அசத்தல் தெலுங்கு சினிமா.

ஹீரோயிச  சண்டைகள், முக்கியமாக  நாயகனின் என்ட்ரி சீன் உக்கிர வசனங்கள்.. ஐட்டம் சாங்கில் காமிரா கோணங்கள்  நடன மூவ் மென்டுகள்…. ரிச் கேர்ள்ஸ் ரிச் பாய்ஸ் பசங்கள் பத்து ரூபாய்க்கு ஆட சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு ஆடும் ஆட்டங்கள்…, நாயகிகளின் செக்சி உடைகள்,  இடுப்பு வளைவுகள்,  பாடல் காட்சிகளில்  அதீத தொப்புள் தரிசனங்கள், தமிழில் இழுத்து போர்த்து நடித்த நடிகையா என்று மிரண்டு  வியர்க்க வைக்கும் கவர்ச்சி காட்சிகளில் அசால்ட்டாக நடிக்கும் நடிகைகள்…. தன்னை கடவுளாக பாவித்து காட்சிகளை வைத்துக்கொள்ளும் நாயகன்… வெளிநாட்டு காட்சிகள், மேக்கிங் ஸ்டைல்,  பேமிலி சென்டிமென்ட்,  அற்புதமான பாடல்கள்   என்று நான் தெலுங்கு  சினிமாவை ரசிக்க, கொண்டாட  அனேக காரணங்கள்  இருக்கின்றன….


யாழினியை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு திடிர் என்று வேலைக்கு  மட்டும் போட்டு விட்டு  நானும் விட்டம்மாவும்  சாந்தம் திரையரங்கில்  ஆஹா கல்யாணம் படம் பார்த்தோம்…  அன்று நாள் முழுவதும் சந்தோஷமும்  காதலும் மனம் எங்கும் வியாபித்து இருந்தது..  பழைய நினைவுகள் காதலித்த தருனங்கள் என்று மனம் முழுவதும் குதியாட்டம் போட்டது…

அன்றைய தினத்துக்கு பிறகு இன்றுதான்…  மனம் எங்கும் காதலும் காமமும் வியாபித்து இருக்கின்றது..  அதற்கு காரணம் ஒரு தெலுங்கு திரைப்படம் செய்த மாயாஜாலம்..

எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு அற்புதமான காதல் கதையை  அதுவும் பார்தது சலித்த கதையை ,உணர்வுபூர்வமான நடிப்பாலும் அற்புதமான காட்சிகளாலும், தேர்ந்த வசனங்களாலும்  அசத்தி இருக்கின்றார்கள்…
அந்த படத்தின் பெயர் pelli choopulu
இத்தனைக்கும் பெரிய நடிகர்கள் இல்லை…
பெரிய செட் இல்லை, கவர்ச்சி காட்சிகள் மருந்துக்கும் இல்லை… ஆனாலும் படத்தின் காட்சிகள் மனம் எங்கும் வியாப்பித்துள்ளன.
 தம்பி ரமேஷ் போன் செய்தான்.. அண்ணா நல்ல தெலுங்கு படம்ன்னு சொல்றாங்க… நான் டிக்கெட் புக்  பண்ணிட்டேன். எஸ்கேப் பிளஷ்ல போட்டு இருக்காங்க வநதுடுங்க  என்றான்…

 படத்தை பார்த்து  அசந்து போய் விட்டோம்…. நானும் ரமேஷும்  சேர்ந்து பார்த்த முதல்  படம் இதுதான்…
பீல் குட் முவியை பார்ப்பவர்கள் காதலை கொண்டாடுபவர்கள்… நிச்சயம் தவறவிடாமல் பார்க்க வேண்டிய திரைப்படம் pelli choopulu
 விரிவான விமர்சனம் விரைவில்.
#pellichoopulu #telugumovie

ஜாக்கிசேகர்.

09-08-2016


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. had you seen this movie with your daughter you would not have enjoyed so much as you have now.... do you understand man...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner