உடல்கள்...சென்னை அரசு பொது மருத்துவமனை மார்ச்சுவரி பக்கத்தில் சற்று நேரம் நின்றுக்கொண்டு இருந்தால் போதும்... வாழ்க்கை மீதான கேள்விகள் ஏகத்துக்கு எகிறி தினறடிக்கின்றன..

விடியற்காலை 5 மணிமுதல் மதியம் மூன்று மணி வரை அரசு மருத்துவமனையை நானும் தம்பி பாலாவும் சுற்றிக்கொண்டு வர சங்கர் மச்சியும் பதினோரு மணியளவில் எங்களோடு சேர்ந்துக்கொண்டான்...

பெரிய புடுங்கி மயிறு போல நான் தான் நான்தான்னு புதுப்பேட்டை தனுஷ் போல கத்திக்கொண்டு இருப்பவனை ஒரு மணி நேரம் அரசு மருத்துவமணை மார்ச்சுவரி பக்கம் சும்மா காத்திருக்க வைத்தால் போதும்... மனம் திடிர் என்று ஜென் நிலைக்கு செல்வது சர்வ நிச்சயம்.


பிரிசரில் இருந்த உடல்கள் மாச்சுவரிக்கு போஸ்ட் மார்டம் பகுதிக்கு ஒரு பெண்மணி ஸ்டெச்சரில் தள்ளிக்கு கொண்டு செல்கின்றார்... கூடவே யாராவது சென்றால் அந்த உடல் கொடுத்து வைத்த உடல் வாழ்ந்த வாழ்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளலாம்...

அரைமணி நேரத்தில் யாரும் உடன் செல்லாமல் நான்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன....

இழுத்து கட்டிய போர்வையையும் மீறி மெல்ல வெளியே விரைத்தபடி தெரியும் கால்களின் பிறப்பிடமும் அதன் பயணமும் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்கையில் அயற்சி வருகின்றது....

ஸ்டெச்சர் சத்தங்களோடு மவுன ஊர்வலம் நடத்தும் இந்த உடல்கள் சொல்லும் சேதிதான் என்ன???

வாழ்க்கை பற்றியும்... அதன் பயணம் என்ன? என்பது பற்றியும் பயணத்தின் முடிவு எவ்விதம் என்பது பற்றியும் அவ்வவுடல்களை பார்க்கையில் மனம் யோசிக்காமல் இருப்பதில்லை..
வாழ்வதை அன்றைக்கே வாழ்ந்து விடு என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் எனக்கு படுகின்றது.

கடைசியா ஒரு உடலை மத்தியவயதை கடந்த ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார்... அதன் அருகில் சென்னைசில்க்ஸ் பேகுடன் ஒருவர் கேஸ் பைலை கையில் வைத்துக்கொண்டு அதனோடு நடந்துக்கொண்டு இருந்தார்....

மஞ்சள் பூசிய கால்கள்... கட்டிய போர்வையை மீறி வெளியே தெரிந்தது... குளிர் சாதனை அறை குளிரில் கால் விரல்கள் சும்பி சற்றே வெளுத்து இருந்தது...

அவரின் மனைவியாக இருக்க வேண்டும்...

சலனமற்று எண்ணெய் போடாத ஸ்டெச்சர் வீல் சத்தத்தை காதில் வாங்கிய படி, ஒரே ஒரு சென்னை சில்க்ஸ் ஒத்தை பையுடன், உறவினர் யாருமற்று.... நண்பர்கள் யாருமற்று, வெறித்த பார்வையுடன் அந்த உடலோடு நடந்து செல்லும் அவனின் கடந்தகாலம் எப்படி இருந்து இருக்கும் என்ற கேள்வியை விட...

யாரும் உடன் செல்லாத உடல்களை விட வெறித்த பார்வையோடு ஒருவன் உடன் நடக்கும் அந்த உடல் கொடுத்து வைத்தது என்றே சொல்லுவேன்..


ஜாக்கிசேகர்.
06/11/2014
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

5 comments:

 1. சகோ இன்றுதான் உங்கள் பக்கத்தை பார்க்கிறேன்.
  இன்றைய உங்கள் நிலையை என் வார்த்த்தைகளில் சொல்ல முயல்கிறேன். , பொறுத்தருள்க...

  நினைப்பதற்க்கு மட்டுமல்ல, உண்மை
  அதை
  நிரூபிக்கவே நீ....

  ReplyDelete
 2. படிக்கும் போதே மனசு கனக்கிறது அண்ணா...

  ReplyDelete
 3. Yenna Sir
  Kalankarthale mood out panniteenga

  ReplyDelete
 4. மனம் கனக்க வைத்த பதிவு!

  ReplyDelete
 5. வாழ்க்கை பாதையில் வழித்துணையாய் வந்தவள்.. தனித்தே என்னை விட்டாள்... தளர்ந்து போனேன் நான் ......என் உடலோடு வருவது இனி யாரடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner