தேசிய கீதமும் மைக் செட் பையனும்...

யாழினி பள்ளியில் சுந்திர விழா நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது…
நாம் நாடுகளில் குப்பை குளங்களை டுவிஸ்டர் ஆக்கி சில நேரங்களில் காற்று விளையாடும்…..

ஆனால் என்னோவோ தெரியவில்லை பேய் காற்று என்று சொல்லக்கூடிய அளவில் காற்று வீ‘சி தள்ளியது…
மைக் செட் போட்ட பையன் காற்றில் பறக்கும் சேர்களை எடுத்து வைப்பதுமாக இருந்தான்.. குழந்தைகள் ரைம்ஸ் பாட அவர்கள் உயரத்துக்கு மூன்று மைக் வைக்கப்பட்டு இருந்தது….

அது அவ்வப்போது பேய் காற்றில் மைக்குகள் சேர்கள் டெம்போ டிராவலரில் வரும் அம்மாவை பார்த்து நெடுஞ்சான் கிடையாக விழுந்து டயர் தொட்டு கும்மிடுவது போல விழுந்து தொலைத்தன

பிள்ளைகள் மார்ச்பாஸ்ட் நடந்தார்கள்…
அவ்வப்போது டொப் டொப் மைக்கும் சேர்களும் காற்றில் விழுந்து குழந்தைகளின் ஞாபக சக்தியை சோதித்தன.…
மைக்செட் பையன் ஓடிப்போவுதும் எடுத்து வைப்பதுமாக இருந்தான்.. காரணம் மைக் புட்டுக்கிச்சி என்றால் ஓனர் திட்டுவார்.. புழுதி மைக்குள் போய் விடாமல் இருக்க கீழே விழுந்ததை எடுத்து சூடான அல்வாவை விழுங்கும் முன் ஊதுவது போல ஊதி மைக்கை துடைத்து வைப்பதுமாக மைக் செட் பையன் சளைக்காமல் செய்துக்கொண்டு இருந்தான்.

டீச்சர்கள் தாங்கள் அணிந்து இருந்து டீஷர்டுகளின் மேலும் அது பேய் காற்றில் பறந்து மானத்தை வாங்கி விடக்கூடாது என பிள்ளைகளின் மேல் கவனமும் டீ சர்ட்டுகளின் மேல் இன்னோரு கவனமுமாக வலம் வந்தார்கள்.

பிள்ளைகள் கை கால் ஆட்டி ரைம்ஸ்களை உற்சாகமாக பாடினார்கள்….

நான் தேசிய கீதம்இசைக்கும் போது கூடுமான வரை அட்டென்ஷனில் நிற்பது வழக்கம்… எங்க வீட்டு அம்மா அதே போலத்தான்…

நான் கிளம்பலாம் என்று சொன்னேன்… யாழினி சொன்னாள்… அப்பா நேஷனல் ஆந்தம்… பாட போறங்க… நாம ரெஸ்பெக்ட் கொடுக்கலாம் என்றாள்… அதனால் அவளோடு நாங்களும் அட்டேன்ஷனில் நின்று விட்டோம்.

ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடலை ஒளிபரப்பி நிற்பது போல இல்லாமல் பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளும் கோரசாக தேசியகீதம் பாடினார்கள்.

திரும்ப பேய் காற்று வீசியது.. சாமியான பந்தல் அம்மன் கோவிலில் சாமி வந்த பெண் போல தலைவிரிக்கோலமாய் ஆடியது.
எல்லோரும் அட்டேன்ஷனில் நின்றார்கள்… மைக் செட் பையனும்…

ஒன்று சேர்ந்தார் போல மூன்று மைக்குகளும் புழுதியில் விழுந்தன…

அந்த பையன் ஒடுவான் எடுத்து வைப்பான் என்று எதிர்பார்த்தேன்…. தேசிய கீதம் முடியும் வரை அப்படியே சிலை போல நின்றான்…

ரோஜா படத்தில் அரவிந் சாமி தேசிய கொடி எரிப்பின் போது விழுந்து புரண்டு அணைத்தை விட இது நெகிழ்வாய் இருந்தது..

முக்கியமாக அரவிந்தசாமியை கம்பேர் பண்னும் போது அவன் கருப்பாய் இருந்தான்…

தன்னுடைய சுயநலத்துக்காக தமிழ்நாட்டில் அம்மா ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது தேசிய கீதத்தை இரண்டு முறை பதவியேற்ப்பின் போதும் அவமதித்தார்கள்.…

அதுவும்.. ஐனகனமன அதிநாயக ஜெயஹே பாரத பாக்யவிதாதா ஜெயஹே ஜெயஹே என்று 52 செகன்ட் பாட வேண்டிய பாடலை…. 15 செகன்டில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவர் பாடி முடித்து அவமரியாதை செய்தார் அதை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை.

இவர்களை விட படிப்பை பாதியில் விட்டு, மெத்த படிக்கா விட்டாலும் தன் குடும்பத்துக்காக மைக் செட் விழுந்தாலும் அட்டேன்ஷனில் நின்று தேசிய கீதத்துக்கு தலைவணங்கிய அந்த பையனை நான் நேசத்துடன் வணங்குகின்றேன்.

ஜாக்கிசேகர்
07/08/2016
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. ஒருவேளை அவர் சுதந்திர நாட்டில் இல்லாததுபோல் உணர்ந்திருக்கலாம். அதனாலாயே 15 வினாடியில் பாடினாரோ என்னவோ?

    ReplyDelete
  2. thorough wrong judgement man... our C.M is known for her patriotism ..........

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner