Request Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.







நான் உத்தமனில்லை.. அப்படியான பிம்பம் என் மீது விழுவதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை..காரணம் குறை நிறைகளோடு மட்டுமே ஒரு மனிதன் வாழ முடியும்..
100 சதவிகித நேர்மையும் ஒழுக்கமும் வாய்ப்பே இல்லாத விஷயம். அனால் குறைந்த பட்ச நேர்மை என்னிடத்தில் உண்டு …



போக்குவரத்து  விதிகளை நானும் மீறியதுண்டு… பகலில் ஒன்றரை நிமிடம்  இருக்கும் தரமணி சிக்னல் நடு இரவில்  அதே ஒன்றரை நிமிடம் இருக்கும் போது சிவப்பு இருக்கும் போதே வாகனங்கள் எதுவும் வரவில்லை என்றால் கிராஸ் செய்து இருக்கிறேன்..

ஆக்ஷுவலா பொதுவா  அந்த நேரத்துல மஞ்சள் விளக்கு விட்டு விட்டு எரிந்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் அந்த சந்திப்பை கடக்க வேண்டும் என்று  போக்குவரத்து போலிஸ் உணர்த்த வேண்டும் ஆனால் எதை எதிர்பார்ப்பது நம் தவறுதான்.

ஆனால்  சாலைகளில் சில விஷயங்களை நான் இன்றுவரை கடை பிடித்து வருகிறேன்..  வாகனத்தை ஓரமாக நிறுத்துவது…  வெகுதூர கார் பயணம் என்றாலும் ஒரு போதும் ரோட்டின் ஓரத்தில் அப்படியே காரை நிறுத்தியது கிடையாது…  பாதுக்காப்பான இடத்தில்தான் காரினை நிறுத்துவேன்…

இரண்டு நாட்களுக்கு முன் குரோம் பேட்டையில் இருந்து துரைபாக்கத்திற்கு  பைபாஸ் ரோட்டில் நானும் எனது மனைவியும் காரில் வந்து கொண்டு இருந்தோம்..
வேல்ஸ் காலேஜ் சிக்னலை தாண்டியதும்…
சாலையில் மீடியனுக்கு பக்கத்தில் வழக்கத்துக்கு மாற ஒரு பொருள் கிடப்பதை பார்த்தேன்…


ஏதோ  குட்டியானை  அல்லது லாரியில் இருந்தோ பிய்த்துக்கொண்டு விழுந்து இருக்க வேண்டும்.
காரை சட்டென ரிவயூவ் மிரர் பார்த்து கட் அடித்து விட்டேன்… மனைவியை அலுவலகத்தில் விட நேரமாகி விட்டது..  ஆனாலும் மனது கேட்கவில்லை பெரும் பாரத்துடன் வரும்  லாரி இருப்பின் மீது ஏறி இறங்கினால் மிகப்பெரிய விபத்தை சந்திக்க வேண்டி வரும்.
ஒரு பேருந்து அதில் மேல் ஏறினால் தன் கட்டுபாட்டை  இழுந்து மிகப்பெரிய விபத்தை சந்திக்க வேண்டிவரும்… இன்னும் சொல்லப்போனால் டுவிலரில் வருபவர்கள் கவனிக்காமல் அதன் மேல் எறினால் புரட்டி விட்டு மிகப்பெரிய விபத்தை உயிரிழப்பை சந்திக்க வேண்டிவரும்..

ஹெல்மெட்டே போட்டு இருந்தாலும்…

மனசு கேட்கவில்லை…  யோசித்து முடிப்பதற்குள் கார் 500 மீட்டரை கடந்து விட்டது..  கால் கிலோ மீட்டர் சென்று யூடேர்ன் போட்டேன்…

 திரும்ப உடனே ஒரு கட் இருக்கும் என்று பார்த்தால் திரும்ப ஒன்றரை கிலோ மீட்டர் பயணித்து வேல்ஸ் கல்லூரி  சிக்னல் வந்துதான் திரும்ப  வேண்டி இருந்தது.. அதற்குள்  யாருக்கும்  எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும் என்றும் மன மன பதபதைப்போடு போய் காரை ஓரம் நிறுத்தினேன்..

 நிறைய வாகன ஓட்டிகள்  அந்த பொருளை பார்த்து விட்டு கட் அடித்து வேகமாக    சென்று கொண்டு இருந்தார்கள்…

ஆனால் நான் அதனை எடுத்து அப்புற படுத்தினேன்… மனம் நிம்மதியானது…எனக்கு அந்த  பொருளை அப்பறப்படுத்த எடுத்துக்கொண்ட  நேரம் ஐந்து நிமிடங்கள்தான் அதில் ஒன்றும் எனக்கு பெரிய லாஸ் இல்லை ஆனால்  ஒரு பெரும் விபத்து ஏற்ப்பட காரமாண  பொருளை அப்புறப்படுத்திய திருப்தி இருந்தது…
செங்கல் ஏற்றி செல்லும் லாரிகள் வீடுகளை இடித்து அதன் இடுபாடுகளை எடுத்து செல்லும் போதும்  மர சட்டங்களை எடுத்து  செல்லும் வாகனத்தில் இருந்து இது போன்று  சாலை ஓர மீடியன்களுக்கு பக்கத்தில்  செங்கல் க  பெரிய பாறாங்கற்கள்  மர சட்டங்கள் போன்றவை விழுந்து கிடக்கும்.

தயவு செய்து அவற்றை தயவு செய்து அப்புறபடுத்துங்கள்..

நல்ல ரோட்டில் என்ன இருந்து விடபோகின்றது என்று  சின்ன அலட்சியத்தோடு வரும் வாகனங்களை இது போன்ற சின்ன பொருட்கள் அலைகழித்து விடும் வாய்ப்புள்ளது..

இது போன்ற  பொருட்களை கற்களை சாலையில் நிறைய முறை அப்புற படுத்தி இருக்கின்றேன்.. அதற்கு காரணம் இது  போன்று  சாலையில்  சென்று  கல்லில்  பைக் ஏறி புரட்டி விழுந்து செம சில்லரை  வாங்கிய அனுபவத்த்தால் இதனை எழுதுகிறேன் என்று நீங்கள்   நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல…

எங்க அம்மா என்னை சாலையில் அழைத்து செல்கையில் இது போன்று ஏதாவது  பெரிய  கற்கள் சாலையில் விழுந்து இருந்தால் ரோட்டில் இருந்து எடுத்து ஓரமாக போடுவார்கள். ஏன்மான்னு கேட்டால்?. வயதானவர்கள் இடிச்சிக்குவாங்க..  என்று பதில் சொல்வார்..

அப்பா நிறைய முறை சைக்கிளில் பிரேக் அடித்து காலால் கல்லை சாலை ஓரமாக எத்திவிட்டு சென்று இருக்கின்றார்..





ஆகையால் வாகன ஓட்டிகளே.. இரண்டு நிமிடங்கள்  இந்த அப்புறப்படுத்தும் செயலை செய்ய  பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை.. ஆகவே இது போன்று ஏதாவது  சாலையில் கிடந்தால் எந்த வேலையாக இருந்தாலும்   சில நிமிடங்கள் செலவழித்து அப்புறபடுத்துங்கள்..

அப்படி சிரமம் பார்க்காமல்  அப்புறப்படுத்தினால்

யாரோ ஒருவருடைய வீட்டில்  நீங்கள்  தெரிந்தோ தெரியாமலோ  அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை நிலைக்க செய்கின்றீர்கள் என்று அர்த்தம்..

செய்வீர்களா?

நன்றி.
ஜாக்கிசேகர்
29/06/2016




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. நீங்கள் செய்தது போலவே நாங்களும் செய்வோம்... நல்ல செயல் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. மிக நல்ல பணி....
    பாராட்டுகள்.....

    ReplyDelete
  3. Thanks ---Neela-bangalore--projectsatbangalore.com

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner