ஒரு நடிகன் அரசியலுக்கு வர ஆசைப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்
என்பதை நடிகர் விஜய்க்கு சமீபத்தில் நிகழ்வதை
இந்த தலைமுறை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்..
ராஜபக்ஷேவின் நெருக்கிய நண்பர் சுபாஷ்கரன்தான் இந்த திரைப்படத்தை
தயாரிக்கின்றார் என்றதுமே பிரச்சனைகள் தலை
தூக்க ஆரம்பித்தன.. லைகா நிறுவணம் யார் யாருக்கு எல்லாம் பினாமி என்று அலசி ஆராயப்பட்டன..
சீமானிடம்தான் முதல்
எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்த்த போது விஜய் முருகதாஸ் இரண்டு பேரும்
தமிழர்கள் என்று ஜகா வாங்கி விட்டார்... அதை விட இந்த படத்தை ஜெயா டிவி வாங்கயதுமே எதிர்ப்புகள் அடக்கி வாசிக்கப்பட்டன..
இருந்தாலும் கடைசி நிமிடம் வரை கல் வீசி தங்களுக்கு தேவையான தீபாவளி போனஸ்களை பெற்றுக்கொண்டு பச்சைக்கொடி காட்டினர்...
நல்லவேளை கலைஞர்
ஆட்சியாக இருந்து இருந்தால் தமிழ் உணர்வு அதிகம் இருந்து இருக்கும்.. ஆனால் அம்மா ஆட்சியில் அவரே ஈழதாயாக இருக்கும் காரணத்தால்
குரல் எல்லாம் கமரலோடு வர...
சத்தியம் தியேட்டரின் கண்ணாடிகள் பெட்ரோல் குண்டுகளுக்கு
இரையாக... படம் ஒருவழியாக லைக்கா பெயர் இல்லாமல்
தமிழ் உணர்வுக்கு ஏற்ப வெளியானது...
எல்லாவற்றையும் விட கத்தி படத்தின் கதை என்னுடையது என்று கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார்.. அந்த சர்ச்சை இன்னும் பெரிய சர்ச்சையாக இருக்கின்றது....
துப்பாக்கியில் தீவிரவாதத்தை
கையில் எடுத்த விஜய் முருகதாஸ் கூட்டனி இந்த படத்தில் விவசாய நிலம், நிலத்தடி நீர், அலைக்கற்றை ஊழல் என்று
அலசுகின்றது..
வெகுஜன சினிமாவில்
விவசாய நிலங்களின் தேவை, நிலத்தடி நீர் போன்ற விஷயங்களை மாஸ் ஹீரோ மூலம் பொதுமக்களிடம்
கொண்டு சேர்ப்பது நல்ல முயற்சி என்பதால்
பாராட்டுகள்.
ஆனால் கத்தி திரைப்படம்
ஒரு பரபரப்பையோ நெகிழ்வையோ எப்போதாகிலும் கொடுப்பது என்பதே உண்மை.
துப்பாக்கி கொடுத்த பரபரதன்மை இந்த படத்தில் மிஸ்சிங்...
ஒரு ஏவியில் மொத்த பிளாஷ்பேக் கதையையும் சொல்ல முயற்சிப்பது..
கார்பரேட் கம்பெனி வில்லன் கொடவுனில் விவசாய
உபகரணங்களை அடுக்கி வைத்து இருப்பது எல்லாம் ஓவர்..... பெரிய குழாய் உள்ள பெட்ரோமாக்ஸ் லைட்டை எப்படி மாட்டினார்கள்
என்று கேள்விகளை ரசிகர்கள் டிரைலர் வந்த போதே கேட்டார்கள்..
எல்லாவற்றையும் விட கொடுமை கல்கத்தாவில் இருந்து தப்பிய கதிரேசன்
யார்? அவர் குடும்ப பின்னனி என்ன? கல்கத்தாவில்
இருந்து ஜிவாவோடு கதிரேசனை கொல்ல அனுப்பிய ஆட்கள் எங்கே போய் பாவ் பஜ்ஜி சாப்பிடுகின்றார்கள்
என்று வினாக்கள் படம் நெடுகிலும்.
அதனாலே கதிரேசன் பற்றி இயக்குனர் முருகதாசுக்கே தெரியாத காரணத்தால் கிளைமாக்சில்
யாருப்பா நீ? எங்க இருந்து வந்தே? தேவதூதனோ..? என்று ஒரு பாடலை முன் வைத்து
படத்தை முடிக்கின்றார்..
விஜய் நடந்து வரும்
மாஸ் சண்டை காட்சிகளில் எல்லாம் அனிருத் 1980களில் ரஜினி நடந்து வரும் போது கொடுத்த
பின்னனி இசையை தூசி தட்டி கொஞ்சம் மாற்றி கொடுத்து இருக்கின்றார்.. இருந்தாலும் ரசிக்கும்
படியே இருக்கின்றது..
சமந்தா டாஸ்மார்க்
ஊறுகாயாக பயண்படுத்த பட்டு இருக்கின்றார்... செல்பிபுள்ள பாடல் செம ரகளை..
இந்த படம் எப்படி என்று கேட்டால்... நல்லா இருக்குன்னும்
சொல்ல முடியலை... நல்லா இல்லைன்னு சொல்லமுடியலை..
விமர்சகர் ஆர் எஸ்
அந்தணன் எழுதி இருந்தார்.. படம் வெளிவரும் முன் கத்தி படத்தை
நான்கு முறைக்கு மேல் எடிட் செய்து விட்டார் என்று எழுதினார்... அது உண்மைதான்
போல... படம் பார்க்கும் போது தெரிகின்றது.
மீடியாவை தன் பக்கம் பார்க்க செய்யும் முயற்சிகள் சுவாரஸ்யம்
என்றாலும் புளு பிரிண்ட்டை பார்த்து விட்டு அப்படியே கீழே மேஜைக்கு கீழே விஜய் குனியும் போது தியேட்டரில் கொடுக்கபடும் விசில்கள்
பாராட்டவா.. அல்லது நக்கலா என்று தெரியவில்லை..
அரசியல் பக்கம் வராமல்
கோக் விளம்பரத்தில் நடித்துவிட்டு இந்த
படத்தில் நடித்து இருந்தால் சின்ன விமர்சனத்தோடு முடிந்து போய் இருக்கும்... ஆனால் ஊழலுக்கு எதிராக பொதுவெளியில்
முழங்கிவிட்டு இந்த படத்தை எடுத்து இருப்பதால்
சமுகவலைதளங்களில் சற்று காட்டமாகவே விமர்சிக்கின்றனர்.
தலைவா படத்துக்கு ஏற்ப்பட்ட் அனுபவத்தால் அம்மாவை சாந்தப்படுத்த
அலைக்கற்றை டயலாக்கை பேசி இருப்பார் என்று எண்ணுகின்றேன்..
படத்தில் ரொம்ப ரசித்த காட்சி...
கம்யூனிசம்ன்னா என்ன புரியும் படி சொல்லு..??
பசிக்கு நாம சாப்பிட்ட
இட்லிக்கு அடுத்து இருக்கும் இட்லி நம்முடையது
இல்லை என்று குறள் கணக்காக கம்யூனிசத்தை பற்றி ஒற்றைவரியில் சொல்லும் காட்சி அசத்தல்..
=======
படத்தின் டிரைலர்.
===========
படக்குழுவினர் விபரம்
Directed by AR Murugadoss
Produced by K. Karunamoorthy
A. Subhaskaran
Written by AR Murugadoss
Starring Vijay
Samantha Ruth Prabhu
Music by Anirudh Ravichander
Cinematography George C. Williams
Edited by A. Sreekar Prasad
Production
company
Ayngaran International
Lyca Productions
Distributed by Ayngaran International
Eros International[1]
Release dates
October 22, 2014
Running time 165 minutes
Country India
Language Tamil
Budget INR100 crore
==========
பைனல்கிக்.
மற்றபடி பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் இல்லையென்றாலும் பார்க்கவேண்டிய படம்... பெரிய அளவில் படு மொக்கை
என்று எல்லாம் சொல்ல முடியாது..
கத்தி இடைவேளைக்கு அப்புறம் சமுக அவலங்களை சாடுவதற்காக கண்டிப்பாக பார்க்கலாம்.
=========
ரேட்டிங்...
பத்துக்கு எழு....
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
உண்மைதான் அண்ணே...
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteதம 1
ஜெயா டி.வி யுடன் டீலிங் முடிந்தவுடன் அடங்கிப்போன வாழ்வுரிமைப் போராளிகள் பற்றி , தங்கள் பார்வையில்,"இருந்தாலும் கடைசி நிமிடம் வரை கல் வீசி தங்களுக்கு தேவையான தீபாவளி போனஸ்களை பெற்றுக்கொண்டு பச்சைக்கொடி காட்டினர்" என்ற வரிகள் அருமை..
ReplyDeleteOk nice review but 7 mark konjam athigamthan
ReplyDeletenice sir
ReplyDeleteNice sir
ReplyDeletenice sir....
ReplyDelete