கற்பனைகளை கலைக்க வேண்டாம்.என்னோடு பணிபுரிந்த இளம் பெண்...
வேலையில் கெட்டி... படு சுட்டி.


சார் அவங்களுக்கு யாரை பிடிக்கும்ன்னு கேளுங்க என்று சக ஊழியர்கள் சொல்ல.... சொல்லும்மா உனக்கு யாரைப் பிடிக்கும் என்று அந்த பெண்ணிடம் கேட்டேன்.
அவள் முகம் எங்கும் வெட்கத்தோடு முதலில் சொல்ல மறுத்தாள்...
நான் விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, ஜீவா என்று ஏதாவது பெயர் வரும் என்று நினைத்தேன்..
ஆனால் எனக்கு இர்பான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார்...
எனக்கு செம்மையான ஆச்சர்யம்..
அப்படியா? ஏன்மா அவரை பிடிக்கும்..??
தெரியலை சார்... அவரை ரொம்ப பிடிக்கும்... விஜய்டிவி சீரியல் சுண்டாட்டம் போன்ற திரைப்படங்களை குறிப்பிட்டு சொன்னார்....
சரவணன் மீனாட்சி ஒரு எப்பிசோட் விடாம பார்ப்பேன் என்று சொன்னார்...
சார் ரம்பா சார்... என்று பார்த்தீபன் விவேக்கிடம் வழிவது போலோ அல்லது...ராஜா ராணியில் ஆர்யா நஸ்ரியாவை பார்த்ததும் வாயை திறந்துக்கொண்டு ஈ போலது கூட தெரியாமல் பார்ப்பது போலவோ இல்லையென்றாலும்...
இர்பானை பற்றி பேசும் போது அந்த பெண்ணிடம் காணப்பட்ட உற்சாகம்..... கண்களில் தோன்றிய காதல் போன்றவற்றை சொல்லில் அடக்க முடியாது..
சான்சே இல்லை சார் அவரோட நடிப்பு... என்னா ஸ்மைல்...??அந்த ஸ்மைலுக்கு பத்து ஏக்கர் எழுதி வைக்கலாம் என்று சொல்லுவார்... அந்த அளவுக்கு இர்பான் ரசிகை.
என்னைக்காவது இர்பானை நேரில் பார்த்தால் உங்களை ரொம்ப பிடிச்ச ஹார்ட்கோர் பேனை எனக்கு தெரியும் என்று அவரிடம் சொல்கின்றேன் என்று அந்த பெண்ணிடம் சொன்னேன்....
நேற்று நண்பர் ஒளிப்பதிவாளர் சிஜே ராஜ்குமார் ஒளிப்பதிவில் உருவான பொங்கி எழு மனோகரா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அலுவலகம் சார்பாக சென்றேன்.
இர்பான் பிரசாத் தியேட்டர் புல் வெளியில் தொலைக்காட்சி சானல்களுக்கு பேட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்.
எனக்கு அவரை பார்த்ததும் சட்டென அந்த பெண் நியாபகத்துக்கு வந்தார்...
இர்பானிடம் உங்களை வெறித்தனமாக நேசிக்கும் பெண்ணை எனக்கு தெரியும் என்று சொல்லாம் என்று நினைத்தேன்...
அப்படியா தேங்கயூ சார் என்று சொல்லிவிட்டு அடுத்த சேனலுக்கு பேட்டிக்கொடுக்க சென்று இருக்ககூடும்.
அந்த பெண்ணுக்கு ஒருவேளை இர்பான் நம்பர் வாங்கி ஒரு நிமிடத்தில் கொடுத்து இருக்கலாம்.. ஆனால் உண்மை என்றுமே அழகாய் இருக்காது.. நிஜத்துக்கும் நிழலுக்கு நிறைய வித்தியாசம் உண்டு என்பதை நான் உணர்ந்தவன் என்பதால் நான் அந்த முடிவை கை விட்டேன்.
கற்பனை அழகானது...
கற்பனையில் இன்னும் அதிகமாய் அந்த பெண் இர்பானோடு சினேகம் கொள்ளட்டும்...அந்த வெகுளித்தனதோடு அந்த ரசிப்பு என்பது இன்னும் சிலகாலம்தான்... திருமணம் பிள்ளை பேறு என்று ஆன பிறகு குழந்தையின் டயப்பர் மற்றும் பிள்ளையின் லஞ்ச் பேக் மீதுதான் நினைவு செல்லுமே தவிர்த்து இர்பான் சிரிப்பை நினைத்து பார்க்க நேரம் இருக்கபோவதில்லை...அதனால் அந்த சில கால கற்பனையை கலைக்க நான் விரும்பவில்லை.
வாழ்வில் சந்தோஷகணங்களை உதவி செய்கின்றேன் பேர்வழி என்று கெடுக்க எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை.
நிஜமும் நிழலும் வெவ்வேறானவை......
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
15/11/2014

10 comments:

 1. சிரிப்பை நினைத்து பார்க்க நேரம் இருக்கபோவதில்லை...அதனால் அந்த ''சில கால கற்பனையை கலைக்க நான் விரும்பவில்லை.
  வாழ்வில் சந்தோஷகணங்களை உதவி செய்கின்றேன் பேர்வழி என்று கெடுக்க எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை.
  நிஜமும் நிழலும் வெவ்வேறானவை......'' sema heart touching line annae

  ReplyDelete
 2. உண்மை! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 3. உண்மை! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 4. Kannavum karpanaiyum thaan paathi life I vala vaikirathu

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner