LINGA-2014 /ரஜினியின் லிங்கா திரைவிமர்சனம்.நான்கு வருடங்களாக நடிக்காமல் இருந்து விட்டு கோச்சடையான் திரைப்படத்துக்கு பிறகு  ரஜினி நடிக்கும் நேரடி படம்... கோச்சடையன்  அனிமேஷன் திரைப்படம் என்பதால் அதை கனக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.


ரவிக்குமாரும் ரஜினியும் 1995 ஆம் ஆண்டு முத்து  திரைப்படத்தில் இணைந்த இந்த ஜோடியானது படையப்பா  கோச்சடையான்  என  தொடர் வெற்றிகளை பெற்றது...

இந்த நட்புக்கு 20 வருடம் ஆகப்போகின்றது... அது மட்டுமல்ல முத்து திரைப்படம்தான் தமிழ் தெரியாத ஜப்பானிய மண்ணில்  ரஜினிக்கு  பெயர் பெற்றுக்ககொடுத்தது  என்பேன்...

லிங்கா திரைப்படம் கே எஸ் ரவிக்குமாரும்  ரஜினியும் இணையும் நான்காவது படம்... 200 கோடி ரூபாய் பட்ஜெட் ... ஏ ஆர் ரகுமான் இசை...

ஒரு வேளை கோச்சடையான் வெற்றிபெறாமல் போய் விட்டால் அந்த நஷ்டத்தை சரிகட்ட சட்டென  ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம்.


6 மாதகாலத்தில்  எடுத்த திரைப்படம் ..  படம் ஆரம்பித்த போதே கன்னடர்கள் மைசூரில் பிரச்சனை செய்தார்கள்... அதன் பின்  ஹைதராபாத்தில்  முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார்கள். படம் முல்லைவனம் 999 திரைப்படத்தின் கதை என்று நேற்று இரவு வரை  மதுரை உயர் நீதிமன்றத்தில்  பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது...

இரட்டை வேடத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் 1940க்கு முன் நடக்கும் கதை  இப்போது நடக்கு கதை என இரண்டு கதைகள்.. அனுஷ்கா சோனாக்ஷி சின்ஹா என இரண்டு  நாயகிகள்..

உடல் நிலை சரியில்லாமல் போய் 60  வயதை கடந்த ரஜினி நடித்த திரைப்படம்
வயதாக வயதாக எம்ஜிஆருக்கு இருந்த கிரேஸ் இந்த தகவல் தொழில்நுட்ப உலகிலும் எம்ஜிஆரை விட  ரஜினிக்கு கிரேஸ் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

தன் முடி கொட்டிய தலையை  எம்ஜிஆர் போல மறைக்க எந்த பிரயத்தனமும்  செய்யவில்லை.. இருந்தாலும் தலைவா தலைவா என்று கொண்டாடுகின்றார்கள்…கோவா திரைப்பட விருது வழங்கும் விழாவில்  எல்லோரும்  கோட்  சூட்டோடு ஆஜராக சாதாரண உடையில் தோன்றினார் ரஜினி...
ஸ்கிராட்சில் இருந்து மேலே வந்தவர்களுக்கு அதிகம்  அலட்ட பிடிக்காது.. ஒரு சின்ன இன்பிரியாரிட்டி காம்ளெக்ஸ் இருக்கும் அது இவ்வளவு வளர்ந்தும் அவரிடம் இருப்பது ஆச்சர்யமே..

விஜய்டிவி  கமல் 50 விருது வழங்கும் விழாவில் கூட சாதாரண  ஜிப்பா சட்டையில் இருந்தார்... கமல் போல தான் நடிக்க முடியவில்லை என்பதை பொது மேடையில்  வெளிப்படையாக  பேசியதோடு எந்திரன் படத்துக்கு ஷங்கர் ரீடேக் எடுக்க கமலை நினைச்சிக்கிட்டு படம்  எடுக்காதிங்க... நான் நடிக்கறேன் என்பதை நினைவில்  வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்தை இந்த நேரத்தில் நினைவு கூர்கின்றேன்...ஜிகர்தண்டாவில் சிம்ஹா நடித்த  பாத்திரம் போல  தான்  நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருடைய பேச்சில் தெரிகின்றது...

ஆனால் ரஜினி ஸ்டைல் என்ற  பிம்பத்தில் இத்தனை ஆண்டுகாளாமாக வளர்ந்து விட்ட  காரணத்தால்  அவரால் பின் வாங்கு முடியவில்லை என்பதே உண்மை.

3175 தியேட்டர்களில் ரிலிஸ்... டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த  அரைமணி நேரத்தில் மூன்று நாட்களுக்கு அனைத்துடிக்கெட்டுகளும் விற்றுதீர்ந்தன என்பது சாதனைதான்.

65 வயதில் நாயகனாக ரசிக்க படுவது என்பது சாதைனையின் உச்சமும் கொடுப்பினையும் வேண்டும்.
 ===========
சரி லிங்கா படத்துக்கு வருவோம்..

லிங்கா படத்தின் கதை என்ன?

 சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் லிங்கா (ரஜினிகாந்த்) வாழ்வில் குறிக்கிடுகின்றார் லக்ஷ்மி (அனுஷ்கா) தன் திருடும் இந்த வாழ்க்கைக்கு தன் தாத்தாதான் காரணம் என்று லிங்கா குற்றம் சுமத்த... அவர் சாதாரண ஆள் இல்லை எங்கள் ஊருக்கே அணை கட்டி எங்கள் பகுதி மக்கள்  விளக்கு ஏத்திய புண்ணியவான் என்று சொல்ல.... தாத்தா காப்பாற்றிய பெயரை பேரனும் காப்பாற்றினாரா என்பதே லிங்கா படத்தின் மீதிக்கதை.

=======

படத்தின் சுவாரஸ்யங்கள் என்ன?

ரஜினியோட பிரசன்ஸ் அதுவும் முதல் சீன்  எப்படி இருக்கும்  என்பதுதான் என்  எதிர்பார்ப்பு.. எப்படி திரையில் காட்ட போகின்றார்கள் என்பதுதான் என்னுடைய மில்லியன் டாலர் கொஸ்ட்டின்.... சான்சே இல்லை காரை விட்டு இறங்கி  ஓ நண்பா பாட்டுக்கு  ஆடும் அந்த ஸ்டைல் ஆட்டம் இருக்கே... நீங்க ரஜினி ரசிகரா இருந்தால்... நீங்க கொடுத்து 120 ரூபாய் அதுக்கே  சரியா போயிடும்..
 சான்சே இல்லை.. அப்படி ஒரு எனர்ஜி... சிவாஜி படத்துக்கு பிறகு ரஜினி அழகா காட்டிய திரைப்படம் இது.. அது மட்டுமல்ல ஓ நண்பா பாடலின் கோரியோ கிராபர்  அவருடைய அத்தனை ஸ்டைல் மூவ் மென்டையும் ஒரே பாடலில் கொண்டு வந்த  இருப்பது அந்த பாடலின்  சிறப்பு..


அனுஷ்கா  சேலையில் வரும் போது ஜிவ் என்று இருக்கின்றார்.. கப்போர்ட்டில் ரஜினி கீழே இறங்கி  விடும் போது ஏன்  இடுப்பை புடிச்சிங்க என்று கேட்பது கேஎஸ் குறுப்பு எனலாம்.

 முதல் பாதி ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டம் என்று போகும் திரைக்கதையில் 1939 வது  வருடத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில்  லிங்கா ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரன் கதை  விரிகின்றது...

 ரஜினி படம் என்பதால்  பிரமாண்ட அவுட்டோர் காட்சிகளில் அந்த காலத்து ரயில், கார்கள் என்று கலக்குகின்றார்கள்..
வெள்ளைக்காரர்களுக்கு கலெக்டர் ரஜினிதான் ராஜா ரஜினி என்று தெரியாமல் இருப்பது எல்லாம்  காதில் பூ சுற்றும் ரகம்.

சோனாக்ஷி சின்ஹா சுத்தமாக செட் ஆகவில்லை...இடைவேளைக்கு பிறகு ரயில் பைட் போட்ட ரஜினி சருக்குவது ஏற்ப்புடையதாக இல்லை.. அதுமட்டுமல்ல முத்து படம் பார்க்கும்  எபெக்ட் வருவதை தவிற்க்க முடியவில்லை..

இடைவேளைக்கு பின் 25  நிமிட கத்திரி அவசியம்...1990 களில் விசில்  அடித்து தலைவா தலைவா என்று பால் அபிஷேகம்  செய்தவர்கள்  கைலி கட்டிக்கொண்டு காஜா பீடி வளித்துக்கொண்டு இருப்பார்கள்.... ஆனால்  இன்று விடியற்காலையில் மழையில்  காசி தியேட்டர் வாசலில்  தலைவா என்று கத்திக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் ஐடி பசங்கள் என்பதும்  அவர்கள் எல்லோருமே கையில் ஐ போன் வைத்து  நிகழ்வுகளை படமாக்கி கொண்டு இருப்பதை பார்க்கையில் இன்னும் பத்து வருடத்துக்கு ரஜினியை வசூலில் அடித்துக்கொள்ள முடியாது என்றே தொன்றுகின்றது...

 விடியற்காலை நாலு மணிக்கு  ஆண்கள்தான் மழையில் நனைகின்றார்கள் என்று  பார்த்தால் பெண் ரசிகைகள் மழையில் நனைந்துக்கொண்டு படம் பார்க்க வெயிட் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. அதுதான் ரஜினியின் வெற்றி போலும்.


 சந்தானம் ஜெகபதிபாபு போன்றவர்கள் வீணடிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்றே  சொல்ல வேண்டும்.


ஏஆர்  ரகுமானின் இசை படத்துக்கு பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்..   மூன்று பாடல்கள் கேட்கும் ரகம்…எப்போதும் போல முதல்  தடவை கேட்டால்  பிடிக்காத பாடல்கள் கேட்க கேட்க பிடிப்பது  போல இந்த படத்தின் பாடல்கள் கேட்க கேட்க நிச்சயம்  பிடிக்கும். முக்கியமாக இந்தியனே  பாடல் அருமையான பாடல்… நிச்சயம் இது சுதந்திர தினம் குடியரசு தினத்தன்று கண்டிப்பாக இனி வரும் காலங்களில்  ஒளிபரப்புவார்கள்..

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு...எந்திரன் படத்தில் வேலை பார்த்த அனுபவம்.. இரண்டுமே வெவ்வேறு சப்ஜெக்ட்.. கண்ணில் ஒத்திக்கொள்வது போல ஒளிப்பதிவு செய்துள்ளார்.
========
படத்தின் டிரைலர்.========
படக்குழுவினர் விபரம்.
Directed by K.S. Ravikumar
Produced by Rockline Venkatesh
Written by
Cheyyar Arun
Pon Kumaran
Starring
Rajinikanth
Anushka Shetty
Sonakshi Sinha
Santhanam
Music by A. R. Rahman
Cinematography R. Rathnavelu
Edited by Samjith Mhd
Production
company
Rockline Entertainments
Distributed by Eros International
Release dates
December 12, 2014[1]
Running time 178 Minutes
Country India
Language Tamil,Telugu,Hindi


=========
பைனல் கிக்.

படத்தை காசி தியேட்டரில் நான்கரை மணி ஷோவுக்கு சென்று பார்த்தேன்.. எந்திரன் படத்துக்கு ஏஜிஎஸ்சில்  ஐந்தரை மணி ஷோ என்றால் இங்கே நாலரை மணி ஷோ...

ஒவ்வோரு காட்சிக்கு  ரசிகர்கள் கத்தி  சாரி கதறி தீர்த்து விட்டார்கள். என்ன கிரேஸ் என்ன கிரேஸ்...  இப்படி விடியலில்  வந்து  ஆடிப்பாட வேண்டும் என்றால் கொண்டாட வேண்டும் என்றால்  எந்த அளவுக்கு ஒரு கொடுப்பினை இருக்க வேண்டும்..?, சான்சே இல்லை...


 ஆனால் இன்டர்வெல்லில் தலைவா பின்னிட்ட என்று சொல்லும் ரசிகன் இடைவேளைக்கு பிறகு  அமைதி காப்பதுதான் இந்த  படத்தின் பெரிய சருக்கல் என்பேன்…

இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் ஓவராலாக பார்த்தால் இந்த படம் ஆவரேஷ் திரைப்படம்தான்... என்பதில் சந்தேகம் இல்லை..

  இந்த படம் வணிக குப்பை என்று புறந்தள்ளலாம்.. ஆனால் தியேட்டர்கள் குப்பை மேடாக  ஆகி விடாமல்  தடுக்க இது போன்ற படங்கள் அவசியம் என்பது எனது அபிப்பராயம்...நாலரை மணி டிக்கெட்டை  உஷார் படுத்தி கொடுத்த நண்பர் ரபிக்கிற்கு என் நன்றிகள்...

=========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறு

 =============

வீடியோ பதிவில்  சொதப்பியதை பார்க்க...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

 1. பத்துக்கு ஆறு சரியே.. - முதல் முக்கால் மணி நேரம் விறுவிறுப்பு - இரண்டவாது முக்கால் மணி நேரம் சொதசொதப்பு - கடைசி முக்கால்மணி நேரம் இரஜினி மாசாலா இல்லாத சுறுசுறுப்பு - சோனாஷிக்கு பதில் காஜல் போட்டிருக்கலாம் - ஓ.. காஜல் உயரம் ஒரு பிரச்சினையோ? - வழக்கமான கே.எஸ்.ரவிக்குமார் மிஸ்ஸிங் ஆனது ஏனோ? - ஒரு வேலை வழக்கு மேல் வழக்கு தொடரப் பட்டதாலோ? - சமீபமாக கிராபிக்ஸ் பொம்மையாக இரஜினியை பார்த்து ஏமாந்த ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான படம் - நிறைய காமெடியன்கள் இருந்தும் காமெடியைக் காணோமே? - இரண்டு பாடல்கள் கேட்கலாம்.. இருந்தாலும் ஒரு ஏக்கம் இன்னொரு சிவாஜியை எப்ப பார்க்கலாம்? -

  ReplyDelete
 2. சபாஷ்... சரியான விமர்சனம்...! உண்மையை உரக்கச் சொன்ன நீங்கதான் உண்மையான தலைவன்... ஹி..ஹி..!

  அதுவும் கடைசியில சொன்ன அந்த ரெண்டு வரி... அது தான் உங்களோட துல்லியமான விமர்சனத்துக்கு எடுத்துக்காட்டு...!

  ????இந்த படம் வணிக குப்பை என்று புறந்தள்ளலாம்.. ஆனால் தியேட்டர்கள் குப்பை மேடாக ஆகி விடாமல் தடுக்க இது போன்ற படங்கள் அவசியம் என்பது எனது அபிப்பராயம்...?????

  நன்றி சார்..!

  ReplyDelete
 3. A lousy movie directed by K.S.Ravikumar.What happened to him,most of the scenes are very unprofessional.All technical talents wasted in this film. He has tried ti imitate hollywood movies like Ocean Eleven and Enemy of the State. Dubbing voice does not match for the Heroines.The producer has lots of trust with Rajnikant. One last word for the Super Star please dont disappoint your fans.Thanks Selvaraj Chettiar from Mumbai.

  ReplyDelete
 4. சரியான விமர்சனம்... விருந்து ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே..இது சாதாரண கமர்ஷியல் படம்...

  ReplyDelete
 5. இந்த படம் வணிக குப்பை என்று புறந்தள்ளலாம்.. ஆனால் தியேட்டர்கள் குப்பை மேடாக ஆகி விடாமல் தடுக்க இது போன்ற படங்கள் அவசியம் என்பது எனது அபிப்பராயம்...- GOLDEN WORDS BROTHER!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner