நான் இயக்குனர் மகிழ்திருமேனி பேசறேன்… ஜாக்கிசேகர்…??
எஸ்சார் நான் தான் பேசறேன் சொல்லுங்க..
உங்க வீடியோ விமர்சனம் பார்த்தேன்… என் படத்தை பாராட்டி இருக்கிங்க… ஆனா அதுக்காக போன் செய்யலை… சினிமா கிராப்ட் தெரிஞ்ச ஆளா….. ரொம்ப டீடெயிலா விமர்சனம் செய்வதற்கு நன்றி சொல்லவே இந்த போன் கால் என்றார்…
நான் நன்றி சொன்னேன்… ரொம்ப தயக்கத்துக்கு பிறகே இந்த வீடியோவிமர்சனத்தை ஆரம்பித்து இருக்கின்றேன் என்று சொன்னேன்…..
ஆரம்பகால தடுமாற்றம் இருந்தாலும் எல்லாம் சரியாகிடும் தொடர்ந்து செய்ய வாழ்த்தினார்.
படம் பற்றி நிறைய விஷயங்கள் பேசினேன்…
அதில் முக்கியமான விஷயத்தை பகிர்ந்துகொண்டேன்…
ஜோதியை யாரும் பார்த்தது இல்லை… அவன் கேங்குல ரெண்டு மூனு பேர்தான் அவனை இதுவரை பார்த்து இருக்காங்க… நாலு வருஷமா ஒன்னுக்குள்ள ஒன்னா அந்த கேங்குல இருக்கும் ஆர்யா கூட அவனை பார்த்தது இல்லை…
அவன் வெளிய வந்தாதானே அவனை பிடிக்க முடியும்.. வருடத்துக்கு 500 கோடி ரூபாய் புழங்கும் போதை மருந்து கும்பலின் தலைவன்… ஆனால் பெண்ணாசை இல்லை…
மண்ணாசைஇல்லை… பணத்தை தண்ணீராய் செலவுசெய்து கோட் சூட் போட்டுக்கொண்டு பைவ் ஸ்டார் ஓட்ட்லில் ஆடும் நபரும் இல்லை… ஒரு குர்தாவோடு வலம் வருபவனுக்கு எதுக்கு இத்தனை பணம்…?? என்ற கேள்வி படம் நெடுக கேள்வியாக துரத்துக்கொண்டு வந்தது…
அதுக்கு மட்டும் பதில் படத்தில் இல்லைன்னா அதை ஒரு லுசிங் பாயிண்டா விமர்சனத்துல சொல்லனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன் மகிழ்..
ஆனால் ஹார்பரில் அதற்கு ஒரு சீன் வைச்சிட்டிங்க…
வறுமையில் ராணியும், நானும் ஒரு மேஸ்திரியை 5.35 பைசாவுக்கு கொலை எத்தைனை ரூபாய் என்று டினாமினேஷன் போடும் இடமும் மூனு பத்து பைசா… ஒரு அஞ்சு பைசா என்று ஜோதி சொல்லும் போது வறுமையும் பணத்தின் மீது அவனுக்கு இருக்கும் வெறி இத்தனை கோடிகள் சம்பாதித்தும் இன்னும் குறையவில்லை என்று சிம்பிளாக ஒரு காட்சியில் காட்சி படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆப் என்று சொன்னேன்…
நிறைய விமர்சனங்கள் என் பார்வைக்கு வருது யாரும் இதை சொல்லவேயில்லை என்றும்....
JACKIE ....YOU MADE MY DAY என்றார்…
ஜாக்கி கண்டிப்பா நாம நியூயர் கழிச்சி மீட் பண்ணறோம்.
நன்றி மகிழ். போன் செய்தமைக்கு.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
31/12/2014
ஜாக்கிசேகர்
31/12/2014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment