நேற்று பெசன்ட் நகர் மாதா கோவில் கோடியேற்றத்தால் சென்னை நகரம் போக்குவரத்தில் ஸ்தம்பித்து போனது… இரவு பத்து மணிக்கு மேலும் அதன்தாக்கம் சென்னை சந்து பொந்து தெருக்களில் காண முடிந்தது. மாலை வேளையில் கல்லூரி பேருந்துகளும் சென்னை மாநகர பேருந்துகளும் சூசு வந்து இடம் இல்லாமல் தவித்து விக்கித்து நிற்கும் பெண் போல தவித்து போயின…
பேருத்தே வராத சாலைகளில் எல்லாம் பேருந்துகள் தன் பயணத்தை தொடங்கி வைக்க தெருவாசிகள் ஆச்சர்யபட்டு போனார்கள்..
உள் சாலைகளில் உள்ள வளைவுகளில் ஏதாவது ஒரு போறம் போக்கு ராங் சைடில் காரில் வந்து ஒட்டு மொத்த போக்குவரத்து இயக்கத்தையும் நிறுத்தி எல்லோரையும் டென்ஷனாக்கி கொண்டு இருந்தது.
சேரும் இடத்திற்கு எத்தனை மணிக்கு சென்று சேர்வோம் என்று தெரியாமல் சென்னைவாசிகள் தவித்து போனார்கள்.
நான் ஏழு மணிக்கு தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை நோக்கி சென்று கொண்டு இருந்தேன்.. மயிலை சாய்பாபா கோவில் தாண்டி உள்ள பாலம் அருகில் ஒரு பெண் எல்லோரிடமும் லிப்ட் கேட்டுக்கொண்டு இருந்தார்.
எனக்கு முன் சென்ற மூன்று இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்துவது போல சென்று பின்பு வேகம் எடுத்தன…
ஒன்று எதற்கு வம்பு என்பதான பொது புத்தி…. இரண்டு சற்று மாநிறமாக இருந்தார்… பாப் கட் செய்து இருந்தார்.
நான் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினேன்… சார் போற வழியில டிராப் பண்ணிடுறிங்களா?
சரி என்றேன்.. ஏறிக்கொண்டார்..
எனக்கு ஆச்சர்யம் பெண்கள் லிப்ட் கேட்டு போகும் அளவுக்கு சென்னை மாறிவிட்டதா என்ன?
எங்கே போறிங்க என்றார்
நீங்க எங்க போகனும் என்றேன்…
நான் எல்டாம்ஸ் ரோடு போகனும் என்றார்…
இப் யூ டோன் மைன்ட் என்னை எல்டாம்ஸ் ரோட்டுல எறக்கி விட முடியுமா? என்றார்.
இல்லை நான் தேனாம்பேட்டை அப்பேல்லோவுக்கு அவசரமாக செல்கிறேன் விசிட்டிங் அவர் எழு மணிவரைதான் அதனால் அவசரமா செல்கிறேன். என்றேன்…
பிளிஸ் எல்டாம்ஸ் ரோட்டுல என்றார்…
சாரி எஸ்ஈடி காலேஜ் கிட்ட எறக்கி விடறேன் என்றேன்..
ஓகே என்றார்…
சில பல மேடு பள்ளங்களில் வண்டி ஏறி இறங்கி சடன் பிரேக் அடிக்கும் போது எல்லாம் ஓவரா சீன் போடாமல் இயல்பாய் இருந்தார்..
தான் ஐடியில் பணிபுரிவதாகவும் உங்கள் உதவிக்கு நன்றி என்றார்…
சாய்பாபாவை பார்க்க வந்தேன்…அவசரமா பாண்டி பஜார் போறேன்… பெசன்ட்நகர் மாதா கோவில் திருவிழாவாம்
ஆட்டோ எதுவும் கெடக்கலை..அதான் லிப்ட் கேட்டேன் என்றார்.
சென்னை இன்னும் மாறவில்லை.
ஜாக்கிசேகர்
30/08/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
full of contradictory views man
ReplyDelete