ரியும் நன்றாகவே போட்டு வாங்கியிருக்கார்.
ReplyDeleteஅதான் இப்போ கேட்டுட்டீங்களே :-)
ReplyDeleteவாசித்தேன்.... இனித்தான் கேட்க வேண்டும்...
ReplyDeleteJackie, is this U ? https://www.facebook.com/photo.php?fbid=670784166373163&set=a.191824050935846.40828.100003247560598&type=1
ReplyDeleteஅப்படியே உங்களுக்கு பிடிச்ச பாலகுமாரன் புத்தகங்கள் எதாச்சும் சொல்லுங்களேன், நாங்களும் வாசிப்போம்!
ReplyDelete