நிறைய இடங்களில் பெண் பார்த்தோம்… ஆனாலும் திருமணம் தகையவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்தே போனோனம்…
இயக்குநர் கவுதம்மேனன் ஒரு பெண்ணை காதலித்தார் ஆனால் அவருக்கு அந்த காதல் கை கூடவில்லை… ஆனாலும் அவரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் அவருக்கு ஒரு பெண் நண்பி இருந்தார்.. கவுதமின் ஏற்ற தாழ்வுகளிலும் இன்ப துன்பங்களிலும் அவர் உடன் இருந்தார்
இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்ல கார்டுல தேய்க்கறவனே கதி கலங்கி போய் இருக்கான் என்பதுதான் நிதர்சனம். நிறைய விஷயத்துக்கு கேஷ் தேவைப்படும்.. அதனால் பர்சேஸ் போய் கார்ட் ஒர்க் ஆகாம கைல வச்சி இருக்கற கேஷ் செலவு பண்ணக்கூடாதுன்னு தெளிவா இருக்கான்..
நேற்று சென்னைக்கு இரவு பதினோரு மணிக்குதான் வந்தேன்... நாளை காலை யாழினி நேருவாக வர வேண்டும் என்று பள்ளியில் இருந்து வந்த ஈ மெயில் கலவரத்தை ஏற்படுத்தியது...
100 ரூபாயை செலவழிக்க நிறைய யோசிக்க வேண்டியதாய் இருக்கின்றது. ஆனாலும் மனைவி... ஒரு ஒயிட் டிரஸ் வீட்டுல இருக்கு என்று தெம்பினை கொடுத்தார்.... தொப்பியும் பூவும் இருந்தா நேருவை தயார் செய்து விடலாம் என்று உப்புமா தயாரிப்பு ரேஞ்சிக்கு பேசிக்கொண்டு போனாள்...
சுஜாதா சொன்னது போல தீபாவளி என்பது புது கைவெச்ச பனியன் போட்டுக்கொண்டு ஃபோன் பேசும் நாளாகி பலவருடங்களாகிறது என்று சொன்னதை நண்பர் ரசனை ஸ்ரீராம் நினைவு கூர்ந்து இருந்தார்…
ஆகி விட்டது 20 வருடங்கள்…. அம்மா எங்களைவிட்டு சென்று…. நேற்று நடந்தது போல இருக்கின்றது..இதே தேதியில் 20 வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...அம்மாவை அந்த அளவுக்கு நேசித்து இருப்பார் என்பதை அந்த அழுகையும் கண்ணீரும் உணர்த்தியது… கைலியில் கண்துடைத்து அப்பா வேலைக்கு சென்றார்… அந்த அளவுக்கு நேர்மை.. அப்படி இருந்தும் அந்த நிறுவனம் அப்பாவை ஏமாற்றியது என்பேன்.
கார் பந்தய வீரர் விகாஷ்…. ரேஸ் டிராக்கல காரை ஓட்றதுக்கு பதில் சென்னை ராதாகிருஷ்ணன் ரோட்டுல குடிச்சிட்டு இரண்டே கால் கோடி மதிப்பிலான போஷ் காரை ரேஸ் வேகத்தில் நள்ளிரவில் சென்னை சாலையில் ஓட்ட…
தறி கெட்டு போன கார் ஆட்டோ ஸ்டேன்டில் நின்று இருந்த ஆட்டோக்களில் ஒன்றல்ல இரண்டு அல்ல… பத்துக்கு மேற்பட்ட ஆட்டோக்களில் மேல் மோதி பத்துக்கு மேற்பட்டவரை பலத்த காயத்துக்கு உள்ளாக்கி ஒருவரை சாகடித்து தற்போது விகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்…
கர்நாடகாவுக்கு எதிரான பந்த் அமைதியாக தமிழகத்தில் நடந்து முடிந்தது...
அசம்பாவிதங்களே இல்லை. இத்தனைக்கும் ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை...
சென்னையில் கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை.. ஆப் ஷட்டர் திறந்து வியாபாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை .... தெரு முக்குல சின்ன சின்ன பொட்டிக்கடை திறந்து சிகரேட் பஞ்சத்தை போக்கின...
சென்னை போன்ற மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில் டிராபிக்கில் போர் அடித்து விடும்… ஒவ்வோரு முறையும் எதையாவது ரசித்து பார்த்து அந்த பயணத்தை அர்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்பது எனது அவா.
அதனாலே சாலைகளில் பயணிக்கு போது நிறைய விஷயங்களை உற்று நோக்கி பயணிப்பது எனக்கு பிடித்த விஷயம்… பேசிக்காக நான் கேமராமேன் மற்றும் புகைப்படகலைஞன் என்பதால் அதனை அதன் அழகியலோடு பார்பது எனக்கு பிடித்த விஷயம்.
நேற்று பெசன்ட் நகர் மாதா கோவில் கோடியேற்றத்தால் சென்னை நகரம் போக்குவரத்தில் ஸ்தம்பித்து போனது… இரவு பத்து மணிக்கு மேலும் அதன்தாக்கம் சென்னை சந்து பொந்து தெருக்களில் காண முடிந்தது. மாலை வேளையில் கல்லூரி பேருந்துகளும் சென்னை மாநகர பேருந்துகளும் சூசு வந்து இடம் இல்லாமல் தவித்து விக்கித்து நிற்கும் பெண் போல தவித்து போயின…
மாரத்தான்ல இரண்டு கிலோ மீட்டருக்-கு ஒருக்கா தண்ணி கொடுக்காம
சாகடிச்சி இருப்பானுங்க…
இப்ப செத்தது போன உடலுக்கு ஆம்புலன்ஸ் வண்டி கொடுக்காம சாகடிச்சி
இருக்கானுங்க…
12 கிலோ மீட்டர் தூரத்துக்கு
பொண்டாட்டி உடலை தூக்கி கிட்டு நடந்து இருக்கான்
ஒடிசாவை சேர்ந்த புருசன்காரன்..
பொணம் கனம் என்னன்னு தூக்கி பார்த்தவனுங்களுக்கு தெரியும்… உடலை குளிப்பாட்டி
நாரு பேர் சேர்ந்து பாடைக்கு எடுத்துக்கிட்டு
வந்து வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..
மாமன் விஜய் சேதுபதி டாக்டராகி விட்டான்… அத்தை பெண் ஐஸ்வர்யா கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்துக்கொண்டு கிளை நுலகத்தில் புத்தகங்கள் படித்த படி ராணி வாரஇதழுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கின்றாள்…
மாமன் டாக்டராகி வந்து விட்டான்… ஆனால் அவன் உயரத்துக்கு அதாவது படிப்பு மற்றும் வேலையில் இல்லை என்பதால் கொஞ்சம் சிறிய தாழ்வு மனப்பான்மை.
அதில் ஒரு வரி வரும்..
இந்த பாட்டுல 3:54 இல் இருந்து பாருங்க…
உன் பவுஷுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிரிக்கியை ஏழை சிறுக்கியை எதுக்காக பிடிச்ச.?
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெளுத்து ஓடிப்போவா?
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா…
இரண்டு பேரின் மன உணர்வுகளும் வார்த்தைகளாய்…
ஐஸ்வர்யாவின் கண்ணும்… படித்த மாமன் அதுவும் டாக்டர் மாமன் தன்னை கட்டிக்கொள்வானா என்ற ஏக்கம் இருக்கும் பாருங்க…
ஐ லவ்யூ ஐஸ்
சான்சே இல்லை…
பாடல் காட்சியை படமாக்கிய விதமும் அருமை.
ரொம்ப நாள் கழிச்சி உள்ளுக்குள்ள இருந்த கிராமத்தானை தட்டி எழுப்பிய திரைப்பட பாடல் இது…..
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே, தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே, வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே, பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே, பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி, காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும் தருணம் தருணம்..!
என்ன வரிகள்... -?? ஆனால் இந்த வரிகள் எழுதிய கைகள் ஓய்வு பெற்றன...
காலையில் எழரை மணி வரைக்கும் தூக்கம்… அம்மா தண்ணி முஞ்சில ஊத்திதான் எழுப்புவா… அந்த அளவுக்கு தூக்கி தொலைப்பேன்.
எழுந்து வெப்பங்குச்சி உடைச்சி வாயில முனையை மைய வச்சி பிரஷ் போல ஆக்கி…. பச்சக் பச்சக்ன்னு எச்சி துப்பிக்கினே கொள்ளிக்கு போய் காலைக்கடன் முடிந்து, வீட்டுக்கு வந்து குளித்து, முதுகில் உள்ள தண்ணீரை துடைக்காமல் சட்டை டவுசர் போட்டு, ஏன் முதுகு தண்ணியை துடைக்காம சட்டை போட்ட என்று திட்டி அம்மாவிடம் சவுக்கு மெளாறால் அடிவாங்கி தலையில் எண்ணெய் வைத்து படிய சீவி முன் பக்கம் கொஞ்சம் மோது வைத்து கண்ணாடி முன் சிங்கார் சாந்து பொட்டு எடுத்து நெற்றிக்கு நடுவில் சின்னதாய் ஒரு டாட் வைத்து அதற்கு மேல விபூதி சின்ன கீற்றாக பூசி ….
ஹீரோயிச சண்டைகள், முக்கியமாக நாயகனின் என்ட்ரி சீன் உக்கிர வசனங்கள்.. ஐட்டம்
சாங்கில் காமிரா கோணங்கள் நடன மூவ் மென்டுகள்….
ரிச் கேர்ள்ஸ் ரிச் பாய்ஸ் பசங்கள் பத்து ரூபாய்க்கு ஆட சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு
ஆடும் ஆட்டங்கள்…, நாயகிகளின் செக்சி உடைகள், இடுப்பு வளைவுகள், பாடல் காட்சிகளில் அதீத தொப்புள் தரிசனங்கள், தமிழில் இழுத்து போர்த்து
நடித்த நடிகையா என்று மிரண்டு வியர்க்க வைக்கும்
கவர்ச்சி காட்சிகளில் அசால்ட்டாக நடிக்கும் நடிகைகள்…. தன்னை கடவுளாக பாவித்து காட்சிகளை
வைத்துக்கொள்ளும் நாயகன்… வெளிநாட்டு காட்சிகள், மேக்கிங் ஸ்டைல், பேமிலி சென்டிமென்ட், அற்புதமான பாடல்கள் என்று நான்
தெலுங்கு சினிமாவை ரசிக்க, கொண்டாட அனேக காரணங்கள் இருக்கின்றன….
நான்கு நாட்கள் பெங்களூரில் இருந்து வந்த காரணத்தால் சட்டென சென்னை இயல்பு வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை..
செம மொக்கை வாங்கினேன் என்று கூட பாலிஷாக சொல்லிக்கலாம்…
மதியம் இரண்டரைக்கு யாழினியை பள்ளியில் இருந்து நான்தான் அழைத்து சென்று டே கேரில் விட வேண்டும்..
ஓட்டலில் இரண்டரை மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆரம்பம் என்பதாலும் காலையில் இறுமுகன் ஆடியோ லான்ச் போய் விட்டு நிற்க நேரம் இல்லாமல் எடிட் செய்து வலையேற்றி உடை மாற்றி மீட்டிங் நடந்த ஓட்டலுக்கு கிளம்பி விட்டேன்….
எப்படியான படமாக இருந்தாலும் தியேட்டரில் போய் பார்த்து விடுவது வழக்கம்….
டிக்கெட் பஞ்சாயத்து பெரிய விஷயமாக போய் விட்டது..
நண்பர் ரபிக்கிடம் டிக்கெட் சொல்லிட்டேன்..… ஆனா தூக்கம் வரலை தூங்காம கண் முழுச்சி இருக்க காரணம் நாலுமணிக்கு ரோகிணி தியேட்டர்ல ஷோ….. ஒரு சினிமா ரசிகனா அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு… ஒரு மாசத்துக்கு மேல நடக்கும் கபாலி படத்துக்கான புரமோஷன்.,. அதனால் தூக்கம் வரலை… ஒரு மணிக்கு தூக்கம் கண்ணை சொழட்டுச்சி…
மூன்று நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்று சொன்னார்கள்.. ஆனால் படம் ஆரம்பித்த போது ஒரு அரை மணிநேரத்துக்கு எழுந்து எழுந்து கைதட்டி ரசித்த ரஜினி ரசிகர்கள்..
173 இணைய தளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தானு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு அவற்றை முடக்க அனுமதியும் பெற்று விட்டார்..
இத்தனை நாட்களாக எத்தனையோ சிறு முதலீட்டு படங்கள் வெளிவந்த போது அவைகள் இணையத்தில் வெளியாகி பெரும் இழப்பை சந்தித்த போது எல்லாம் அமைதியாக இருந்த தானு தற்போது அவர் படத்துக்கு மட்டும் உயர் நீதி மன்ற படி ஏறி இருப்பது எந்த விதத்தில் நியாம் என்று சக தயாரிப்பாளர்கள் பொருமி வருவது ஒரு பக்கம் இருக்கட்டும்..
அவர்கள் சொன்னது போல இணையத்தை முடக்க முடியுமா? அது சாத்தியமா? என்பது பற்றி சற்று விரிவாய் அலசி இருக்கின்றேன்.. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள்..
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.
ஐரோப்பிய யூனியனில் தொடரலாம் என்பது பிரதமரின் கருத்து… ஆனால் கூடாது என்று ஒரு கூச்சல்… சரி மக்களிடம் வாக்கெடுப்பை எடுத்து அதன் படி நடக்கலாம் என்கின்றார்கள்…
வாக்கெடுப்பு நடக்கின்றது…
52 சதவிகதிம் பேர் ஐரோப்பிய யூனியனில் தொடரவேண்டாம் என்கின்றார்கள்.
இன்றுதான் பாகுபலி ரிலிஸ் ஆன நாள்… நான் கடலுர்காரன்.. எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டை விட்டு வெளியே சென்றதே இல்லை.அவ்வளவு ஏன் கடலூர் பழைய நகரத்துக்கு கூட சென்றது இல்லை..
ஒரு சினிமாவை பார்க்கிறோம்… நல்லா இருக்கு இல்லைன்னு சொல்ல போறோம்… இது எதுக்கு ஏ சென்டர் பீ சென்டர் சி சென்டர்ன்னு பிரிக்கறிங்க.. அது தப்பு இல்லையா? அப்படி பிரிக்க நீங்க யாருன்னு என்னுடைய யூடியூப் சேனல் பின்னுட்டத்தில் நிறைய பேர் கேட்டாங்க..
இயக்குனர் சமுத்துரகனி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அப்பா திரைப்படம் நல்ல கருத்துள்ள திரைப்படம்.. மக்களுக்கு நல் போதனைகளை போதிக்கும் திரைப்படம் என்று பரவலான பேச்சு ரசிகர்களிடத்தில் இருந்து வருகின்றது…
மகிழ்ச்சி..
உண்மையில் நிறைய பிரச்சனைகளை மிக அழகாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில் ….
அப்பா படத்தில் ஒரு காட்சி எல்லாவற்றிர்க்கும் திருஷ்ட்டி போல அமைந்து விட்டது… அந்த காட்சி என்னவென்றால்..
சேலம்வினுப்பிரியாவுக்கு அன்றைய தேவை ஆதரவான வார்த்தைகளே ... பெற்றவர்களே நம்பவில்லை என்பதுதான் அந்த பெண்ணின் தற்கொலைக்கு முக்கியமான காரணம்..
பேஸ்புக்கிற்கு போகாமல் படங்களை பதியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடக்கம் ஒடுக்கமாக அந்த பெண் இருந்து இருந்தால் அந்த பெண் இறந்து போய் இருக்காது என்று பதறுபவர்களை பார்த்தால் மிரட்சியாக இருக்கின்றது..
நான் உத்தமனில்லை.. அப்படியான பிம்பம் என் மீது விழுவதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை..காரணம் குறை நிறைகளோடு மட்டுமே ஒரு மனிதன் வாழ முடியும்..
100 சதவிகித நேர்மையும் ஒழுக்கமும் வாய்ப்பே இல்லாத விஷயம். அனால் குறைந்த பட்ச நேர்மை என்னிடத்தில் உண்டு …
வேளச்சேரியில்
புழுதிவாக்கம் செல்லும் சாலையில் இரண்டு பெண்கள் வாங்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்… என் கண் எதிரில் அப்போசிட்டில் வந்த பையன் ஒரு பெண்மணியின் கழுத்தில் இருந்து அசால்டாக செயினை அறுத்துக்கொண்டு பறந்தான்.. மனைவி குழந்தையோடு இருந்த காரணத்தால்
அவனை வேகமாக விரட்ட முடியவில்லை.ஆறு பவுன் செயின் நொடிப்பொழுதில்லை அவன் கையில் கழுத்தில்
காயத்தோடு அந்த பெண்மணி பறிதவித்து போய் இருந்தார்.… போலிசில் கம்ளெயின்ட் கொடுக்க
சொன்னேன்.. இல்லைங்க வீட்டுக்கு போலிஸ் வருவதை எங்க வீட்டுக்காருக்கு பிடிக்காது… அதனால்
கம்ளெயின்ட் கொடுக்கலை.. எல்லாம் என் தலையெழுத்து வாயை கட்டி வயித்தை கட்டி சேர்த்து வச்சது என்று அழுது புரண்டார்..
திருமணத்துக்கு
பிறகு அமலாபால் ஆக்ஷன் கட் இரைச்சலில் இருந்து விலகி இருப்பார் என்று பார்த்தால்…முன்னிலும்
அதிக வேகத்துடன் களம் இறங்கி இருக்கின்றார்… சிறப்பான பாத்திரங்களை ஏற்று செய்வதோடு தன் தனித்தன்மையையும் நிருபிக்கி போராடுகின்றார்…
அதற்காகாவே அவருக்கு ஜாக்கி சினிமாஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.
சில திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி கவனம் பெறாமலே போய் விடுவதுண்டு… அப்படியான சமீபத்திய திரைப்படம் ஒரு நாள் கூத்து…
இறைவி அளவுக்கு கொண்டாடப்பட்டு இருக்க வேண்டிய திரைப்படம்.. ஆனாலும் இந்த திரைப்படம்
பெருபாண்மையான மக்களின் கவனம் பெறாமலே போய் விட்டது…
இப்ப நீ என்னை பாரு என்பதுதான் தமிழாக்கம்…அதை ஒரு மேஜிக்காரன்
சொன்னா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சி பாருங்க….
இந்த படத்தின்
முதல் பாகம்..2013 ஆம் ஆண்டு வெளியா‘கி பட்டையை
கிளப்பியது… நான்கு மேஜிக் நிபுனர்கள் ஒன்று சேர்ந்து பெரிய பண
பொக்கிஷத்தை எல்லோர் கண்களிலும் மெஜிக் செய்து அபிட் விடுகின்றார்கள் என்பதுதான்
கதை.
இறைவி திரைப்படம்
பேசியது ஆணியமா? பெண்ணியமா? என்று தெரியாது..?
ஆனால் அந்த திரைப்படத்தின் காதாபாத்திரங்கள்
முக்கியமாக பெண் காதாபாத்திரங்கள் என் மனதை கவர்ந்தன என்பேன்.
பாஸ்ட் பியூரியஸ்
படத்தில் கலக்கிய ராக் என்கின்ற Dwayne Johnson நடிப்பில் இந்த வாரம் வெளியான திரைப்படம் சென்ட்ரல் இன்டிலஜென்ஸ்.. ஆக்ஷன் காமெடி ஜானரில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம்
உலக அளவில் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகின்றது.. அதற்கு காரணம் படம் நெடுக
இழையோடும் நகைச்சுவைதான்.
நேற்று இரவு பெங்களுருவில் இருந்து நான், மனைவி, யாழினி ஆல்ட்டோ காரில் வந்துக்கொண்டு இருந்தோம் யாழினி பின்னால் தூங்கி கொண்டு இருந்தாள்.. கார் முழுவதும் பொருட்கள்… கேமரா, லைட், லேப்டாப் என்று சகலமும் இருந்தன சுருங்க சொன்னால் புல்லி லோடேட்.
2013 ஆம் ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர் திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள்
அறிவார்கள்… தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகி
மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய்
தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை
சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது…