பாகுபலிக்காக திருப்பதி பயணம் சில நினைவுகள்.
இன்றுதான் பாகுபலி ரிலிஸ் ஆன நாள்…  நான் கடலுர்காரன்.. எட்டாம் வகுப்பு  படிக்கும் வரை வீட்டை  விட்டு வெளியே சென்றதே இல்லை.அவ்வளவு ஏன் கடலூர் பழைய நகரத்துக்கு கூட சென்றது இல்லை..
ஆனால் சினிமா பார்க்க ஆரம்பித்த உடன் கடலுரில் எந்த தியேட்டரிலும் படம் பார்க்க பிடிக்கவே  பிடிக்காது.. டிடிஎஸ் சவுண்ட்  அறிமுகமான நேரம்.. பாண்டியில் படம்  பார்க்கவே விருப்புவேன்…
 தினமும கடலுரில் இருந்து  பாண்டிக்கு  படம் பார்க்க சென்று இருக்கின்றேன்.

பாகுபலி ரிலிஸ்,, ஜாக்கி சினிமாஸ் ஆரம்பித்த நேரம்.. சரி இந்த படத்துக்கு திருப்பதியில் ரிவியூவ்  செய்தால் என்ன என்று எண்ணம் தோன்ற  அந்த எண்ணத்துக்கு தண்ணி  ஊற்றினான் தம்பி கபிலன் என்கிற ரத்னம்..

 விடியற்காலை இரண்டு மணிக்கு கார் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்… சரி போகும் போதே இந்த பயணத்தை வீடியோவாக செய்தால் என்ன என்று தோன்ற  அதையும்  வீடியோவாக எடுக்க ஆரம்பித்தேன்..

வளசரவாக்கத்தில்  சுருதி டிவி தம்பி கபிலனையும் பிக்கப்   செய்துக்கொண்டு திருப்தி  நோக்கி  காரில் பயணிக்க ஆரம்பித்தோம்…

போகும் வழியெல்லாம் பாகுபலி படத்தை பற்றி பேசிக்கொண்டே செல்ல…. தம்பி கபிலன் மிக அழகாக படம் பிடித்தான்…

காலை   ஏழு மணிக்கு கீழ் திருப்பதி போய்  ஜெயசூர்யா தியேட்டரில் டிக்கெட் எடுத்து  படத்தை  என்ஜாய் செய்தோம்… மதியம் இரண்டு மணிக்கு எல்லாம்  வேலை முடிந்தது ரிவியூவ் செய்து முடித்தாகி விட்டது…  வெங்கியை பார்க்காமல்  சென்றால் தெய்வகுத்தம் ஆகி விடும் என்பதால் திருப்திக்கு பயணம் செய்து  தர்ம தரிசனத்தில் சென்று  வெங்கியை தரிசித்து   ஒரு மணிக்கு லட்டு  வாங்கி இரண்டு மணிக்கு திருப்பதியில் இருந்து காரில்
 மலை இறங்க ஆரம்பித்து விடியலில் சென்னை வந்தோம்…


அந்த 24 மணி நேர பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாது… சினிமாவுக்காக திருப்பதியா என்று யோசிக்கலாம்…சினிமா பார்க்க மூனாற்றில் இருந்து போடி நாயக்கனுருக்கு வந்து  தோழா படம் தம்பி வெங்கியுடன் பார்த்து விட்டு  மீண்டும் மூனாறுக்கு  அந்த மலைப்பதையில் சென்றதை பார்க்கும் போது இது  பெரிய விஷயம் இல்லை…


 சில நினைவுகள் ரம்யமானவை…
இந்த நினைவும் அப்படியானதுதான்…


நினைவு படுத்திய பேஸ்புக்கிற்கு நன்றி

ஜாக்கிசேகர்
10/07/2016

#baahubali #thiruppati
#cinema
#tamilcinema
Kabilan Krs​
 Venkatapathy Krishnamurthy​

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. இந்தப் பயணம் குறித்து ஒரு வருடம் முன்பே தனிப்பதிவாய் படித்த ஞாபகம் அண்ணா.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner