திருமணநாள் வாழ்த்து மழையில் நனையவைத்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...கல்யாண நாள் ஞாயிறு என்பதால் அப்பாவை பார்த்து ஆசி வாங்க குடும்பத்துடன் கடலூருக்கு சென்றேன்..
திண்டிவனத்தில் இருக்கும் வனிதா அத்தை வீட்டில் ஆசிர்வாதம் பெற்று தம்பி பாலா குடும்பத்துடன் கடலூர் சென்று அப்பாவிடம் ஆசி வாங்கி... அப்படியே திருவகீந்தபுரம் பெருமாளையும் ஹயகிரிவரையும் வணங்கி விட்டு ஞூயிறு இரவு பாண்டியில் கம்பன் கலையாரங்கம் எதிரில் உள்ள லாட்ஜில் தம்பி பாலா குடும்பதோடு தங்கினோம்....
நேற்று முழுக்க பாண்டி பீச், ஆரோவில், என்று சுற்றி விட்டு நேற்று இரவுதான் சென்னைக்கு வந்தோம்...
அதனால் கமென்ட் இட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்ல முடியவில்லை.
திருமணநாள் பதிவுக்கு பேஸ்புக்கில் 800க்கு மேற்ப்பட்ட லைக்குகள்...30க்கு மேற்ப்பட்ட ஷேர்கள்,285 கமென்டுகள்... என்று நெகிழ வைத்தாலும்.... எல்லவற்றையும் விட எம்பொண்டாட்டியை ஒரு நாள் கூட பாராட்டியதில்லை.. வர கல்யாண நாளுக்கு இரண்டு பக்கம் மனசுல தொனியதை எல்லாம் லட்டரா எழுதி கொடுக்க போறேன் என்று போனில் சொன்ன முகமறிய தம்பி முத்து செல்வன் , முக்கியமான நாட்களின் போது போனில் முதல் ஆளாக வாழ்த்து சொல்லும்... திருநல்வேலி ராமலிங்கம், பாலராஜன்கீதா மிசஸ் கீதா மேடம், அயனாவரம் ஆனந் என்று போனில் வாழ்த்து சொல்லி பதிவை பாராட்டிய நண்பர்களின் எண்ணிக்கை நிறைய...
அதே போல பதிவில் எங்கோ என் கல்யாண போட்டோவை தேடி பிடித்து அண்ணே இந்த போட்டோதானே என்று சொன்ன தம்பி வேல்முருகன் என அசத்தி விட்டார்கள்.
50 பேருக்கு மேல் நான் யாரையும் நேரில் சந்தித்தில்லை.. யாருக்கும் கமென்ட் லைக்,போட்டதில்லை...ஆனாலும் அண்ணன் அண்ணி என்ற உணர்வோட வாழ்த்திய அத்தனை சகோதரர்களுக்கும் என் நன்றியும் அன்பும்....
இனி என் முகநூலில் நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் தெரித்தவராக இருந்தாலும் தெரியாவிட்டாலும அத்தனை பேருக்கும் நேரம் இருக்கும் போது வாழ்த்து தெரிவிக்க இருக்கின்றேன்.
நண்பன் என்ற உணர்வோடு . இந்த முரட்டு மனிதனை கொண்டாடும் எத்தனை எத்தனை நல்ல நண்பர்களை நான் பெற்று இருக்கின்றேன் என்பதில் கொஞ்சம் கர்வமும்....
எல்லோருக்கும் தனி தனியாக நன்றிகளை சொல்ல முடியாது என்ற காரணத்தாலே வாழ்த்திய அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்... கமென்ட்களை நான் உணர்ச்சி மேலிடவே வாசித்தேன்...
முக்கியமாக ................
நண்பர் ஜாக்கி சேகர் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் தாங்கள் எழுதியுள்ள விஷயங்கள் தங்களோடு நட்புக் கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது. எனவே இந்தக் கடிதம். நீங்கள் எழுதியுள்ள "நீ கொடுக்கற சுதந்திரத்தை எவனை கட்டி இருந்தாலும் எனக்கு கிடைச்சி இருக்காது... காசு பணத்தை விட அதானே முக்கியம்..?,?? நீ திறமைக்காரன்...புத்திசாலி... கொஞ்சம் கோவக்காரன்...அவ்வளவுதான்... அந்த கோவத்தையும் எப்படி சரிபடுத்தனும்ன்னு எனக்கு தெரியும்... அதே போல யாரு கிட்டயும் என்னை எங்கேயும் விட்டுக்கொடுக்கவே மாட்டா..." இதே போன்ற வாழ்வை நானும் அனுபவித்து வருகிறேன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஏன் கவியரசு கண்ணதாசன் சும்மா சொல்லவில்லை என்பதை அனேகமாக இருவருமே புரிந்து உள்ளோம் என நினைக்கிறேன். பல சம்பவங்களில் இருவருக்குமே ஒற்றுமைகள் காண்கிறேன். "பார்த்திபன் கனவு " என்னும் திரைப்படத்தில் மணிவண்ணனைப் பார்த்து கதாநாயகனின் அப்பா ஒன்று சொல்வார். "பழைய விஷயங்களையும் ,வாழ்க்கையையும் ஒத்துக் கொள்ள ஒரு நேர்மையான மனமும், துணிச்சலும் வேண்டும். அது உங்களிடம் காண்கிறேன்" என்பார். அதேபோன்ற ஒரு உணர்வை தங்களது செய்தில் காண முடிந்தது.( வெறும் இனிப்பு மட்டுமே என்றாலும் வாழ்க்கை திகட்டத்தானே செய்யும். எனவே அவ்வப்போது ரசிக்கும் அளவில்சில காரசாரங்கள் வாழ்க்கையில் இருப்பதும் சுகமே - இது என் மனைவி என்னிடம் சொல்லியது.) தங்களது அன்பான வாழ்க்கை எல்லாம் வல்ல இறைவன் அருளால் மென் மேலும் மகிழ்ச்சியுடன் திகழ வாழ்த்துக்கள்.
என்று நீண்ட மடல் எழுதிய செல்வராஜன் மகராஜன் என்று புதிய நண்பர்களை திருமண நாள் பதிவு அறிமுகபடுத்தியது என்பேன்..
தம்பதிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுவேன்.... எந்த இடத்திலும் எக்காரணத்தைக்கொண்டும் உங்கள் துணையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள்.. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும்.. அன்று இரவு உறங்கும் முன் அந்த சண்டை முடிவுக்கு வர வேண்டும் என்பதை வாழ்வியல்ல கோட்பாடாக வைத்துக்கொள்ளுங்கள்....முக்கியமாக அன்று நடந்த விஷயங்களை பத்து நிமிடங்கள் இரண்டு பேரும் பேசி அசைபோடுங்கள்.. அதேபோல ஈகோ இல்லாமல் யார் விட்டுக்கொடுப்பது என்ற போட்டி இருவருக்கும் இருக்க வேண்டும் அது ரொம்ப முக்கியம்..
இவ்வளவு காதலோடு இந்த பதிவை எழுதிய நானும் என் மனைவியும் சண்டையே வராத சாத்வீக தம்பதிகள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ஏமாந்த போவிர்கள்..
எங்கள் திருமணத்துக்கு ஆயிரத்து 500 பத்திரிக்கை அடித்து 1200 பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கு கொடுத்து கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க... திருமணத்துக்கு முதல்நாள் ரிசப்ஷனுக்கு சில மணி நேரங்கள் முன்...
தாம்புல பையில் தேங்காய் வெற்றிலை பாக்குகளை என் மனைவியின் தம்பி மற்றும் உறவுக்காரர்கள் தாம்புல பையில் போட்டுக்கொண்டு இருக்க...
எங்க ரெண்டு பேருக்கும் செமையான சண்டை .. சண்டை என்றால் சாதாரண சண்டை இல்லை பெரிய சண்டை...
சண்டைக்கான காரணம் இங்கே அனாவாசியம்..
. ங்கோத்தா... கல்யாணத்துக்கு வர்வனுங்க கல்யாணம் நின்னுடுச்சின்னு என் மூஞ்சியில காரி துப்பினாலும் சரி... இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன் என்று நான் வேட்டியை மடித்துக்கொண்டு குதிக்க...
கல்யாணத்தை நிறுத்தி தொலை...எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை என்று அவள் பங்குக்கு கத்த.....
தாம்பல பை போட்டுக்கொண்டு இருந்த எவனும் வந்த எங்கள் சண்டையை விலக்க வில்லை..
ஏழுமணிக்கு ஆரம்பித்த சண்டை... பத்துநிமிடத்தில் முடிந்தது... அரைமணி நேரம் கழித்து... இரண்டு பேரும் புதுஉடை உடுத்தி ரிசப்ஷனில் வாயெல்லாம் பல்லாக எங்கள் திருமணத்துக்கு வத்தவர்களை இருவரும் வரவேற்றுக்கொண்டு இருந்தோம்...
பின்னோருநாளில்...
ஏன்டா நாங்க அப்படி ஒரு சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம்.. வந்து ஏன்டா தடுக்கலை, எங்க சண்டையை விட தாம்புலை பை போடுறது முக்கியமா? என்று அவள் தம்பியிடம் நான் கேட்ட போது....
உங்க மானெங்கெட்ட சண்டைக்கு பேரு தயவு செய்து சண்டைன்னு சொல்லதிங்க அது சண்டைக்கு அசிங்கம் பாஸ் என்றான்...
மீண்டும் வாழ்த்திய அத்தனை பேருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்..
நேசங்களுடன்
பாசங்களுடன்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
21/102014
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அன்பு ஜாக்கி சார்
ReplyDeleteவணக்கம். நான் இன்றுதான் திருச்சியிலிருந்து திரும்பினேன். வந்ததும் உங்கள் வலைத்தளத்தை பார்த்தேன். திருமண நாள் நல் வாழ்த்துக்கள். திருமண நாளில் நடந்த நிகழ்வுகளை ப்டித்தேன். ரசித்தேன். உடன் தீபாவளி நல் வாழ்த்துக்கள். யாழினிக்கும் தீபாவளி வாழ்த்து என் எழுதியுள்ளேன் என சொல்லவும்..நீங்களாவ்து சண்டை போடறது. அவங்களை தாசு என பெயரை திருப்பி கூப்பிடும்போதே எங்களுக்கு தெரியும் தாசன் என்பது. தஙகைக்கு என் திருமண , தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக். அனைவருக்கும் எல்லாவல்ல இறைவன் நீளாயும் நிறை செல்வம் உயர்புகழ் கொடுத்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
Great Goin Jackie,
ReplyDeleteRamu, Mylai.
உங்க மானெங்கெட்ட சண்டைக்கு பேரு தயவு செய்து சண்டைன்னு சொல்லதிங்க அது சண்டைக்கு அசிங்கம் பாஸ் என்றான்...
ReplyDeleteதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteBelated wedding anniversary Jackie.
ReplyDelete