நாடாடா இது --??




மாரத்தான்ல இரண்டு கிலோ  மீட்டருக்-கு   ஒருக்கா  தண்ணி  கொடுக்காம  சாகடிச்சி இருப்பானுங்க…
இப்ப செத்தது போன உடலுக்கு ஆம்புலன்ஸ் வண்டி கொடுக்காம சாகடிச்சி இருக்கானுங்க…

 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு  பொண்டாட்டி உடலை தூக்கி கிட்டு நடந்து  இருக்கான்  ஒடிசாவை  சேர்ந்த  புருசன்காரன்..
பொணம் கனம் என்னன்னு தூக்கி பார்த்தவனுங்களுக்கு தெரியும்…  உடலை  குளிப்பாட்டி  நாரு பேர் சேர்ந்து பாடைக்கு எடுத்துக்கிட்டு வந்து வைக்கறதுக்குள்ள  தாவு தீர்ந்துடும்..
காசு இருந்தாதான் இந்தியாவுல  எல்லாம்… நடக்கும்…


அவன் குடியானவன்… மனைவி காச நோய்ல  இறந்துட்டா… கைல காசு இல்லைன்னு சொல்லி இருக்கான்… இலவச ஆம்புலன்ஸ்ன்னு இருந்தாலும் டீசல் மயிறு மட்டைன்னு  காசு கொடுத்தாதான்…  இந்தியாவுல  இலவச ஆம்புலன்சே ஆனாலும்  ஸ்டார்ட் ஆவும்….
 காசு இல்லை உதவி செய்ய  யாரும் இல்லை…
ஆம்புலன்ஸ் இல்லைன்னு மருத்துவமனைல சொல்லி இருக்கான்னுங்க… போடா மயிரானுங்களான்னு  கைலியை மடிச்சிக்கட்டிக்கிட்டு  பொண்டாடிட்டி உடம்பை துணியை சுத்தி தூக்கிகிட்டு ஆண்டவன் விட்ட வழின்னு  தன் பொண்ணோட நடக்க ஆரம்பிச்சிட்டான்.

 நடுவுல பளு தாங்காம உடலை  கீழ போட்டு எடுத்து திரும்ப நடக்க… அந்த பொண்ணு தன் அம்மா உடல் கிழ விழுந்து அதை அப்பா எடுத்து நடக்கும் போது சிரமபடறதை பாத்து  அழற பாருங்க…
கொடுமையிலும் கொடுமையான காட்சி அது…
ங்கொத்தா என்ன மயித்துக்கு  தெருவுக்கு தெரு கோயில் கட்டி வச்சி   இருங்கிங்க.. பண்ணாடைங்களா?-
பத்து கீலோ மீட்டர் நடந்து இருக்கான்…. பொண்டாட்டி பொணத்தோட …

ஒருத்தனும் ஏன்னு கேட்கலை.. ?? லோக்கல் பத்திரிக்கையாளர்கள் கலெக்டருக்கு தகவல் கொடுத்து  அப்புறம் ஆம்புலன்ஸ் கொடுத்து இருக்கானுங்க..
ஒரு வாரத்துக்கு முன்ன ஒரு வீடியோ  பார்த்தேன்….
 விடியற்காலை  ஒரு டெம்போ ஒருத்தன் மேல மோதி   உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கான்… டெம்போகாரன் ஓடிட்டான்..

ஒருத்தன் வந்து பார்த்துட்டு  உதவி செய்யாம… அவன் மொபைல் போனை எடுத்துக்கிட்டு போறான்…

 நாடாட இது??

ஜாக்கிசேகர்

25/08/2016




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
VER YOURS...
 

6 comments:

  1. ithana peru vedikka parkaranungale... oruthan koda udavikku varaama...!!

    ReplyDelete
  2. பாடு பசங்க... த்தூ....

    ReplyDelete
  3. வேதனை...
    மூதேவிக செல்போன்ல வீடியோ எடுத்துக்கிட்டு இருக்குக...

    ReplyDelete
  4. கருத்து சொல்றது லேசு.எத்தன சினிமா பாக்குறோம்ஆ,யிரமாயிரமா தியேட்டர்ல கொண.ஆனா தீபாவளி,பொங்கலுக்கு கூட நல்ல சாப்பாடு சாப்பிட முடியாத பலர் இருக்காங்க.அவங்களுக்கு ஒரு வேள சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கோமா..?

    ReplyDelete
  5. கருத்து சொல்றது லேசு.எத்தன சினிமா பாக்குறோம்,ஆயிரமாயிரமா தியேட்டர்ல கொண்டுபோய் கொட்டுறோம்.ஆனா தீபாவளி,பொங்கலுக்கு கூட நல்ல சாப்பாடு சாப்பிட முடியாத பலர் இருக்காங்க.அவங்களுக்கு ஒரு வேள சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கோமா..?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner