இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 2016






சுஜாதா சொன்னது போல தீபாவளி என்பது புது கைவெச்ச பனியன் போட்டுக்கொண்டு ஃபோன் பேசும் நாளாகி பலவருடங்களாகிறது என்று சொன்னதை நண்பர் ரசனை ஸ்ரீராம் நினைவு கூர்ந்து இருந்தார்…

========

அதே போலத்தான் தீபாவளிக்கு இரண்டு மாதத்துக்கு முன்னே காலாண்டரில் கவுன்ட்டவுன் ஸ்டார்ட் செய்து, மழை பெய்யக்கூடாது என்று கடவுளிடம் வேண்டி… பட்டாசுகளை தினமும் காய வைத்து எடுத்து அதனை பதுசு பச்சை மிளகாய் போல பத்திரமாய் எடுத்து வைத்து ஒரு வாரத்தில் தீபாவளி எனும் போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்..
அதை விட கொடுமை… தீபாவளிக்கு முன்னிரவில் கால் கடுக்க தையல்காரரிடம் துணி தைத்துக்கொடுக்க வேண்டி தாஜா செய்து டீ வாங்கி கொடுத்து தீபாவளியை வரவேற்போம்..
முதல் நாள் இரவில் பேசி கரைந்து… இரவு இரண்டு மணிக்கு கண் அயர்ந்தால்… மூன்று மணிக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிச்சத்தம் கேட்க ஆரம்பிக்கும்
சரியாக நாலு மணிக்கு புரண்டு படுக்கலாம் என்று திரும்பி படுத்தால் நம் வீட்டுக்கு பக்கத்தில் வைத்த வெடி தலைம்ட்டில் வெடிப்பது போல பீதி கிளப்ப…
எழுந்து எண்ணெய் தேய்த்து ஊர வைத்து கொஞ்சம் உலா வரும் போது ஐந்து மணி ஆகி இருக்கும்… அதன் பின் ஐந்து மணிக்கு வெடிக்க ஆரம்பிக்கும் வெடி சத்தம் சரியாக எழு மணிக்கு கொஞ்சம் நொண்டி அடிக்கும் அதன் பின் மீண்டும் மாலை வரை எங்காவது வெடி சத்தம் அங்கொன்றும் இங்கோன்றும் கேட்டுக்கொண்டு இருக்கும்…
அதன் பின் இரவு ஆறு மணியில் இருந்து வெடி சத்தம் காலை போல மாலையில் களைகட்ட ஆரம்பித்து இரவு பத்து மணி வரை நீடிக்கும்…
டிவின்னு ஒரு சமாச்சாரம் வந்துச்சி… முன்ன போல வெடிச்சத்தம் கேட்கவும் இல்லை.. அதே போல மக்களை வெளித்தெருவுல புது துணியில் அதிக அளவில் பார்ப்பதும் இல்லை…
சுஜாத சொன்னது போல கை வெச்ச பனியன் அளவுக்கு இன்னும் போகலை. தீபாவளி என்பது பசங்க வெடி வெடிப்பதை பார்த்து மகிழவும் அவர்களை கண்காணிக்கவும்… வீடியோ எடுக்கவும் அவர்கள் மகிழ்வை புகைப்படத்தில் சிறைபிடிப்பதாக மாறி சில வருடங்கள் ஆகின்றன.
ஜாக்கிசேகர்
31/10/2016








நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. age cannot whither her..... a famous quote of shakespeare about the beauty queen cleopatra....
    for us age always weighs on us...
    so dramatic changes occur in us bro...
    every day....every year..

    ReplyDelete
  2. இன்றுதான் பதிவு பார்க்க நேரம் கிடைத்தது...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner